அரசியல் மேலும் பார்க்க

திமுக அமைச்சரவை

திமுக ஆட்சியின் அமைச்சர் பட்டியல் வெளியானது; யார் யாருக்கு வாய்ப்பு?

மொத்தம் 34 பேர் அமைச்சர்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதில் ஏற்கனவே முந்தைய திமுக ஆட்சியில் அமைச்சராக இருந்த 14 பேருக்கு மீண்டும் அமைச்சராகும் வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது.

Foreign aid

வெளிநாட்டு மருத்துவ உதவிகள் பெரும்பாலும் மத்திய அரசு மருத்துவமனைகளுக்கு அனுப்பப்பட்டுள்ளன

சுவாசத்தில் உதவக் கூடிய BiPAP மெசின்கள், ஆக்சிஜன் செறிவூட்டிகள் (Oxygen Concentrators), ஆக்சிஜன் சிலிண்டர்கள், பல்ஸ் ஆக்சிமீட்டர்கள், PSA ஆக்சிஜன் பிளாண்ட்கள், ரெம்டெசிவிர் மற்றும் ஃப்ளாவிபரிவிர் மருந்துகள், PPE கிட்கள், N-95 மாஸ்க்கள் உள்ளிட்ட 24 வகையான 40 லட்சம் உதவிப் பொருட்கள் ஏப்ரல் 25-ம் தேதியே வந்து சேர்ந்தன.

கொரோனா மருத்துவர்கள்

நாளை முதல் முழு லாக்டவுன் செய்யுங்கள்; மு.க.ஸ்டாலினுக்கு கோவை மருத்துவரின் உருக்கமான கடிதம்

தமிழகம் இன்னொரு குஜராத்தாக மாறாமல் இருப்பது உங்கள் கையில். தமிழத்தில் ஒரு லட்சம் MBBS டாக்டர்கள் நீங்கள் சொல்வதை செய்ய இருக்கிறோம். பல லட்சம் நர்ஸ்கள் மற்றும் இதர பணியாளர்கள் இருக்கிறார்கள். ஆணையிடுங்கள். இன்னும் ஒரு உயிர் போகாமல் இருக்க எங்கள் உயிரையும் தருவோம், உங்கள் பின்னால் அணிவகுத்து நிற்போம்.

திருமாவளவன்

முக்கியமான இலக்கை அடைந்த விடுதலை சிறுத்தைகள் கட்சி

பொதுத் தொகுதிகளில் விடுதலை சிறுத்தைகள் கட்சி வெற்றி பெறுவது இதுவே முதல் முறை. அதுவும் இந்த வெற்றியினை தனது சொந்த சின்னத்தில் நின்று பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் 2021

தமிழக சட்டமன்றத் தேர்தல்: எந்தெந்த மாவட்டத்தில் எந்தெந்த கட்சிகள் வெற்றி?

தமிழக சட்டமன்றத் தேர்தலில் எந்தெந்த மாவட்டங்களில் எந்த கூட்டணி வெற்றிகளைப் பெற்றிருக்கிறது என்பதை மாவட்ட வாரியாகப் பார்க்கலாம். Tamilnadu assembly Election Results.

சமூகம் மேலும் பார்க்க

கொரோனா மரணங்கள்

செங்கல்பட்டு, சேலம், திருப்பத்தூர் அரசு மருத்துவமனை மரணங்கள்; டெல்லியைப் போல் தமிழகம் மாறுவதற்கு முன் தடுத்திட வேண்டும்!

செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் புதன்கிழமை அன்று ஒரே நாளில் 13 பேர் உயிரிழந்த சம்பவம் தமிழ்நாட்டை அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது. அதேசமயத்தில் சேலத்தில் மருத்துவப் படுக்கைகள் கிடைக்காமல் ஆம்புலன்சிலேயே சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த 3 பேர் உயிரிழந்துள்ளனர்.

கோவை கொரோனா மரணம்

கோவை கொரோனா மரணம்: அரசு சொன்னது 13, எரிக்கப்பட்ட உடல்கள் 210 – வெளியாகும் பகீர் தகவல்

ஏப்ரல் 26 தொடங்கி மே 1-ம் தேதிக்கு இடைப்பட்ட 6 நாட்களில் கோவை மாவட்டத்தில் 13 பேர் இறந்திருப்பதாக அரசின் அதிகாரப்பூர்வ எண்ணிக்கை தெரிவிக்கிறது. ஆனால் கொரோனா விதிமுறைகளைப் பயன்படுத்தி கோவையின் மயானங்களில் எரிக்கப்பட்ட/தகனம் செய்யப்பட்ட உடல்களின் எண்ணிக்கை 210 என்ற தகவல் அதிர்ச்சியை உருவாக்கியிருக்கிறது.

பி.சுந்தரய்யா

22 வயதில் தென்னிந்தியாவில் கம்யூனிஸ்ட் கட்சியை உருவாக்கும் பணியை செய்த பி.சுந்தரய்யா

பி.சுந்தரய்யா அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு எழுதப்பட்ட சிறப்புப் பதிவு – Madras Review

கொரோனா மருத்துவர்கள்

கொரோனா அவசரம்: மருத்துவர்கள், செவிலியர்கள் பற்றாக்குறையில் உழலும் தமிழக மருத்துவமனைகள்

தொடர்ந்து அதிகரித்து வரும் கொரோனா தொற்றினால் சென்னையில் மருத்துவர்கள் மற்றும் செவிலியர் பற்றாக்குறை மிகப் பெரிய அளவில் எழுந்துள்ளது. ஏற்கனவே மருத்துவர்களும், செவிலியர்களும் கடந்த சில ஆண்டுகளாகவே எண்ணிக்கையை அதிகப்படுத்தக் கோரி போராட்டங்களை நடத்தி வருகிறார்கள். அந்த போராட்டங்களின் கோரிக்கைகளை செவிமடுக்காததன் விளைவை தற்போதும் சென்னையும், மொத்த தமிழ்நாடும் சந்தித்து வருகிறது.

பொருளாதாரம் மேலும் பார்க்க

கொரோனா தடுப்பூசி

தடுப்பூசி தயாரிப்பிலும் புறக்கணிக்கப்படும் பொதுத்துறை நிறுவனங்கள்

கொரோனா பெருந்தோற்றுக்கான தடுப்பூசி தயாரிப்புக்கென்று ஒன்றிய அரசின் 2021-22ம் ஆண்டு நிதிநிலை அறிக்கையில் 35,000 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது. இதிலிருந்து 4517 கோடி ரூபாயை இரண்டு தனியார் நிறுவனங்களுக்கு முன்பணமாக மோடி அரசு கொடுத்துள்ளது. ஆனால் செங்கல்பட்டில் உள்ள அரசு தடுப்பூசி நிறுவனத்திற்கு நிதி ஒதுக்கப்படவில்லை.

அதானி மற்றும் மோடி

2021-ல் உலகத்திலேயே அதிக சொத்து சேர்த்த நபர் அதானி; எல்லா புகழும் மோடிக்கே!

கடந்த ஒரு ஆண்டில் மட்டும் அதானியின் சொத்து மதிப்பானது 16.2 பில்லியன் டாலர் அளவுக்கு உயர்ந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது இந்திய ரூபாயின் மதிப்பில் 1.18 லட்சம் கோடி ரூபாய் மதிப்பு ஒரு ஆண்டில் உயர்ந்திருக்கிறது.

நூல் வெளியீடு: இந்தியாவின் உணவுச் சங்கிலியை அறுக்கும் விவசாய சட்டங்கள்

விவசாய சட்டங்களால் தங்களுடைய நிலங்கள் பறிக்கப்படும் என்று டெல்லியில் போராடும் விவசாயிகள் சொல்லி வருவது அறியாமையினால் அல்ல. அவர்கள் அப்படி சொல்வதற்கான வலுவான பின்புலங்கள் இருப்பதனை இந்நூல் தீர்க்கமாக விளக்குகிறது.

விவசாயிகள் போராட்டம் ஜியோ

விவசாயிகள் போராட்டத்திற்குப் பிறகு 20 லட்சம் வாடிக்கையாளர்களை இழந்துள்ள ஜியோ நிறுவனம்

பஞ்சாப் மற்றும் ஹரியானா ஆகிய இரண்டு மாநிலங்களில் மட்டும் 20 லட்சம் வாடிக்கையாளர்களை ஜியோ நிறுவனம் இழந்திருப்பதாக TRAI வெளியிட்ட சமீபத்திய தரவுகளிலிருந்து தெரியவந்துள்ளது.

சர்வதேசம் மேலும் பார்க்க

ஆர்மீனியா இனப்படுகொலை

ஆர்மீனிய இனப்படுகொலை- நூற்றாண்டைக் கடந்து அங்கீகரிக்கப்படுகிறது!

கடந்த சனிக்கிழமை (24/04/2021) அன்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வெளியிட்ட அறிவிப்பு வரலாற்றில் மிக முக்கிய இடத்தைப் பிடித்திருக்கிறது. அந்த அறிக்கையில் ஒட்டோமான் (Ottoman) பேரரசால் 1915-ம் ஆண்டு 1.5 மில்லியன் ஆர்மீனியர்கள் படுகொலை செய்யப்பட்டதை ‘இனப்படுகொலை’ என்று அமெரிக்கா அங்கீகரிக்கிறது என்று தெரிவித்தார்.

ஜார்ஜ் ஃப்ளாய்ட்

உலகை உலுக்கிய ஜார்ஜ் ஃப்ளாய்ட் கொலை வழக்கில் தீர்ப்பு வெளிவந்தது!

அமெரிக்காவில் கருப்பினத்தைச் சேர்ந்த ஜார்ஜ் ஃப்ளாய்ட் கொலை செய்யப்பட்ட வழக்கில் காவல்துறை அதிகாரி டெரெக் சாவின் குற்றவாளியாக நீதிமன்றத்தில் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

அதானி மியான்மர்

மியான்மர் ராணுவத்தின் கொலைகளுக்கு துணைபோவதாக அதானி குழுமத்தின் மீது நடவடிக்கை

இந்தியாவின் அதானி குழுமம் மியான்மர் ராணுவக் கட்டுப்பாட்டில் உள்ள நிறுவனங்களுக்கு 30 மில்லியன் டாலர் பணம் செலுத்திய செய்தி கசிந்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மியான்மர் நாட்டின் யாங்கோன் நகரத்தில் ஒரு துறைமுகம் அமைப்பதற்காக அதானி குழுமம் அந்த நாட்டின் இராணுவக் கட்டுப்பாட்டில் உள்ள மியான்மர் பொருளாதாரக் கார்ப்பரேசனுடன் ஒரு நில குத்தகை ஒப்பந்தம் போட்டுள்ளது.

ராயப்பு ஜோசப்

தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் மன்னார் ஆயர் இராயப்பு ஜோசப் அவர்களின் மறக்க முடியா தடங்கள்!

இலங்கை அரசினால் ஈழத்தில் இறுதிப் போரின் போது கொல்லப்பட்டும், காணாமலும் ஆக்கப்பட்ட தமிழர்களின் எண்ணிக்கை 1,46,679 என்ற மிக முக்கியமான ஆவணத்தை வெளியிட்ட மன்னார் மறைமாவட்ட முன்னாள் ஆயர் இராயப்பு ஜோசப் அவர்கள் உடல்நலக் குறைவால் இன்று (01-04-2021) உயிரிழந்தார்.

சூயஸ்

சூயஸ் கால்வாயை மூடியிருந்த கப்பலை நகர்த்தியது எப்படி?

ஒரு வார காலமாக சூயஸ் கால்வாயில் மாட்டிக் கொண்டு கால்வாயை அடைத்துக் கொண்டிருந்த கப்பலை எப்படி நகர்த்தினார்கள் என்பதைப் பார்ப்போம்.

சூயஸ் கால்வாய் கப்பல்

சூயஸ் கால்வாயை அடைத்து நிற்கும் கப்பல்; உலகின் கவனம் இப்போது ஒற்றை கால்வாயை நோக்கி!

உலகத்தின் மிக முக்கிய கடல்வழி வணிகப் பாதையான சூயஸ் கால்வாயில் ’எவர் கிவன் (Ever Given)’ எனும் மிகப் பெரிய ராட்சதக் கப்பல் நேற்றிலிருந்து அடைத்து நிற்பதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக சூயஸ் கால்வாய் பகுதியில் கப்பல் போக்குவரத்து முற்றிலும் நின்று போயுள்ளது. இந்த அடைப்பினால் ஒரு மணிநேரத்திற்கு 400 மில்லியன் டாலர் வரையில் இழப்பு ஏற்படுவதாகக் கணிக்கப்பட்டுள்ளது.

மோடி ராஜபக்சே

இலங்கை மீதான ஐ.நா தீர்மானமும், இந்தியாவின் இலங்கை ஆதரவு நிலையும்

ஐ.நா மனித உரிமைகள் ஆணையத்தில் இலங்கை அரசு குறித்தான தீர்மானம் நேற்று வாக்கெடுப்பிற்கு வைக்கப்பட்டது. இந்திய அரசு தீர்மானத்தினை ஆதரிக்காமல் வாக்கெடுப்பில் பங்கேற்காமல் தவிர்த்தது தமிழ்நாட்டில் பெரும் அதிருப்தியை உருவாக்கியுள்ளது. எதிர்க்கட்சிகள் அனைத்தும் பாஜகவிற்கு கடுமையான கண்டனங்களை தெரிவித்து வருகிறார்கள்.

மக்கள் மகிழ்ச்சியாக வாழக்கூடிய நாடுகளின் தரவரிசையில் 139வது இடத்தில் இந்தியா

149 நாடுகளுக்கான ஆய்வில் இந்தியா 139-வது இடத்தையே பிடித்திருக்கிறது. அதிகமான மக்கள் மகிழ்ச்சியின்றி கவலையில் வசிக்கிற நாடுகளில் ஒன்றாக இந்தியா அடையாளம் காணப்பட்டுள்ளது.

சூழலியல் மேலும் பார்க்க

அணுக்கழிவு

தாழப் பறந்திடும் மேகம் -2 (பாகம் 2) அணுக்கழிவு – ஆயிரமாயிரம் ஆண்டுகாலம் நிலைத்துநிற்கும் ஆபத்து.

ஆயிரமாயிரம் ஆண்டுகாலம் நிலைத்துநிற்கும் ஆபத்து. (பாகம் 2) (செர்னோபில் அணுவிபத்தின் 35வது நினைவுதினம் ஏப்ரல் 26,2021)

தார் பாலைவனத்தின் முக்கியமான உயிர்ச்சூழலை வெளிக்காட்டும் புகைப்படங்கள்

தார் பாலைவனம் என்றவுடன் நமக்கெல்லாம் வெறும் மணல் நிரம்பிய, தண்ணீருக்கு திண்டாடக்கூடிய பரப்பு என்பதாகத்தான் நம் நினைவிற்கு வரும். ஆனால் தார் பாலைவனத்தில் நிறைந்திருக்கும் தாவர வகைகளையும், விலங்கினங்களையும் மையப்படுத்திய உயிர்ச்சூழலை ஒரு புத்தகமாக ஆவணப்படுத்தி இருக்கிறார் இந்திய வனத்துறை அதிகாரி கோபிந்த் சாகர் பரத்வாஜ். அந்த புத்தகம் The National Park: A Jewel in vibrant Thar என்ற பெயரில் வெளிவந்துள்ளது.

வேம்பின் உரிமையை மீட்டெடுத்த போராளி

பிறந்த நாள் சிறப்பு  பதிவு தமிழ்நாட்டின் இயற்கை வேளாண்மையின் முன்னோடியான ஐயா நம்மாழ்வார் அவர்கள் தஞ்சாவூர் மாவட்டம் திருக்காட்டுப்பள்ளிக்கு அருகேயுள்ள இளங்காடு என்னும் கிராமத்தில்  06 ஏப்ரல் 1938 ஆம் ஆண்டு பிறந்தார்.  இவரின்…

அறிவியல் மேலும் பார்க்க

சீனா ராக்கெட்

பூமியில் மோதப்போகும் சீன ராக்கெட். ஆபத்துகள் ஏற்படுமா?

இப்போது ​​அது ஒவ்வொரு 90 நிமிடங்களுக்கும் ஒருமுறை சுமார் 17,324 மைல் வேகத்தில் பூமியை சுற்றி வருவதால் அது எங்கு தரையிறங்கும் என்று தெளிவாக அறிய முடியவில்லை. அது வளிமண்டலத்தின் வழியாக உயர்ந்தும், தாழ்ந்தும் மெதுவாக அதன் உயரத்தைக் குறைத்து வருகிறது.

2018 la விண்கல்

பூமியில் மோதுவதற்கு முன் 23 மில்லியன் ஆண்டுகள் பயணித்த விண்கல் – அது எங்கிருந்து பூமியை வந்தடைந்தது என்பதைக் கண்டறிந்த விஞ்ஞானிகள்

ஜூன் 2, 2018 அன்று தென்னாப்பிரிக்க நாடுகளில் ஒன்றான போட்ஸ்வானாவில் (Botswana) இருக்கும் மத்திய கலாஹரி வனவிலங்கு சரணாலயத்தின் (Central Kalahari Game Reserve) வான்வெளியில் விண் எரிகற்கள் மத்தாப்பு போல் சிதறி வான வேடிக்கையை நிகழ்த்தின. மொத்தம் 23 விண்எரிகற்கள் அதன் நிலப்பகுதியில் எரிந்து விழுந்தன.

கொரோனா வாசனை இழப்பு

கொரோனாவில் இழந்த வாசனையை உணரும் திறனை மீட்டெடுப்பது எப்படி?

கொரோனா வைரஸ் மூக்கின் பின்புறத்தில் உள்ள நாசியின் ஆதரவு செல்களைத் தாக்குவதால் சிலருக்கு வாசனை உணர்வை இழக்கும் நிலை ஏற்படுகிறது. அவர்கள் “நறுமணங்களை முகரும் பயிற்சி”யை தொடர்ந்து மேற்கொள்வதன் மூலம் இழந்த நுகர்வு திறனை மீட்டெடுக்கலாம் என ஆய்வில் தெரிய வந்திருக்கிறது.