ஆய்வாளரும், எழுத்தாளரும், பதிப்பாளருமான வே.மு.பொதியவெற்பன் அவர்களின் தமிழியல் ஆய்வுகள் குறித்த தொடர் இணையவழி திறனாய்வு கருத்தரங்கங்களை அறிவுப் பகிர்வு வலையொளி மற்றும் புதுச்சேரி ஐம்புலம் இலக்கியப் பேராயம் இணைந்து நடத்துகிறது. இந்த தொடர் திறனாய்வு கருத்தரங்கங்கள் மே 7-ம் தேதி துவங்கி மே 17-ம் தேதி வரை தினந்தோறும் மாலை 7 மணி முதல் 8 மணி வரை நடைபெற இருக்கிறது. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நாளும் ஒரு ஆளுமை பொதியவெற்பன் அவர்களின் ஆய்வுகள் குறித்து ஒவ்வொரு தலைப்பில் உரையாற்றுகின்றனர். முனைவர் இரா.கந்தசாமி மற்றும் முனைவர் இரா.சுரேஷ் ஆகியோர் நிகழ்வுகளை ஒருங்கிணைக்கின்றனர்.
கூகுள் மீட் செயலியின் வழியே நடைபெறும் இந்த திறனாய்வு கருத்தரங்கில் பங்கேற்க கீழ்காணும் இணைப்பை பயன்படுத்தவும்.
https://meet.google.com/wok-jshx-vxk
நிகழ்ச்சி நிரல் பின்வருமாறு:
தேதி | உரையாளர் | தலைப்பு |
மே 07 | துரை.மடங்கன் | திராவிட இயக்க ஆய்வு |
மே 08 | வீ.அரசு | தமிழ் நவீனத்துவமும் புதுமைப்பித்தன், பிரமிள் குறித்த உரையாடலும் |
மே 09 | இரா.விஜயன் | தமிழர் மெய்யியல் ஆய்வுகள் |
மே 10 | புதிய மாதவி | பொதிகைச் சித்தரின் பெண்ணிய நோக்கும், பெண்ணிய நோக்கில் பொதிகைச் சித்தரும் |
மே 11 | இளங்கோ கிருஷ்ணன் | தமிழ் நவீனத்துவமும் புனைகதை ஆய்வுகளும் |
மே 12 | பிரவீன் பஃறுளி | கவிதை விமர்சனம் |
மே 13 | இரா.கந்தசாமி | ஆய்வு முறையியல் |
மே 14 | ஜமாலன் | பாசிச இலக்கிய எதிர்ப்பரசியல் |
மே 15 | மனோ.மோகன் | பறை – தொகை நூல்கள் |
மே 16 | கால சுப்ரமணியம் | பிரமிளும் பொதியவெற்பனும் |
மே 17 | சசிகலா | இணையப் பதிவுகள் |