சுற்றுச்சூழல் தேர்தல் அறிக்கை

சுற்றுச்சூழலைப் பாதுகாக்க ஒரு தேர்தல் அறிக்கை; பூவுலகின் நண்பர்கள் தயாரித்த தேர்தல் அறிக்கை ஒரு பார்வை

தமிழக தேர்தல் களத்தில் ஒரு புதுமையான செயலை பூவுலகின் நண்பர்கள் அமைப்பு இந்த தேர்தலில் துவங்கி வைத்துள்ளது. தமிழகத்தின் சூழலியல் பாதுகாப்பை கருத்தில் கொண்டு நிலைத்த வளர்ச்சியை நோக்கிய திட்டமிடலுக்கு ஏற்றார்போல கட்சிகளின் தேர்தல் அறிக்கைகள் அமைய வேண்டும் என்பதை வலியுறுத்தியும், ஆட்சியைக் கைப்பற்றக் கூடிய அரசு சூழலியல் பாதுகாப்பு நடவடிக்கைகளில் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பதை வலியுறுத்தியும் சுற்றுச்சூழல் தேர்தல் அறிக்கை 2021 என்பதை வெளியிட்டுள்ளது.

மேலும் பார்க்க சுற்றுச்சூழலைப் பாதுகாக்க ஒரு தேர்தல் அறிக்கை; பூவுலகின் நண்பர்கள் தயாரித்த தேர்தல் அறிக்கை ஒரு பார்வை
அண்டார்டிகா

சூடாகும் சமுத்திரங்கள்; அண்டார்டிகாவில் தொடரும் பனிப்பாறை பிளவுகள்

ஏறத்தாழ 1,270 சதுர கிலோமீட்டர் அளவில் அண்டார்டிகாவின் பிரண்ட் (Brunt Ice Shelf) பகுதியில் பிளவு ஏற்பட்டிருக்கிறது. (நம் புரிதலுக்காக சொல்வதானால் 1,684 சதுரகிலோமீட்டர் பரப்பளவு கொண்ட கன்னியாகுமரி மாவட்டம் அளவிலான பரப்பளவு கொண்ட பனிப்பாறை பிளவுபட்டிருக்கிறது.)

மேலும் பார்க்க சூடாகும் சமுத்திரங்கள்; அண்டார்டிகாவில் தொடரும் பனிப்பாறை பிளவுகள்
நன்னீர் மீனினங்கள்

புரதக் குறைபாட்டிற்கு வழிகோலும் நன்னீர் மீனினங்களின் அழிவு

நன்னீரில் வளரும் மீன்களே ஆசியா மற்றும் தென் அமெரிக்கா நிலப்பகுதியில் வசிக்கும் 200 மில்லியன் மக்களுக்கு புரோட்டீன் சத்திற்கான முதன்மை காரணியாக விளங்குகிறது. மேலும் மேற்குறிப்பிட்ட நிலப்பகுதியில் வாழும் 60 மில்லியன் மக்களுக்கு நன்னீர் மீன்கள் மூலம் சிறந்த வேலைவாய்ப்பும் கிடைக்கிறது.

மேலும் பார்க்க புரதக் குறைபாட்டிற்கு வழிகோலும் நன்னீர் மீனினங்களின் அழிவு

நமது கழிவுகளில் மூச்சுத்திணறும் உயிரினங்கள் – புகைப்படத் தொகுப்பு

நமது அக்கறையின்மையையும், அரசாங்கத்தின் திட்டமிடல் முறையாக இல்லாததாலும் வன உயிரினங்கள் யானைகளும், குரங்குகளும், குள்ளநரிகளும், பறவைகளும் இதர வன உயிரிகளும் பிளாஸ்டிக்கை உண்டு மூச்சுத்திணறும் நிலைக்கு தள்ளப்பட்டிருப்பதை இந்த புகைப்படத் தொகுப்பு நம் கண் முன்னே கொண்டுவந்து, நம் குற்றத்தினை முகத்தில் அறைந்து சொல்கிறது.

மேலும் பார்க்க நமது கழிவுகளில் மூச்சுத்திணறும் உயிரினங்கள் – புகைப்படத் தொகுப்பு
சென்னை - பெங்களூர் நெடுஞ்சாலை

17,000 மரங்களை காவு வாங்கப் போகும் சென்னை பெங்களூர் அதிவேக சாலை திட்டம்

சென்னை பெங்களுருக்கு இடையில் 262 கி.மீ-க்கு இந்த சாலை அமைக்கப்பட உள்ளது. சென்னை, ஸ்ரீபெரும்புதூரில் துவங்கி அரக்கோணம், குடியாத்தம், பலம்னேர் (ஆந்திரா), வி.கோட்டா, மாலூர் வழியாக பெங்களூர் எல்லைப்பகுதியான ஒசக்கோட்டை வரை இந்த விரைவு நெடுஞ்சாலை அமைக்கப்பட உள்ளது.

மேலும் பார்க்க 17,000 மரங்களை காவு வாங்கப் போகும் சென்னை பெங்களூர் அதிவேக சாலை திட்டம்
சுறா குஞ்சுகள்

கடல் வெப்பநிலை அதிகரிப்பால் முதிர்ச்சியடையும் முன்பே முட்டைகளிலிருந்து வெளியேறும் சுறா குஞ்சுகள்

அதிகரித்துவரும் வெப்பநிலை காரணமாக ஏற்படும் பல்வேறு பாதிப்புகளில் தற்போது புதியதாக ஒரு சிக்கலையும் ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். இதன் காரணமாக சுறாக்கள் வலுவிழப்பதோடு, கடல் பரப்பில் ஆரோக்கியமாக வேட்டையாடி சமநிலையை நிலைநாட்ட சுறாக்கள் தடுமாறி வருவதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும் பார்க்க கடல் வெப்பநிலை அதிகரிப்பால் முதிர்ச்சியடையும் முன்பே முட்டைகளிலிருந்து வெளியேறும் சுறா குஞ்சுகள்

காலநிலை மாற்றத்தால் 2020ம் ஆண்டில் ஏற்பட்ட 12 மிகப்பெரிய பாதிப்புகள்.

1993 ம் ஆண்டிலிருந்தே உலக வானிலை ஆய்வு நிறுவனம் “கடந்த ஆண்டின் உலகளாவிய காலமாற்றத்தின் நிலை” என்னும் அறிக்கையை வெளியிட்டு வருகிறது. அவ்வாறு 2020 ம் ஆண்டிற்கான வரைவு வெளியிட்டது. அந்த அறிக்கையின் படி அதிகபட்ச வெப்பநிலை கொண்ட ஆண்டுகளின் வரிசையில் 2020 ம் ஆண்டும் தன்னை இணைத்துக்கொண்டது. இதுவரை பதிவு செய்யப்பட்ட ‘மூன்று அதிகபட்ச வெப்ப நிலை நிலவிய ஆண்டு’களில் 2020 ம் ஆண்டும் ஒன்றாகும்.

மேலும் பார்க்க காலநிலை மாற்றத்தால் 2020ம் ஆண்டில் ஏற்பட்ட 12 மிகப்பெரிய பாதிப்புகள்.
வெப்பநிலை உயர்வு

2006-க்குப் பிறகு கடந்த 100 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு அதிகரிக்கும் இந்திய வெப்பநிலை

1901-ம் ஆண்டிலிருந்து கணக்கிடுகையில் எட்டாவது வெப்பமான ஆண்டாக 2020-ம் ஆண்டானது பட்டியலில் தற்போது புதியதாக சேர்க்கப்பட்டு உள்ளதாக அறிக்கை தெரிவித்துள்ளது. இந்த பட்டியலில் 2016-ம் ஆண்டுதான் முதல் இடத்தில் இருக்கிறது.

மேலும் பார்க்க 2006-க்குப் பிறகு கடந்த 100 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு அதிகரிக்கும் இந்திய வெப்பநிலை
பறவை காய்ச்சல்

கவனம் மக்களே! இந்தியாவில் பறவை காய்ச்சல் மெல்ல பரவுகிறது

பறவை காய்ச்சல் நோயாளிகளின் இறப்பு விகிதம் கொரோனாவை விட 20 மடங்கு அதிகம். ஒரு நபருக்கு பறவை காய்ச்சல் தொற்றுக்குப் பிறகே அதன் அறிகுறிகளானது 2 முதல் 8 நாட்களுக்குள் வெளிப்பட தொடங்குகின்றன.

மேலும் பார்க்க கவனம் மக்களே! இந்தியாவில் பறவை காய்ச்சல் மெல்ல பரவுகிறது
கோவா

கோவா விடுதலை நாளில் காட்டை அழித்து சாலைகள் மற்றும் மின் கோபுரங்கள் அமைக்கும் திட்டங்களை எதிர்த்து மாணவர்கள் போராட்டம்

இந்த ஆண்டு சுற்றுச்சூழல் அமைச்சகத்தால் லாக் டவுன் காலத்தில் கிட்டத்தட்ட 30-க்கும் மேற்பட்ட திட்டங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது. இதில் மொல்லெம் பகுதியின் வழியாக 3 திட்டங்களை மேற்கொள்ள அனுமதி அளித்ததைத் தொடர்ந்து இந்த நாசகார திட்டங்களை எதிர்க்க ‘சேவ் மொல்லெம்’ எனும் பெயரில் ஒரு இயக்கம் தொடங்கப்பட்டு கோவா மக்கள் எதிர்த்து வந்தனர்.

மேலும் பார்க்க கோவா விடுதலை நாளில் காட்டை அழித்து சாலைகள் மற்றும் மின் கோபுரங்கள் அமைக்கும் திட்டங்களை எதிர்த்து மாணவர்கள் போராட்டம்