Ford India கார் நிறுவனம் இந்தியாவில் சென்னை மறைமலைநகரிலும், குஜராத்திலும் இரண்டு Plantகளை இயக்கி வந்தது. இந்தியா முழுதும் நிரந்தரப் பணியாளர்களாக மட்டும் 10000 பேர் உள்ளனர். அதில் தமிழ்நாட்டில் 4000 பேர். மேலும் ஒப்பந்தப் பணியாளர்கள் மற்றும் மறைமுக வேலைவாய்ப்பைப் பெறுபவர்கள் என்று 40000க்கும் மேற்பட்டோரின் வாழ்வாதாரம் தமிழ்நாட்டில் இந்த நிறுவனத்தைச் சார்ந்து உள்ளது. இந்த நிலையில் இந்த நிறுவனம் மூடப்படுவதாக அறிவித்துள்ளது 40000 பேரின் வாழ்வாதாரத்தினை கேள்விக்குள்ளாக்கி உள்ளது.
மேலும் பார்க்க Ford கம்பெனி மூடப்படுவதற்கு என்ன காரணம்? யார் காரணம்?