பெண்கள் தொடர்பான ஜியார்ஜின் படங்களை இரு விதங்களில் பிரித்துக் கொள்ளலாம். ஓன்று, குடும்பம் எனும் அமைப்பின் அதிகாரச் சமநிலையின்மையையும் வன்முறையையும் சகிக்க முடியாமல் அதனுள் பெண்கள் மூச்சுவிடமுடியாமல் கலகம் செய்கிறார்கள். அந்தக் கலகம் மணமீறல் உறவுகளாக, மனப்பிறழ்வுகளாக, வெளியேறுதலாக முடிகிறது. இரண்டு, பெண்கள் சமூக வாழ்வில் ஈடுபடுகிறபோது அவர்கள் மீதான வன்முறையை அவர்கள் எதிர்வில் கொலைகளாக, தற்கொலைகளாக, குற்றச்செயல்கள் எனச் சமூகம் கருதுவதற்குள் வீழ்கிறார்கள். இந்தப் போக்கில் பெண்களை மதிப்பீட்டுக்குள் வீழ்த்திவிடாமல் அவர்களின் மீதான பரிவை ஜியார்ஜின் படங்கள் கோருகின்றன.
மேலும் பார்க்க எனது எல்லாப் படங்களும் அரசியல் படங்கள்தான் : கே.ஜி.ஜியார்ஜின் வாழ்வும் படைப்புலகும் – யமுனா ராஜேந்திரன்Month: September 2023
சமகாலத்தில் சாதியை அர்த்தப்படுத்துதல் – மு.அப்துல்லா
சாதி சார்ந்து எந்த பாதிப்புக்கும் ஆளாகாதவரோ அல்லது சாதியை முற்றும் ஒழித்த பரிபூரண சமூகத்தில் வாழ்கின்றவரோ யாரேனும் உண்டா?… அப்படி இருக்கிறார்கள் என்று சொன்னால், அவர்கள் சாதியினால் துன்பத்திற்கு ஆட்பட்டிருக்க முடியாது. ஆனால், அதன் சலுகைகளை (Privilage) அனுபவித்தவர்களாக இருப்பார்கள்.
மேலும் பார்க்க சமகாலத்தில் சாதியை அர்த்தப்படுத்துதல் – மு.அப்துல்லாசோசலிச அனுபவங்கள்: மார்க்ஸ் முதல் அம்பேத்கர் வரை – யமுனா ராஜேந்திரன்
இன்றைய நிலையில், வர்க்கத்துக்கு இணையானது சாதி, இந்துமதம்-சாதி- பார்ப்பனியம்-இந்திய அதிகார அமைப்பு என்கிற அம்பேத்கரது வலியுறுத்தலை ஏற்று அம்பேத்கரை மார்க்சியர்கள் தமது அனைத்தும் தழுவிய முழுமையான கம்யூனிசத் திட்டத்தினுள் ஏற்க முடியும். உண்மையில் இந்திய சோசலிசம் நோக்கிய மார்க்சிய வழியில் இருக்கிற தடைக்கற்களைத் தான் (Hindrance) அம்பேத்ரும் பெரியாரும் அக்கறையுடன் சுட்டிக் காட்டியிருக்கிறார்கள்.
மேலும் பார்க்க சோசலிச அனுபவங்கள்: மார்க்ஸ் முதல் அம்பேத்கர் வரை – யமுனா ராஜேந்திரன்