ஒரு தேர்தலுக்கு 20 ஆயிரம் கோடிகளுக்கு மேல் செலவு செய்யும் இடத்தில், மக்களின் சமூக நேரத்தை இவ்வளவு ஆக்கிரமிக்கும் சமூக ஊடகங்களின் மூலமாக மக்களைக் கைப்பற்றுவதற்காக எவ்வளவு ஆயிரம் கோடிகளை வேண்டுமானாலும் செலவு செய்வார்கள். இதற்குள்ளாகத்தான் ஃபேக் நியூஸ் பேக்டரிகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. நேர்மையாளர்கள், ஊடகவியலாளர்கள், அரசியல் பார்வையாளர்கள் விலைக்கு வாங்கப்படுகிறார்கள். ஃபேக் நியூஸ் ஃபேக்டரியின் அடுத்த பரிணாமமாக ஃபேக் சிட்டிசன் வரைக்கும் வந்து விட்டார்கள்.
மேலும் பார்க்க சமூக ஊடகங்களில் நடக்கும் தகவல் யுத்தம்; நாம் தெரிந்து கொள்ள வேண்டியது என்ன?