சீக்கியர் போராட்டம்

சீக்கிய சந்த்மரபின் மீரிபீரிக் கோட்பாட்டுப் புதுவெளிச்சத்துக்கு ஊடான நோக்கில் வீறுமிக்கப் பஞ்சாபி வேளாண் உழுகுடிப் போராட்டம் – வே.மு.பொதியவெற்பன்

வரலாறு காணா உழவுக்குடிப் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர் சீக்கிய வேளாண் போராளிகள். இத்தருணத்தில் தமிழ்மரபுக்கும் அவர்கள் மரபுக்கும் இடையிலிலான மெய்யியல் நோக்கின் ஒப்புமைகள் குறித்த புரிந்துணர்வை வலியுறுத்துமுகமாக இப்பதிவே!

மேலும் பார்க்க சீக்கிய சந்த்மரபின் மீரிபீரிக் கோட்பாட்டுப் புதுவெளிச்சத்துக்கு ஊடான நோக்கில் வீறுமிக்கப் பஞ்சாபி வேளாண் உழுகுடிப் போராட்டம் – வே.மு.பொதியவெற்பன்
பஞ்சாப் விளையாட்டு வீரர்கள்

விவசாயிகளுக்கு ஆதரவாக விருதுகளை திருப்பிக் கொடுக்கும் பஞ்சாப் விளையாட்டு வீரர்கள்

டிசம்பர் 5-ம் தேதி டெல்லிக்குச் சென்று தங்களது விருதுகளை ராஷ்டிரபதி பவனுக்கு வெளியே வைக்கப் போவதாகக் கூறியுள்ளனர்.

மேலும் பார்க்க விவசாயிகளுக்கு ஆதரவாக விருதுகளை திருப்பிக் கொடுக்கும் பஞ்சாப் விளையாட்டு வீரர்கள்
புலம்பெயர் தொழிலாளர்கள் மேற்கு வங்கம்

மேற்குவங்க தேர்தலில் பாஜகவின் ஒற்றை நம்பிக்கையாக இந்தி பேசும் புலம்பெயர் தொழிலாளர்கள்

2021 மேற்கு வங்க சட்டமன்றத் தேர்தலில் பாஜக-வின் ஒற்றை நம்பிக்கையாக இந்தி பேசும் புலம்பெயர் தொழிலாளர்கள் விளங்குகிறார்கள்.

மேலும் பார்க்க மேற்குவங்க தேர்தலில் பாஜகவின் ஒற்றை நம்பிக்கையாக இந்தி பேசும் புலம்பெயர் தொழிலாளர்கள்

காலை செய்தித் தொகுப்பு: PM CARE பணம் எங்கே, விவசாயிகளுக்கு ஆதரவாக போராட்டம்,பதவி விலகிய எம்.எல்.ஏ மற்றும் இதர செய்திகள்

1.அறிவிப்புகளை தமிழில் வெளியிடவேண்டும் மத்திய அரசு அறிவிப்பை மாநில மொழிகளில் வெளியிட உயர் நீதிமன்றம்   உத்தரவு பிறப்பித்துள்ளது. தமிழ்நாடு தொடர்பான உத்தரவுகளை தமிழில் வெளியிட உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு 2.அரசு பள்ளி…

மேலும் பார்க்க காலை செய்தித் தொகுப்பு: PM CARE பணம் எங்கே, விவசாயிகளுக்கு ஆதரவாக போராட்டம்,பதவி விலகிய எம்.எல்.ஏ மற்றும் இதர செய்திகள்
விவசாயிகள் போராட்டம்

விவசாயிகள் போராட்டத்தின் மயிர்க்கூச்செறிய வைக்கும் 25 புகைப்படங்கள்

தண்ணீர் பீய்ச்சி அடித்தல், கண்ணீர் புகை குண்டுகள், தடியடி என எல்லாவற்றையும் கடந்த 5 நாட்களைக் கடந்து போராட்டத்தின் தீவிரம் குறையாமல் நடந்து கொண்டிருக்கிறது. இப்போராட்டத்தின் மயிர்க்கூச்செறியச் செய்யும் 25 முக்கியப் புகைப்படங்களை இங்கே தொகுத்திருக்கிறோம்.

மேலும் பார்க்க விவசாயிகள் போராட்டத்தின் மயிர்க்கூச்செறிய வைக்கும் 25 புகைப்படங்கள்
விவசாயிகள் போராட்டம் டெல்லி

டெல்லியை திணற வைக்கும் விவசாயிகள் போராட்டம் அப்டேட்ஸ்

நேற்றும் இன்றும் நடைபெற்ற விவசாயிகள் போராட்டம் தொடர்பான முக்கிய செய்திகள் இங்கு தொகுக்கப்பட்டுள்ளன.

மேலும் பார்க்க டெல்லியை திணற வைக்கும் விவசாயிகள் போராட்டம் அப்டேட்ஸ்
sanskrit imposition

காலை செய்தித் தொகுப்பு: தென் தமிழகத்தில் புயல், சமஸ்கிருதத் திணிப்பு, பலவீனமாகும் பாஜக கூட்டணி, 9 இதர செய்திகள்

காலை செய்தித் தொகுப்பு: தென் தமிழகத்தில் புயல், சமஸ்கிருதத் திணிப்பு, பலவீனமாகும் பாஜக கூட்டணி, 9 இதர செய்திகள்

மேலும் பார்க்க காலை செய்தித் தொகுப்பு: தென் தமிழகத்தில் புயல், சமஸ்கிருதத் திணிப்பு, பலவீனமாகும் பாஜக கூட்டணி, 9 இதர செய்திகள்
குருநானக்

சீக்கிய விவசாயிகளை இந்துத்துவ அமைப்பினர் தீவிரவாதிகளாக காட்ட முயல்வது ஏன்?

குருநானக்கின் வைதீக பார்ப்பன எதிர்ப்பும், சீக்கியர்கள் மீதான இந்துத்துவாதிகளின் காழ்ப்புணர்வும்! குருநானக் ஜெயந்தியை முன்னிட்டு எழுதப்பட்ட பதிவு.

மேலும் பார்க்க சீக்கிய விவசாயிகளை இந்துத்துவ அமைப்பினர் தீவிரவாதிகளாக காட்ட முயல்வது ஏன்?
கல்வெட்டு ரவி

ரவுடிகளை ஈர்க்கும் பாஜக; யார்யார் மீது என்னென்ன வழக்கு?

கல்வெட்டு ரவி, குண்டாஸ் சத்யராஜ், ரவுடி முரளிதரன், புளியந்தோப்பு தாதா அஞ்சலை, ரவுடி ஜோஷ்வா – காவல்துறையின் குற்றவாளிகள் பட்டியலில் இருக்கும் இவர்கள் சமீபத்தில் பா.ஜ.க வில் உறுப்பினராக இணைந்தவர்கள். இதில் முரளிதரன் பா.ஜ.க…

மேலும் பார்க்க ரவுடிகளை ஈர்க்கும் பாஜக; யார்யார் மீது என்னென்ன வழக்கு?
அன்னை மீனாம்பாள்

பெரியாருக்கு ’பெரியார்’ எனும் பட்டத்தை வழங்கிய அன்னை மீனாம்பாள்

பெரியாருக்கு ’பெரியார்’ எனும் பட்டத்தை வழங்கிய அன்னை மீனாம்பாள்

பர்மாவின் தலைநகர் ரங்கூனில் 1904-ம் ஆண்டு, டிசம்பர் 26 அன்று வி.ஜி.வாசுதேவப் பிள்ளை, மீனாட்சி தம்பதியின் மகளாகப் பிறந்தார் மீனாம்பாள். இவரது தந்தை பர்மாவில் முக்கியாமான வணிகர் ஆவார்.
மேலும் இவரது தந்தை வாசுதேவன் 1900-ம் ஆண்டு ரங்கூனில் மதுரைப்பிள்ளை உயர்நிலைப் பள்ளியை தொடங்கி நடத்திவந்தார். அவர் நடத்திய பள்ளியிலேயே படித்துத் தேறினார். ஆங்கிலம், தமிழ், தெலுங்கு, இந்தி என பல மொழிகள் கற்றுத் தேர்ந்தார். 1917-ம் ஆண்டு ரங்கூன் கல்லூரியில் நுண்கலை கற்றுத் தேர்ந்தார் மீனாம்பாள்.
சிவராஜ் அவர்களுடனான திருமணம்
1918 ஜூலை 10 அன்று மீனாம்பாளின் திருமணம் சென்னையைச் சேர்ந்த சட்டக்கல்லூரி மாணவரான சிவராஜுடன் நடைபெற்றது. தந்தை வாசுதேவனை போலவே கணவர் சிவாரஜும் சமுக அக்கறை கொண்டவராகவும், ஒடுக்கப்பட்ட மக்களுக்காக தொடர்ச்சியாக குரல்கொடுத்தும் வந்தார். 1926-ம் ஆண்டு தேர்தலில் நீதிக்கட்சியின் சார்பாக போட்டியிட்டு வெற்றி பெற்று மதராஸ் மாகாண சட்ட மேலவை உறுப்பினரானார் சிவராஜ். 10 ஆண்டுகள் அந்தப் பதவியில் நீடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் அன்னை மீனாம்பாள்
சைமன் கமிசனை ஆதரித்து அரசியலுக்கு வந்த மீனாம்பாள். நீதிக்கட்சி மற்றும் சுயமரியாதை இயக்கத்தின் பெண் தலைவர்களில் ஒருவராக இருந்தார். முதல் இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் சென்னையில் மக்களைத் திரட்டும் பொறுப்பை ஏற்று அதை சிறப்பாகவும் செய்தார்.
இந்தி எதிர்ப்பையொட்டி சென்னையில் 13.11.1938-ல் தமிழ்ப் பெண்கள் மாநாடு நடந்தது. இதில் திருவரங்கம் நீலாம்பிகையம்மையார், தருமாம்பாள், ராமமிருதம் அம்மையார், பண்டிதை நாராயணி அம்மையார் மற்றும் இன்னபிறர் கலந்து கொண்டனர். இம்மாநாட்டு ஒருங்கிணைப்பில் பெரும்பங்களித்தவர் மீனாம்பாள்தான்.
சென்னை நகரில் பெண்களைத் திரட்டியதில் அவரின் பங்கு முதன்மையாயிருந்தது. மாநாட்டுக் கொடியை அவர்தான் ஏற்றினார். இம்மாநாட்டில் தான் தந்தை பெரியாருக்கு “பெரியார்” எனும் பட்டம் மீனாம்பாள் அவர்களால் பரிந்துரைக்கப்பட்டு வழங்கப்பட்டது.
ஆதிதிராவிடர் மகாநாட்டிற்கு தலைமை
மீனாம்பாள் 31-1-1937 அன்று திருநெல்வேலி மாவட்டத்தில் நடந்த ஆதிதிராவிடர் மகாநாட்டிற்கும் தலைமை தாங்கி தலைமையுரையாற்றினார்.
”ஓர் சமுகமோ, ஓர் நாடோ விடுதலையடைய வேண்டுமானால் கல்வி, ஒற்றுமை, மகளிர் முன்னேற்றம் இம்மூன்றும் மிகவும் அவசியமானவை. இந்தியாவின் கல்வி மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ளது. சாதி வேற்றுமைகளால் சமூகத்தில் ஒற்றுமையும் குறைவு. உலக அளவில் ஒப்பிடுகையில் இந்திய மகளிர் கேவலமாக நடத்தப்படுகிறார்கள். மகளிரின் பிற்போக்கான நிலை நாட்டையும் பிற்போக்கான நிலையில் வைத்திருக்கிறது.
நம் நாட்டின் ஆண்கள் அடைந்துள்ள கல்விநிலை வளர்ச்சியே பிற்போக்கான நிலையில் காணப்படுகையில் பெண்களின் கல்விநிலை குறித்து என்ன சொல்வது? அரசு மேற்கொண்ட முயற்சியால் பல கல்வி வாய்ப்புகள் அனைத்துப் பிரிவு மக்களுக்கும் அளிக்கப்பட்டு வருகையில், இதைக் கைநழுவ விடாமல் நம் சமூகத்தார்(ஆதிதிராவிடர்), இம்மாதிரியான சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி, நாம் யாவரும் கல்வியில் தேர்ந்து, சமூகத்தில் உள்ள மற்றவர் நிலைக்கு நாமும் உயர வேண்டும்.
நீதிக்கட்சி தோன்றிய பிறகே தீண்டப்படாதவர்கள், தாழ்த்தப்பட்டவர்களாகியவர்களுடைய பிரச்சனைகள் அரசியல் பிரச்சினையாக வரமுடிந்தது. நீதிக்கட்சி சட்டமியற்றி கல்வி, சுகாதாரம், வீட்டு வசதி, நில வசதி, உத்தியோக வசதி, அரசியல் பிரதிநிதித்துவம் ஆகியன அனைவருக்கும் கிடைக்க வழி வகுத்தது. தெரு, குளம், பொதுசாவடி, பள்ளிக்கூடங்கள் போன்ற பொது இடங்களில் அனைவரும் நுழைய வாய்ப்பளித்தது” என்று பேசினார்.
தென்னிந்திய பட்டியலின கூட்டமைப்பின் பெண்கள் மாநாடு
தென்னிந்திய பட்டியலின கூட்டமைப்பின் முதல் தலைவராக பதவி வகித்தார். 1944-ல் சென்னையில் நடைபெற்ற தென்னிந்திய பட்டியலின கூட்டமைப்பின் பெண்கள் மாநாட்டை தலைமை தாங்கி நடத்தினார். அம்மாநாட்டில் பாபாசாகேப் அம்பேத்கர் கலந்துகொண்டார்.
மே 6, 1945-ல் பம்பாயில் நடைபெற்ற அகில இந்திய பட்டியலின கூட்டமைப்பின் பெண்கள் மாநாட்டிற்கும் அன்னை மீனாம்பாள் தலைமை தாங்கினார்.
அன்னை மீனாம்பாள் வகித்த பதவிகள்
மாநகராட்சி கவுன்சிலர்

கௌரவ மாகாண நீதிபதி

திரைப்பட தணிக்கை குழு உறுப்பினர்

சென்னை மாகாண ஆலோசணைக் குழு உறுப்பினர்

தொழிலாளர் ட்ரிப்யூனல் உறுப்பினர்

சென்னை நகர ரேஷன் ஆலோசனைக் குழு உறுப்பினர்

சென்னை பல்கலைக் கழக செனட் உறுப்பினர்

போருக்குப்பின் புனரமைப்புக்குழு உறுப்பினர்

S.P.C.A உறுப்பினர்

நெல்லிக்குப்பம் பாரி கம்பெனி தொழிலாளர் தலைவர்

தாழ்த்தப்பட்டோர் கூட்டுறவு வங்கி இயக்குனர்

அண்ணாமலை பல்கலைக்கழக செனட் உறுப்பினர்

சென்னை கூட்டுறவு வீட்டு வசதி சங்க இயக்குனர்

விடுதலை அடைந்த கைதிகள் நலச்சங்க உறுப்பினர்

காந்தி நகர் மகளிர் சங்கத் தலைவர்

மகளிர் தொழிற் கூட்டுறவு குழுத்தலைவர்

சென்னை அரசு மருத்துவ மனைகளின் ஆலோசனைக் குழு உறுப்பினர்

அடையார் மதுரை மீனாட்சி மகளிர் விடுதி நடத்துனர்

லேடி வெலிங்டன் கல்லூரி தேர்வுக்குழு தலைவர்

பெண் விடுதலைக்காகவும், பட்டியலின மக்கள் விடுதலைக்காகவும் போராடுவததைத் தன் வாழ்நாள் இலட்சியமாகக் கொண்டு போராடி வென்ற அன்னை மீனாம்பாள் தன் 88-வது வயதில் 1992 நவம்பர் 30 அன்று காலமானார். அன்னையின் நினைவு நாள் இன்று.

மேலும் பார்க்க பெரியாருக்கு ’பெரியார்’ எனும் பட்டத்தை வழங்கிய அன்னை மீனாம்பாள்