காலை செய்தித் தொகுப்பு: PM CARE பணம் எங்கே, விவசாயிகளுக்கு ஆதரவாக போராட்டம்,பதவி விலகிய எம்.எல்.ஏ மற்றும் இதர செய்திகள்

1.அறிவிப்புகளை தமிழில் வெளியிடவேண்டும்

மத்திய அரசு அறிவிப்பை மாநில மொழிகளில் வெளியிட உயர் நீதிமன்றம்   உத்தரவு பிறப்பித்துள்ளது. தமிழ்நாடு தொடர்பான உத்தரவுகளை தமிழில் வெளியிட உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு

2.அரசு பள்ளி மாணவர்களுக்கு முன்னுரிமை

அரசு பள்ளிகளில் படித்த மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் 7.5 சதவீது உள்ஒதுக்கீடு வழங்கப்பட்டது. அரசுப் பள்ளியில் படித்த மாணவர்களில் சிலருக்கு அரசு உதவிப்பெறும் கல்லூரிகளில் இடம் கிடைத்தது. ஆனால் வருடத்திற்கு 5 லட்சத்திற்கு மேல் கட்டணம் செலுத்த வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது.

இதனால் சில மாணவர்கள் மருத்துவ இடங்களை தேர்வு செய்யவில்லை. அரசு இதை முன்னதாகவே அறிவித்திருந்தால் நாங்கள் அந்த இடங்களை தேர்வு செய்திருப்போம், எங்களுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்க வேண்டும் என்று வாய்ப்பை தவறவிட்ட மாணவர்கள்  நீதி மன்றத்தில்  வழக்கு தொடர்ந்தனர். அகில இந்திய ஒதுக்கீட்டில் நிரப்பப்படாமல் திருப்பி அளிக்கப்படும் இடங்கள், காலியாக இருக்கும் இடங்கள் ஆகியவற்றை நிரப்பும்போது அரசு பள்ளி மாணவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். குறிப்பாக தவறவிட்ட மாணவ- மாணவிகளுக்கு வழங்கப்படும் என அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

3.புதிய தேர்தல் விதி முறைகேடுகளை உருவாக்கும் – டி. ஆர் பாலு

நேற்று அவர் வெளியிட்ட அறிக்கையில், மூத்த குடிமகன்கள், மாற்றுத்திறனாளிகள், கோவிட் நோயாளிகள் வாக்களிக்க பிஹார் தேர்தல் முறை போன்று பின்பற்ற தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது 15 சதவீதம் வாக்குகளில் முறைகேடு நடக்க வழிவகுக்கும் என டி.ஆர்.பாலு தேர்தல் ஆணையத்துக்கு கடிதம் எழுதியுள்ளார்.

தேர்தல் நடத்தை (திருத்தம்) விதிகள் 2019 பிரிவு 3(A) (aa)ன்படி, ”மாற்றுத்திறனாளிகள்”, ஓட்டளிக்க வராத வாக்காளர்களாக கருதப்படுவார்கள் எனக் கூறப்பட்டுள்ள நிலையில், யார் யாரெல்லாம் மாற்றுத்திறனாளிகள் என்ற விளக்கம் அளிக்கப்படவில்லை .

22 அக்டோபர் 2019 தேதியிட்ட , தேர்தல் நடத்தை (திருத்தம்) விதிகள் 2019 பிரிவு 3(C) (e)ன்படி, 80 வயதிற்கு மேற்பட்டோர் ”முதியோர்கள்” என இருந்ததை மாற்றி, 19 ஜூன் 2020 தேதியிட்ட , தேர்தல் நடத்தை (திருத்தம்) விதிகள் 2020 பிரிவு 2(11)ன்படி, 6 வயதிற்கு மேற்பட்டோர் ”முதியோர்கள்” என ஏழு மாதத்திற்குள்ளாகவே மாற்ற வேண்டிய அவசியமென்ன என்பது தெளிவாக்கப்படவில்லை.

முதியோர்கள்” என்பவர்களுடைய வயதினை கணக்கிட எந்த துல்லியமான வரையறையும் தேர்தல் விதிகளில் குறிப்பிடப்படாத நிலையில், தபால் வாக்குச் சீட்டுகள் அளிக்கும், தேர்தல் பொறுப்பு அதிகாரி தனது அதிகாரத்தை, நியாயமான மற்றும் ஒளிவு மறைவற்ற தேர்தல் முறைக்கு முற்றிலும் எதிராக பயன்படுத்தும் வாய்ப்புகள் அதிகரித்துள்ளது.

ஓட்டளிக்க வராத வாக்காளர்களுக்கு, தபால் வாக்குச் சீட்டுகள் அளிக்கப்பட்டால், அரசியல் கட்சிகளின் வாக்குச் சாவடி முகவர்கள் இல்லாத நிலையில், போலி வாக்காளர்களின் எண்ணிக்கை அதிகளவில் பெருக வாய்ப்பு உள்ளது.  என்று கூறிப்பிட்டுள்ளார்.

4.பாமகவினர் மீது வழக்கு

தமிழகத்தில் கல்வி, வேலைவாய்ப்பில் வன்னியர்களுக்கு 20% தனி இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்பது பாமக, வன்னியர் சங்கத்தின் கோரிக்கை.

இந்த கோரிக்கையை வலியுறுத்தி முதல்கட்டமாக சென்னையில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய அலுவலகம் முன்பு இன்று காலை 11 மணிக்கு போராட்டம் தொடங்கியது. போராட்டத்துக்கு வந்த பிற மாவட்ட பாமகவினர் சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் தடுத்து நிறுத்தப்பட்டனர். இதனால் பாமகவினர் சாலை மறியல் மற்றும் ரயில் மறியல் போராட்டத்தில்  ஈடுபட்டனர்.

போராட்டத்தில்  ஈடுபட்டதாக 300 -க்கும் மேற்பட்ட பாமகவினர் மீது பொது சொத்துக்கு சேதம் விளைவித்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. தாம்பரம் ரயில் நிலைய இயக்குனர் அன்பழகன் போலீசில் புகார் தெரிவித்தார். அதன்பெயரில் அவர்கள் மீது அத்துமீறி நுழைதல், சேதம் விளைவித்தல் உள்ளிட்ட 3 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

5.சாதிவாரி கணக்கெடுப்பு

தமிழ்நாட்டில் பல்வேறு அரசியல் கட்சிகளும், சமுதாய அமைப்புகளும் சாதி வாரியான கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என பல்வேறு காலக்கட்டங்களில் கோரிக்கைகளை வைத்து வருகின்றனர்.  அரசு பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.  இதன் பயன் அனைத்து பிரிவினருக்கும் சென்றடைவதை அரசு உறுதிபடுத்த வேண்டியுள்ளது.  மேலும், 69 சதவீத இட ஒதுக்கீடு சம்பந்தமான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நிலையில், இவ்வழக்கையும் எதிர்கொள்ள இத்தகைய புள்ளி விபரங்கள் தேவைப்படுகின்றன.

6.விவசாயிகளுக்காக  பாஜக ஆதரவை விலக்கிய சட்ட மன்ற உறுப்பினர்

ஹரியானா மாநிலத்தில் பாஜக-ஜேஜேபி கூட்டணி அரசாங்கத்தை ஆதரித்து வந்த  ஒரு சுயேட்சே  சட்ட மன்ற உறுப்பினர்  சோம்பீர் சங்வான்  ஆவார் அவர் விவசாயிகள் போராட்டத்தை ஆத்ரித்து பாஜகவினரின் விவசாய  விரோத போக்கை கண்டித்து தனது ஆதரவை விளக்கியுள்ளார். மேலும் சோம்பீர் சங்வான் மாநில கால்நடை மேம்பாட்டு வாரியத்தின் தலைவர் பதவியையும்  ராஜினாமா செய்துள்ளார்.

  இது குறித்து பேசியுள்ள  சங்வான் “இந்த விவசாயிகள்  விரோத அரசாங்கத்திற்கு நான் அளித்த ஆதரவை நான் திரும்பப் பெற்றுள்ளேன். விவசாயிகளின் காரணத்திற்காக அனுதாபப்படுவதற்குப் பதிலாக இந்த அரசாங்கம் நீர் பீரங்கிகள், கண்ணீர்ப்புகை போன்ற அனைத்து நடவடிக்கைகளையும் டெல்லிக்கு அணிவகுத்துச் செல்வதைத் தடுக்க பயன்படுத்தியது. அத்தகைய அரசாங்கத்திற்கு எனது ஆதரவைத் தொடர முடியாது,”  என்று  கூறியுள்ளார். 

7.டிசம்பர் 4  ரயில் மறியல்

டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாகவும், புதிய வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வலியுறுத்தியும் டிசம்பர் 4-ம் தேதி முதல் தமிழகம் முழுவதும் மத்திய, மாநில அரசு அலுவலகங்கள் முன்பு தொடர் மறியல் போராட்டம் நடத்த உள்ளதாக இடதுசாரிக் கட்சிகள் கூட்டாக அறிவித்துள்ளன.

சிபிஎம் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன், சிபிஐ (எம்.எல்) என்.கே.நடராஜன் ஆகியோர் கூட்டறிக்கையில் கையெழுத்திட்டுள்ளனர்.

8.ஒடுக்கப்பட்ட, பழங்குடி இன மக்களின் குழந்தைகள் கல்வி பெறும் உரிமையை நசுக்குவதா பாஜக மீது வைகோ குற்றசாட்டு

எஸ்.சி., எஸ்.டி மாணவர்கள் பனிரெண்டாம் வகுப்புக்குப் பின்னர் கல்லூரிகளில் சேர்ந்து மேல் படிப்பு தொடர்வதற்காக, அண்ணல் அம்பேத்கர் வேண்டுகோளின்படி 1946 இல் ஆங்கிலோயர் ஆட்சிக் காலத்தில் கல்வி உதவித் தொகை வழங்கும் திட்டம் நடைமுறைக்கு வந்தது..

நாடு விடுதலை அடைந்த பின்னர் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடி இன மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு வழங்கப்பட்டு வந்த கல்வி உதவித் தொகை என்பது சிறுபான்மை இன மாணவர்கள், இதர பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கும் நீடிக்கப்பட்டது.

நரேந்திர மோடி தலைமையிலான பா.ஜ.க. அரசு 2014 ஆம் ஆண்டு மத்தியில் பொறுப்பேற்ற பின்னர் எஸ்.சி., எஸ்.டி மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை அளிப்பதற்கு வரவு-செலவு திட்டத்தில் ஒதுக்கீடு செய்யப்படும் நிதி சிறிது சிறிதாக குறைக்கப்பட்டு வந்தது.

மத்திய – மாநில அரசுகள் 60:40 என்ற விகிதத்தில் எஸ்.சி., எஸ்.டி. மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை வழங்குவதற்கான நிதியைப் பகிர்ந்துகொண்டு வந்த நிலையில், மத்திய அரசு நிதி ஒதுக்கீட்டைக் குறைத்ததால், தமிழக அரசும் எஸ்.சி., எஸ்.டி. மாணவர்களுக்கு வழங்கி வந்த கல்வி உதவித் தொகையைக் குறைத்தது.

இத்திட்டத்திற்காக மத்திய அரசு 2018 ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் ஒதுக்கிய தொகை ரூ.6 ஆயிரம் கோடி, 2019 இல் இத்தொகை பாதியாகக் குறைக்கப்பட்டு, 3 ஆயிரம் கோடி ரூபாய் மட்டுமே ஒதுக்கீடு செய்யப்பட்டது.

மத்திய அரசு நிதி வழங்காததால், 14 மாநில அரசுகள் இத்திட்டத்தை அடியோடு நிறுத்திவிட்டன.

இந்நிலையில், தாழ்த்தப்பட்ட மற்றும் பட்டியல் இன மாணவர்களின் கல்வி உதவித் தொகையை முற்றாக இரத்து செய்வதற்கு மத்திய அரசு முடிவு எடுத்து இருக்கிறது.

ஒடுக்கப்பட்ட, பழங்குடி இன மக்களின் குழந்தைகள் கல்வி பெறும் உரிமையை நசுக்குவதற்கு பா.ஜ.க. அரசு மேற்கொண்டுள்ள முயற்சி கடும் கண்டனத்துக்கு உரியதாகும்…

9.பி எம் கேர் பணம் எங்கே  மம்தா கேள்வி

மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி செவ்வாய்க்கிழமை நாட்டின் கூட்டாட்சி கட்டமைப்பை தகர்க்க   மத்திய அரசு நிறுவனங்கள்  பயன்படுத்துவதாக குற்றம் சாட்டினார்  மேலும் பிரதமரின்   அவசரகால சூழ்நிலைகளில் நிவாரணம் (பி.எம் கேர்ஸ்) நிதியின் பணம் எங்கு சென்றது என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

பி.எம் கேர்ஸ் ஃபண்டின் பணம் அனைத்தும் எங்கே போய்விட்டது? இந்த நிதிகளின் நிலை பற்றி யாருக்கும் தெரியுமா? லட்சம் கோடி பணம் எங்கே போய்விட்டது? ஏன் தணிக்கை செய்யப்படவில்லை? மத்திய அரசு எங்களுக்கு விரிவுரை செய்கிறது. கோவிட் தொற்றுநோயை எதிர்த்துப் போராடுவதற்கு அவர்கள் மாநிலங்களுக்கு  என்ன கொடுத்தார்கள்? “என்றும் கேள்விகளை  கேட்டுள்ளார்   அவர் அமைச்சரவைக் கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர் கூட்டத்தில் இந்த கேள்விகளை எழுப்பினார்.   

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *