விவசாயிகள் போராட்டம்

விவசாயிகள் போராட்டத்தின் மயிர்க்கூச்செறிய வைக்கும் 25 புகைப்படங்கள்

இந்திய அரசின் விவசாய சட்டங்களை எதிர்த்து டெல்லி சலோ, டெல்லியை நோக்கி செல்வோம் என்று கிளம்பிய பஞ்சாப், ஹரியானா விவசாயிகள் டெல்லியின் எல்லையில் முற்றுகையிட்டிருக்கிறார்கள். தண்ணீர் பீய்ச்சி அடித்தல், கண்ணீர் புகை குண்டுகள், தடியடி என எல்லாவற்றையும் கடந்த 5 நாட்களைக் கடந்து போராட்டத்தின் தீவிரம் குறையாமல் நடந்து கொண்டிருக்கிறது. இப்போராட்டத்தின் மயிர்க்கூச்செறியச் செய்யும் 25 முக்கியப் புகைப்படங்களை இங்கே தொகுத்திருக்கிறோம்.

விவசாய மசோதாவிற்கு எதிராக ஒன்றிய அரசினை எதிர்த்து முழக்கமிடும் விவசாயிகள்
போராட்டத்தினைக் கலைப்பதற்காக விவசாயிகளின் மீது தண்ணீர் பீய்ச்சி அடிக்கப்படுகிறது
போராட்டத்தை கலைக்க முயலும் காவல்துறையினரின் தாக்குதலை எதிர்கொள்ளும் விவசாயிகள்
காவல்துறையினரின் தடுப்புகளை தகர்ப்பதற்காக டிராக்டரை ஓட்டிச் செல்லும் விவசாயி
விவசாயிகளின் மீது பாறை ஒன்றினை தூக்கி எறியும் காவல்துறையைச் சேர்ந்த ஒருவர்
விவசாயி ஒருவரை தாக்கும் காவல்துறை
போராட்டக் களத்தில் ஒரு பக்கம் விவசாயிகள், இன்னொரு புறம் காவல்துறையினர் எதிரெதிர் புறத்தில்!
முள்கம்பிகளை அமைக்கும் காவல்துறையினர்
முள்வேலிகளுக்கு இடையில் தெரியும் விவசாயிகள்
முன்னோக்கி செல்வதற்காக முள்கம்பிகளை பிரிக்கும் விவசாயிகள்
முள்கம்பியைத் தாண்டிச் செல்வதற்காக பெண் ஒருவருக்கு உதவும் விவசாயி
விவசாயிகள் மீது வீசப்படும் கண்ணீர் புகை குண்டுகள்
காவல்துறையினர் வீசிய கண்ணீர் புகை குண்டு ஒன்றினை எடுத்து திருப்பி வீசும் விவசாயி ஒருவர்
போராட்ட இடத்தில் தங்குவதற்காக அனைத்து அத்தியாவசியப் பொருட்களையும் ஏற்றிக் கொண்டு டிராக்டர்களில் வந்து குவியும் விவசாயிகள்
போராட்டத்தில் கண்ணீர் புகை குண்டுகளை வீசுவதற்கு தயார் நிலையில் காவல்துறையினர்
காவல்துறையினர் அமைத்த கான்க்ரீட் தடுப்புகளை கயிறு கட்டி இழுத்து நகர்த்துகிறார்கள்
போராட்டத்திற்கு நடுவில் ட்ராக்டர் வண்டியில் ஓய்வெடுக்கும் விவசாயிகள்
போராட்டத்தில் உள்ள விவசாயிகளுக்கு உணவு தயாரிப்பதற்காக சப்பாத்தி மாவினைப் பிசையும் சீக்கியர் ஒருவர்
விவசாயிகளுக்கு உணவு தயாராகிறது
சாலையிலேயே விவசாயிகளுக்கு உணவு பரிமாறப்படுகிறது
கேஸ் சிலிண்டர்கள் வைத்து உணவு சமைக்கும் விவசாயிகள்
போராட்டத்தின் போது செய்தித்தாள் வாசிக்கும் விவசாயிகள்
நாங்கள் தீவிரவாதிகள் அல்ல, விவசாயிகள் என்ற பதாகையுடன் விவசாயிகள்
பாடல்களுக்கும், முழக்கங்களுக்கும் தாளம் இசைப்பதற்கான மேளத்துடன் ஒரு பெண்
டிராக்டரில் அடுத்தடுத்து வந்திறங்கும் விவசாயிகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *