வட மாநிலத் தொழிலாளர்கள்

புலம்பெயர் தொழிலாளர்கள் குறித்தான கேள்விகள்: தமிழ்நாட்டில் தேவை ஒரு கேரள மாதிரி ஆய்வு

தொடக்க நிலை முயற்சியாக தமிழ்நாட்டில் புலம்பெயர் தொழிலாளர்கள் பற்றிய ஆய்வும், கணக்கெடுப்பும் தேவையாக உள்ளது. கேரளாவில் அம்மாநில அரசே அதனை மேற்கொண்டது போல, தமிழ்நாடு அரசும் உடனடியாக அத்தகைய ஆய்வொன்றை மேற்கொள்ள வேண்டும்.

மேலும் பார்க்க புலம்பெயர் தொழிலாளர்கள் குறித்தான கேள்விகள்: தமிழ்நாட்டில் தேவை ஒரு கேரள மாதிரி ஆய்வு

சமூக ஊடகங்களில் நடக்கும் தகவல் யுத்தம்; நாம் தெரிந்து கொள்ள வேண்டியது என்ன?

ஒரு தேர்தலுக்கு 20 ஆயிரம் கோடிகளுக்கு மேல் செலவு செய்யும் இடத்தில், மக்களின் சமூக நேரத்தை இவ்வளவு ஆக்கிரமிக்கும் சமூக ஊடகங்களின் மூலமாக மக்களைக் கைப்பற்றுவதற்காக எவ்வளவு ஆயிரம் கோடிகளை வேண்டுமானாலும் செலவு செய்வார்கள். இதற்குள்ளாகத்தான் ஃபேக் நியூஸ் பேக்டரிகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. நேர்மையாளர்கள், ஊடகவியலாளர்கள், அரசியல் பார்வையாளர்கள் விலைக்கு வாங்கப்படுகிறார்கள். ஃபேக் நியூஸ் ஃபேக்டரியின் அடுத்த பரிணாமமாக ஃபேக் சிட்டிசன் வரைக்கும் வந்து விட்டார்கள்.

மேலும் பார்க்க சமூக ஊடகங்களில் நடக்கும் தகவல் யுத்தம்; நாம் தெரிந்து கொள்ள வேண்டியது என்ன?
இந்துத்துவம்

இந்து தேசியத்தின் சர்வதேச வலைப்பின்னல்

அமெரிக்காவின் மேரிலாண்ட் நகரத்தில், 1989இல் தொடங்கப்பட்ட Indian Development and Relief Fund (IDRF) அமைப்பு சங் பரிவார அமைப்புகளுக்கு நிதி சேகரித்து அனுப்பி கொண்டு இருக்கிறது. ஆனாலும் இன்று வரை அந்த அமைப்பு அரசியல் சாராத, எந்த வித சார்புமற்ற , தொண்டு நிறுவனமாகத் தான் பதிவு செய்யப்பட்டு செயல்பட்டு வருகிறது. மொத்தம் 75 அமைப்புகளைக் கொண்ட IDRFஇல், 60 அமைப்புகள் சங் பரிவார அமைப்புகளுடன் தொடர்புடையவை.

மேலும் பார்க்க இந்து தேசியத்தின் சர்வதேச வலைப்பின்னல்

வரலாற்று மேலாதிக்கம் இன்றி இந்து ராஷ்டிரா இல்லை!

இந்துத்துவர்களின் வாழ்நாள் குறிக்கோளான ‘இந்து ராஷ்டிராவை’ கட்டமைக்க அடித்தளம் தேவை. அதுவே, அவர்கள் யதார்த்தையும் கடந்து முன்னிறுத்தும் வேதகால சமூகம். ஆனால், அச்சமூகம் கண்டறியப்பட்ட வரலாறுகளில் பலவீனமாக இருக்கிறது. முற்கால இந்து சமூகம் என்பதைக் கடந்து, ‘இந்தியத் தேச சமூகம்’ என்று தேசியவாதத்தைத் துணைக்கு அழைப்பது அந்த பலவீனத்தைப் போக்கும்.

மேலும் பார்க்க வரலாற்று மேலாதிக்கம் இன்றி இந்து ராஷ்டிரா இல்லை!

தமிழர் கடல்: அமெரிக்கா, சீனா தொடர்பில் பிரபாகரன் கொண்டிருந்த நிலைப்பாடு என்ன?

விடுதலைப் புலிகளது, அதனது தலைவர் பிரபாகரனது நிலைப்பாட்டிற்கு விரோதமாக சீனாவை முன்னிட்டு அமெரிக்க+இந்திய குவாட் முகாம் இப்பிராந்தியத்தை போர்ச் சூழலுக்கு இட்டுச் செல்கிறது. அதற்கான முன் தயாரிப்புகளை, கட்டமைப்புகளை ஒழுங்கமைக்கிறது. அதனது ஒரு கண்ணியே இலங்கைத் தீவிற்குள் தமிழர்களிடையே இந்துத்துவ கட்டமைப்புகளையும், இந்திய வெளிவுறவுக் கொள்கையின் பரந்துபட்ட தலையீட்டிற்கான வெளியையும் உருவாக்குவது.

மேலும் பார்க்க தமிழர் கடல்: அமெரிக்கா, சீனா தொடர்பில் பிரபாகரன் கொண்டிருந்த நிலைப்பாடு என்ன?

உயிர்ப்போடு தான் இருக்கிறது பிரபாகரனின் அரசியல்

முள்ளிவாய்க்கால் இறுதிக் கட்டத்திலும் கூட ராணுவப் படையணியே தங்கள் ஆயுதங்களை மெளனித்தது; அரசியல் துறைப் பிரிவு வெள்ளைக் கொடியேந்தி அரசியல் பேச்சுவார்த்தைகளை மேற்கொள்வதற்கான தமிழர் தரப்பு பிரதிநிதித்துவத்தை உறுதி செய்ய முன்வந்தது.

மேலும் பார்க்க உயிர்ப்போடு தான் இருக்கிறது பிரபாகரனின் அரசியல்

இந்தியா : மோடி எனும் பிரச்சினை – யமுனா ராஜேந்திரன்

பிபிசி ஆவணப்படத்தின் இந்திய அளவிலான உள்நாட்டுப் பரிமாணமும் அதன் விளைவுகளுமே இந்திய நோக்கிலிருந்து பார்க்கப்பட வேண்டும். மோடி அரசின் மனித உரிமை மீறலாகவோ, இந்து-முஸ்லீம் பிரச்சினை சார்ந்த வெறுப்பாக மட்டும் இதனைக் குறுக்காமல், ஆர்எஸ்எஸ்சின் இந்தியா தழுவிய பாசிசக் கருத்தியலை அம்பலப்படுத்துவதாகவே இந்த ஆவணப்படத்தை இடதுசாரிகள் பயன்படுத்த வேண்டும்.

மேலும் பார்க்க இந்தியா : மோடி எனும் பிரச்சினை – யமுனா ராஜேந்திரன்
Electoral bonds bjp

பாஜகவிற்கு 4,215 கோடி ரூபாய் நன்கொடை கொடுத்தது யார்?

2017-18 மற்றும் 2019-20 இந்த காலகட்டத்தில் இந்தியாவின் 17 கட்சிகள் ஏறத்தாழ 6,201 கோடி ரூபாய் தேர்தல் பத்திரத்தினுடாக நன்கொடை வாங்கிய தகவல் வெளியானது. இந்த 6,201 கோடி ரூபாயில் ஏறத்தாழ 67.9% அதாவது 4,215.89 கோடி நன்கொடை பாஜக என்ற ஒற்றை கட்சிக்கு மட்டும் தேர்தல் பத்திரத்தினுடாக வந்த நன்கொடைகள் ஆகும்.

மேலும் பார்க்க பாஜகவிற்கு 4,215 கோடி ரூபாய் நன்கொடை கொடுத்தது யார்?
anti hindi protest

42 நாட்களில் 234 சிற்றூர்களுக்கும் 60 நகரங்களுக்கும் சென்று 87 பொதுக்கூட்டங்கள் : மொழிப் போர் – பகுதி 1

42 நாட்களில் 234 சிற்றூர்களுக்கும் 60 நகரங்களுக்கும் சென்று 87 பொதுக்கூட்டங்கள் நடத்தி பரவலாக ஆதரவை திரட்டினர். அவர்கள் 11 செப்டம்பர் 1938 அன்று சென்னை வந்தடைந்தனர். அங்கு அவர்கள் அரசு அலுவலகங்களில் மறியல் செய்ததாகக் கைது செய்யப்பட்டனர். இவர்களது நடைபயணத்தால் சிற்றூர்களிலும் கிராமங்களிலும் இந்தி எதிர்ப்பு மற்றும் மொழியுணர்வு ஊட்டி பெருக்கப்பட்டது.

மேலும் பார்க்க 42 நாட்களில் 234 சிற்றூர்களுக்கும் 60 நகரங்களுக்கும் சென்று 87 பொதுக்கூட்டங்கள் : மொழிப் போர் – பகுதி 1
எரிக் சோல்ஹெய்ம்

தமிழ்நாட்டில் QUAD-ன் திட்டம்: யானை வருகிறது பின்னே மணியோசை வந்து சென்றிருக்கிறது முன்னே!

கடந்த மாதம் 18-ம் தேதி நார்வேயைச் சேர்ந்த எரிக் சோல்ஹேய்ம் சென்னையில் தமிழ்நாட்டு முதலைமைச்சர் ஸ்டாலினை சந்தித்து சென்றிருக்கிறார். சுற்றுச்சூழல் தொடர்பில் வளர்ந்த மேற்குலக நாடுகளின் மரபுசாரா ஆற்றல் – மின்சாரத்தில் இயங்கும் தொழில்நுட்ப சாதனக் கண்டுபிடிப்புகளை வளரும் நாடுகளில் உற்பத்தி செய்யும், சந்தைப்படுத்தும் முயற்சிக்கான அதிகாரப்பூர்வமற்ற முகவராக செயல்படுகிறார். இது தொடர்பிலே அவரது தமிழ்நாட்டு, இந்திய சுற்றுப்பயணம் அமைந்தது.

மேலும் பார்க்க தமிழ்நாட்டில் QUAD-ன் திட்டம்: யானை வருகிறது பின்னே மணியோசை வந்து சென்றிருக்கிறது முன்னே!