அண்ணா பல்கலைக்கழகம்

அண்ணா பல்கலைக்கழகத்தை இரண்டாக பிரிக்க அனுமதிக்க மாட்டோம் – கல்வியாளர்கள் இணைந்து அறிவிப்பு

தமிழ்நாட்டின் முக்கியமான கல்வியாளர்கள் அனைவரும் ஒன்றிணைந்து அண்ணா பல்கலைக்கழகம் இரண்டாக பிரிக்கப்படுவதை அனுமதிக்க மாட்டோம் என்று கூட்டறிக்கை வெளியிட்டுள்ளனர். அண்ணா பல்கலைக்கழகத்தை பிரிக்கும் முயற்சி ஏன் நடைபெறுகிறது என்பது குறித்தும், பிரித்தால் என்ன நடக்கும் என்பது குறித்தும் அறிக்கையினை வெளியிட்டு மத்திய மாநில அரசுகளுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.

மேலும் பார்க்க அண்ணா பல்கலைக்கழகத்தை இரண்டாக பிரிக்க அனுமதிக்க மாட்டோம் – கல்வியாளர்கள் இணைந்து அறிவிப்பு
ஆன்லைன் வகுப்பு மாணவர்கள்

வெறும் 11% சதவீத மாணவர்களுக்கே ஆன்லைன் வகுப்புகள் கிடைத்துள்ளன – ஆய்வு

தற்போது வெளிவந்திருக்கும் ASER (Annual Status of Education Report) எனப்படும் ஆண்டு கல்வி அறிக்கையில் நாடு முழுவதும் வெறும் 11% சதவீத மாணவர்களுக்கே ஆன்லைன் வகுப்புகள் கிடைத்துள்ளன எனும் தகவல் தெரியவந்துள்ளது.

மேலும் பார்க்க வெறும் 11% சதவீத மாணவர்களுக்கே ஆன்லைன் வகுப்புகள் கிடைத்துள்ளன – ஆய்வு
அங்கி தாஸ்

பாஜகவுக்கு ஆதரவாக பேஸ்புக்கை இயக்கியதாக குற்றம் சாட்டப்பட்ட அங்கி தாஸ் பதவி விலகினார்

பேஸ்புக் நிறுவனத்திற்கான இந்தியா மற்றும் கிழக்கு, மத்திய ஆசிய பிராந்தியத்திற்கான கொள்கை இயக்குனரான அங்கி தாஸ் கடந்த செவ்வாய்கிழமை தன் பதவிகளில் இருந்து விலகியுள்ளார். அங்கி தாஸ் பாஜகவிற்கு ஆதரவாக பேஸ்புக் நிறுவனத்தினை செயல்பட வைத்ததாக குற்றச்சாட்டு எழுப்பப்பட்டு பெரும் சர்ச்சைக்குள்ளாகியிருந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் பார்க்க பாஜகவுக்கு ஆதரவாக பேஸ்புக்கை இயக்கியதாக குற்றம் சாட்டப்பட்ட அங்கி தாஸ் பதவி விலகினார்
டிஜிபப் டிஜிட்டல் மீடியா

இந்தியாவின் டிஜிட்டல் ஊடகங்களுக்கான பிரத்யேக சங்கம் உருவாக்கம்; 11 முக்கிய டிஜிட்டல் ஊடகங்கள் கைகோர்ப்பு

டிஜிட்டல் ஊடகங்கள் இணைந்து ‘டிஜிபப் நியூஸ் இந்தியா பவுண்டேசன்’ (DIGIPUB News India Foundation) என்கிற பெயரில் தற்போது ஒருங்கிணைந்த ஒரு சங்கத்தை உருவாக்கி உள்ளனர்.

மேலும் பார்க்க இந்தியாவின் டிஜிட்டல் ஊடகங்களுக்கான பிரத்யேக சங்கம் உருவாக்கம்; 11 முக்கிய டிஜிட்டல் ஊடகங்கள் கைகோர்ப்பு
கோமுகி அணை

எடப்பாடியின் புதிய கைகான் வளைவு திட்டத்தினால் கள்ளக்குறிச்சி, கடலூர் மாவட்டங்கள் சந்திக்க உள்ள சிக்கல்கள்

முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவரது சொந்த மாவட்டமான சேலம் மாவட்டத்திற்கு, கள்ளக்குறிச்சி மாவட்டத்தின் நீர் ஆதாரமான கைகான் வளைவு நீராதாரத்தை திருப்பிவிடக் கூடிய வகையில் கோடிக்கணக்கான ரூபாய் செலவில் புதிய கைகான் வளைவுத் திட்டத்தினை உருவாக்கியுள்ளார். இப்படி மாற்றி அமைப்பதால் கள்ளக்குறிச்சி மாவட்டம் மற்றும் கடலூர் மாவட்டத்தின் மணிமுத்தாறு பாசன பரப்பு ஆகியவை தனது நீராதாரத்தை இழந்து விடும் சிக்கல் இருக்கிறது.

மேலும் பார்க்க எடப்பாடியின் புதிய கைகான் வளைவு திட்டத்தினால் கள்ளக்குறிச்சி, கடலூர் மாவட்டங்கள் சந்திக்க உள்ள சிக்கல்கள்
சென்னை கனமழை

சென்னையில் 2014-க்குப் பிறகு குறைந்த மணிநேரங்களில் அதிக மழை

2014-ம் ஆண்டு அக்டோபர் 18 அன்று ஒரே நாளில் 162.9 மி.மீ மழை பெய்தது. இதுவே கடந்த 10 ஆண்டுகளில் ஒரே நாளில் பெய்த அதிக மழை பொழிவின் அளவாகும். தற்போது 133 மி.மீ மழை ஒரே நாளில் பெய்துள்ளது.

மேலும் பார்க்க சென்னையில் 2014-க்குப் பிறகு குறைந்த மணிநேரங்களில் அதிக மழை
பீகார் தேர்தல்

நிகழ்தரவுகள்: பீகார் முதல்கட்ட தேர்தல்; இன்று நடந்தவை

முதல்கட்டமாக 71 தொகுதிகளுக்கான தேர்தல் இன்று தொடங்கியது. இரண்டாம் கட்டத் தேர்தல் நவம்பர் 3-ம் தேதியும், மூன்றாம் கட்டத் தேர்தல் நவம்பர் 7-ம் தேதியும் நடைபெற உள்ளது. இறுதி முடிவுகள் நவம்பர் 10 அன்று அற்விக்கப்பட உள்ளது.

மேலும் பார்க்க நிகழ்தரவுகள்: பீகார் முதல்கட்ட தேர்தல்; இன்று நடந்தவை
சுப்பையா சண்முகம்

பெண்ணின் வீட்டுக் கதவில் சிறுநீர் கழித்த பாஜக மாணவரணி தலைவர் மதுரை எய்ம்ஸ் உறுப்பினராக நியமனம்

தனியாக இருந்த பெண்ணின் வீட்டு கதவில் சிறுநீர் கழித்த பாஜக மாணவர் அமைப்பின் தலைவரான சுப்பையா சண்முகம் மதுரை எய்ம்ஸ் மருத்துவ நிறுவனத்திற்காக அமைக்கப்பட்டுள்ள குழுவில் உறுப்பினராக சேர்க்கப்பட்டுள்ளார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.

மேலும் பார்க்க பெண்ணின் வீட்டுக் கதவில் சிறுநீர் கழித்த பாஜக மாணவரணி தலைவர் மதுரை எய்ம்ஸ் உறுப்பினராக நியமனம்
மூக்குத்தி அம்மன் டிரைலர் விமர்சனம்

அம்மனுக்கு கருவாடு படைப்பார்கள்; ஆர்.ஜே.பாலாஜிக்கு தெரியாதா? மூக்குத்தி அம்மன் ட்ரைலர் விமர்சனம்

“நான் புனித அப்பத்தை புசிப்பேன், நோன்பு கஞ்சியை குடிப்பேன், ஆனால் ஒருபோதும் அம்மனுக்கு ஊத்தும் கூழை குடிக்க மாட்டேன்” என்ற வசனத்தோடு தொடங்குகிறது ஆர்.ஜே.பாலாஜி இயக்கி நடித்திருக்கும் மூக்குத்தி அம்மன் ட்ரைலர்.

மேலும் பார்க்க அம்மனுக்கு கருவாடு படைப்பார்கள்; ஆர்.ஜே.பாலாஜிக்கு தெரியாதா? மூக்குத்தி அம்மன் ட்ரைலர் விமர்சனம்
குஷ்பூ கைது ரிசார்ட்

குஷ்பூ தங்கவைக்கப்பட்ட ஏசி விடுதி! இதுக்கு பேரு அரெஸ்டா? கடுப்பான நெட்டிசன்கள்

கைது செய்யப்பட்ட குஷ்பூ உள்ளிட்ட 13 பேரும் கைது செய்யப்பட்டு கேளம்பாக்கம் அருகே உள்ள தையூர் சதன் ரெசிடன்சி எனும் சொகுசு விடுதியில் தங்க வைக்கப்பட்டுள்ளது தெரியவந்து நெட்டிசன்கள் கடுப்பாகி இதுக்கு பேர்தான் அரெஸ்டா என்று கலாய்த்து வருகிறார்கள்.

மேலும் பார்க்க குஷ்பூ தங்கவைக்கப்பட்ட ஏசி விடுதி! இதுக்கு பேரு அரெஸ்டா? கடுப்பான நெட்டிசன்கள்