சென்னை கனமழை

சென்னையில் 2014-க்குப் பிறகு குறைந்த மணிநேரங்களில் அதிக மழை

  • வடகிழக்கு பருவமழை துவங்கியுள்ளதால் சென்னையில் நேற்று இரவு முதல் பலத்த மழை பெய்து வருகிறது. பெரும்பாலான சாலைகள் தண்ணீரில் மூழ்கியுள்ளன. சென்னையில் 150 முதல் 200 மி.மீ அளவிலான மழை பொழிந்திருக்கிறது. தமிழ்நாட்டில் அடுத்த இரண்டு நாட்களுக்கு மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டிருக்கிறது.
  • அதிகபட்சமாக மைலாப்பூரில் 178 மி.மீ மழையும், அதற்கடுத்ததாக பொன்னேரி பகுதியில் 128 மி.மீ மழையும், புரசைவாக்கத்தில் 94.4 மி.மீ மழையும், அம்பத்தூரில் 90 மி.மீ, ஆலந்தூரில் 78.5 மி.மீ, சோழிங்கநல்லூரில் 77.2 மி.மீ, கிண்டியில் 75.2 மி.மீ மழையும் பெய்துள்ளது.
  • தூத்துக்குடி, ராமநாதபுரம், கன்னியாகுமரி, விருதுநகர் மாவட்டங்களும் மழைப்பொழிவினை சந்தித்துள்ளன. மதுரை, தேனி மற்றும் தென்காசியின் சில பகுதிகளிலும் குறிப்பிடத்தக்க மழை பெய்துள்ளது. 
  • 2017-ம் ஆண்டிற்குப் பிறகு 24 மணிநேர கால அளவில் அதிக மழை தற்போது பெய்திருப்பதாக தமிழ்நாடு வெதர் மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.
  • 2014-ம் ஆண்டு அக்டோபர் 18 அன்று ஒரே நாளில் 162.9 மி.மீ மழை பெய்தது. இதுவே கடந்த 10 ஆண்டுகளில் ஒரே நாளில் பெய்த அதிக மழை பொழிவின் அளவாகும். அதன்பிறகு 2017-ம் ஆண்டு 116.4 மி.மீ மழை பெய்தது. தற்போது 133 மி.மீ மழை ஒரே நாளில் பெய்துள்ளது. 1969-ம் ஆண்டு அக்டோபர் 22-ம் தேதி பெய்த 297.7 மி.மீ என்ற அளவே சென்னையில் ஒரே நாளில் பெய்த அதிக மழையின் அளவாகும். 
  • இன்று முழுவதும் இந்த மழைப்பொழிவு தொடரும் என்றும், நாளை காலை வரை தொடர வாய்ப்பிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
  • அடுத்த சில மணிநேரங்களுக்கு சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் பலத்த மழை பொழிய இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.
  • பல பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதால், சாலைகளில் வெள்ளமாக நீர் ஓடிக் கொண்டிருக்கிறது. சென்னைக்கு குடிநீர் வழங்கக் கூடிய ஏரிகளில் நல்ல நீர்வரத்து ஏற்டத் தொடங்கியிருக்கிறது. 
  • சென்னை எழும்ப்பூரிலிருந்து செண்ட்ரல் செல்லக் கூடிய சாலையின் ஒருபக்க சாலை முற்றிலுமாக மூழ்கியுள்ளதால் வாகனப் போக்குவரத்து தடைபட்டிருக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *