2020-ம் ஆண்டின் இலக்கியத்திற்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவைச் சேர்ந்த கவிஞரான லூயிஸ் க்ளக் அவர்களுக்கு விருது அளிக்கப்பட்டுள்ளது.
அவர் 1943-ம் ஆண்டு நியூயார்க்கில் பிறந்தார். யேல் பல்கலைக்கழகத்தில் ஆங்கில பேராசிரியராகவும் பணிபுரிந்து வருகிறார்.
1968-ம் ஆண்டு Firstborn என்ற புத்தகத்தின் மூலம் கவிஞராக அறிமுகமாகினார். இதுவரை 12 கவிதைத் தொகுதிகளையும், கவிதைகள் குறித்தான பல கட்டுரைத் தொகுப்புகளையும் வெளியிட்டுள்ளார். 1993-ம் ஆண்டு புலிட்சர் விருதினையும் பெற்றுள்ளார்.
அவரது கவிதைகள் உலகளாவிய தேடுதலை நோக்கியதாக இருக்கிறது. அவரது படைப்புகளில் புராணங்கள் மற்றும் பழமையான கருப்பொருட்களைப் பற்றிய தாக்கத்தினைக் காணமுடிகிறது. குழந்தைப் பருவம் மற்றும் குடும்ப வாழ்க்கை, பெற்றோர்கள் மற்றும் உடன்பிறப்புகளுடனான நெருக்கம் போன்றவை அவரது படைப்புகளில் தெளிவாக வகைப்படுத்தப்பட்டிருக்கின்றன.
1992-ம் ஆண்டு வெளிவந்த ‘தி வைல்ட் ஐரிஸ்’ என்ற புத்தகத்தில் ‘ஸ்னோ டிராப்ஸ்’ எனும் கவிதையில் குளிர்காலத்திற்குப் பிறகு அற்புதமான வாழ்க்கை திரும்புவதை அவர் அற்புதமாக விவரிக்கிறார். 2006-ம் ஆண்டு வெளிவந்த Averno என்ற அவரது படைப்பும் முக்கியமானதாகும். இது மரணத்தின் கடவுளான ஹேடீஸின் சிறைப்பிடிப்பில் பெர்செபோனின் நரகத்திற்கு வந்த புராணத்தின் தொலைநோக்கு விளக்கமாகும். 2014-ம் ஆண்டு வெளிவந்த Faithful and Virtuous Night என்பதும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும் என்று நோபல் பரிசு அளிக்கும் நிறுவனம் தெரிவித்துள்ளது.
மருத்துவம், இயற்பியல், வேதியியல் உள்ளிட்ட துறைகளுக்கான இந்த ஆண்டின் நோபல் பரிசு அளிக்கப்பட்டுள்ளது. அக்டோபர் 12-ம் தேதி வரை இந்த விருதுகள் அறிவிக்கும் நிகழ்வு நடைபெற இருக்கிறது.
மற்ற விருதுகள் குறித்த விவரங்களுக்கு: