கடந்த புதன்கிழமை (8/10/20) பல்கலைக்கழக மானியக் குழு (University Grants commission – UGC) தகுந்த உரிமம் பெறாத ‘போலி ‘ பல்கலைக்கழகங்களின் பெயர் பட்டியலை வெளியிட்டுள்ளது.
மொத்தமாக 24 பல்கலைக்கழகங்களின் பெயர்கள் அதில் இடம்பெற்றுள்ளது. இதில் உத்திர பிரதேசத்தைச் சேர்ந்த பல்கலைக்கழகங்கள் தான் அதிகளவில் இடம் பெற்று உள்ளது. நாட்டின் தலைநகரான டெல்லியில் இரண்டாவது அதிகமான போலி பல்கலைக்கழகங்களின் பெயர்கள் இடம்பெற்றிருப்பது அதிர்ச்சி அளித்துள்ளது. இப்பட்டியலில் உள்ள பல்கலைக்கழகங்கள் அனைத்தும் பட்டம் வழங்குவதற்கு தகுதி அற்றவை என யு.ஜி.சி செயலாளர் ரஜ்னிஷ் ஜெயின் தெரிவித்துள்ளார்.
ஒன்றிய, மாநில, மாகாண சட்டத்தின் கீழ் நிறுவப்பட்ட ஒரு பல்கலைக்கழகம் அல்லது பாராளுமன்ற சட்டத்தால் அதிகாரம் பெற்ற ஒரு நிறுவனம் (குறிப்பாக பட்டத்தை அளிப்பதற்கு உருவாக்கப்பட்ட அமைப்பு) மட்டுமே ஒரு பட்டத்தை வழங்க முடியும் என்று யு.ஜி.சி சட்டம் கூறுகிறது.
உத்திரப் பிரதேத்தில் அமைந்துள்ள 8 போலி பல்கலைக்கழகங்களின் பெயர் பட்டியல் பின்வருமாறு:
1.வாரணசேய சமஸ்கிருத விஸ்வவித்யாலயா, வாரணாசி
2.மகிலா கிராம் வித்யாபித், அலகாபாத்
3.தேசிய மின் வளாக ஹோமியோபதி பல்கலைக்கழகம், கான்பூர்
4.நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் திறந்த வெளி பல்கலைக்கழகம், அலிகார்
5.விஸ்வ வித்யாலயா, மதுரா
6.மகாராணா பிரதாப் சிக்சா நிகேதன் விஸ்வவித்யாலயா, பிரதாப்கர்
7.இந்திரபிரஸ்தா சிக்சா பரிஷத், நொய்டா
8.பாரதிய சிக்சா பரிஷத், லக்னோ (இந்த பல்கலைகழகம் தொடர்பான வழக்கு லக்னோ நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது)
டில்லியில் அமைந்துள்ள 7 போலி பல்கலைக்கழகங்களின் பெயர் பட்டியல் பின்வருமாறு:
1.கமர்ஷியல் யுனிவர்சிட்டி லிமிடெட் 2.ஐக்கிய நாடுகளின் பல்கலைக்கழகம் 3.தொழிற்கல்வி பல்கலைக்கழகம்
4.ஏடிஆர் மய்ய நீதித்துறை பல்கலைக்கழகம்
5.இந்திய அறிவியல் மற்றும் பொறியியல் நிறுவனம்
6.விஸ்வகர்மா சுய வேலைவாய்ப்புக்கான திறந்தவெளி பல்கலைக்கழகம்
7.ஆத்யாத்மிக் விஸ்வவித்யாலயா (ஆன்மீக பல்கலைக்கழகம்)
மேற்கு வங்காளத்தில் அமைந்துள்ள 2 போலி பல்கலைக்கழகங்களின் பெயர் பட்டியல் பின்வருமாறு:
1.இந்திய மாற்று மருத்துவ நிறுவனம், கொல்கத்தா
2.மருத்துவம் மற்றும் ஆராய்ச்சி நிறுவனம், கொல்கத்தா
ஒரிசாவில் அமைந்துள்ள 2 போலி பல்கலைக்கழகங்களின் பெயர் பட்டியல் பின்வருமாறு:
1.நபபாரத் சிக்ஷா பரிஷத், ரூர்கேலா
2. வடக்கு ஒரிசா வேளாண்மை மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழகம்
இதைத் தவிர பெயர் பட்டியலில் புதுச்சேரி, ஆந்திரப் பிரதேசம், கேரளா மற்றும் மராத்திய மாநிலங்களில் தலா ஒரு போலி பல்கலைக்கழகங்கள் இடம்பெற்றுள்ளன. அவை ஶ்ரீ போதி உயர் கல்வி பல்கலைகழகம் புதுச்சேரி, கிறிஸ்து புதிய ஏற்பாடு ஆந்திரப் பிரதேசம், ராஜா அரபு பல்கலைக்கழகம், நாக்பூர், செயின்ட் ஜான்ஸ் பல்கலைக்கழகம், கேரளா மற்றும் சர்க்கார் உலக திறந்தவெளி பல்கலைக்கழக கல்வி சங்கம், கர்நாடகா.