வாட்ஸ் அப் Madras Review

வாட்சப் நிறுவனத்தின் புதிய பாலிசி ஏன் எதிர்க்கப்படுகிறது? நம்முடைய எந்தெந்த தகவல்களை பகிரப் போகிறது?

வாட்சப் நிறுவனம் தனது செயலியில் புதிய விதிமுறையைக் கொண்டு வந்திருக்கிறது. அதன் அடிப்படையில் வாட்சப்பில் நாம் பயன்படுத்தும் தகவல்களை பேஸ்புக் நிறுவனத்துடன் பகிர்ந்து கொள்ள இருக்கிறது. 

இதற்கான அப்டேட்டினை ஒவ்வொரு பயனருக்கும் வாட்சப் நிறுவனம் அனுப்பி வருவதுடன், இந்த நிபந்தனையை ஏற்றுக் கொண்டு Agree என்று கொடுக்காவிட்டால் பிப்ரவரி 8-ம் தேதிக்குப் பிறகு நம்முடைய வாட்சப் கணக்கு முடக்கப்படும் என்று அறிவித்திருக்கிறது. இது உலகம் முழுவதும் பல்வேறு கண்டனங்களை உருவாக்கியிருக்கிறது.

உலகம் முழுதும் வாட்சப் செயலியை சுமார் 200 கோடி பேர் பயன்படுத்தி வருகிறார்கள். கடந்த 2014-ம் ஆண்டு வாட்சப் செயலியினை வாங்கியதன் மூலம் அதனை ஃபேஸ்புக் நிறுவனம் தனதாக்கிக் கொண்டது.

டிஜிட்டல் பேமண்ட் துறையில் வாட்சப் நுழைந்தபிறகு வரும் நிபந்தனைகள்

தொடர்ந்து வாட்சப் நிறுவனம் பல்வேறு தகவல்களை ஃபேஸ்புக்குடன் பகிர்ந்து வந்த போதிலும், தற்போது புதிதாக வந்திருக்கும் அப்டேட்கள் பல்வேறு சர்ச்சைகளை உருவாக்கியுள்ளன. குறிப்பாக வாட்சப் நிறுவனம் டிஜிட்டல் பேமண்ட் எனும் பணப்பரிவர்த்தனை சேவையிலும், e-commerce ஆன்லைன் மார்க்கெட்டிலும் கால்வைத்துள்ள பிறகு இந்த நிபந்தனைகள் வெளிவந்திருக்கின்றன. 

இதையும் படிக்க: இந்தியாவின் சிறு வணிகத்தை குறிவைக்கும் ஜியோ-ஃபேஸ்புக் ஒப்பந்தம்

வாட்சப் நிறுவனத்தின் இந்த செயலானது சட்ட விரோதமானது மற்றும் தனிநபர் பாதுகாப்புக்கு எதிரானது என்று பல்வேறு கண்டனங்கள் உலகம் முழுவதும் எழத் தொடங்கியிருக்கின்றன. உங்கள் தனிப்பட்ட விவரங்களை வாட்சப் நிறுவனம் சேகரித்து ஃபேஸ்புக் நிறுவனத்திற்கு அனுப்புவதை நீங்கள் ஏற்றுக் கொள்ளாவிட்டால் உங்கள் வாட்சப் கணக்கு மூடப்படும் என்பதுதான் வாட்சப்பின் புதிய அணுகுமுறை.

வாட்சப் தவிர்த்த இதர Messaging செயலிகளுக்கு அதிகரிக்கும் ஆதரவு

வாட்சப்பின் இந்த செயல்பாடு பலருக்கும் கோபத்தை ஏற்படுத்தியிருப்பதால், Signal, Telegram உள்ளிட்ட வேறு Messaging செயலிகளுக்கு ஏராளமானோர் மாறத் தொடங்கியுள்ளனர். 

வாட்சப் நிறுவனத்தின் இந்த அறிவிப்பு வெளிவந்த சில மணி நேரங்களில் ‘Signal’ எனும் செயலியில் ஏராளமான புதிய பயனர்கள் இணைந்துள்ளதாக Signal நிறுவனம் தெரிவித்துள்ளது. 

சிக்னல் செயலியானது பயனாளர்களின் தனிப்பட்ட விவரங்களைப் பாதுகாக்கும் நோக்கிலும், அனுப்பப்படும் செய்திகள் encrypt செய்யப்பட்டு privacy பாதுகாக்கப்படும் நோக்கிலும் உருவாக்கப்பட்டது. குறிப்பாக நம்மை, நாம் அறியாமல் மூன்றாம் நபர் கண்காணிப்பதை தடுக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள அந்த செயலிக்கு இப்போது ஆதரவு கூடி வருகிறது. 

வாட்சப்பிலும் End-to-End encryption இருப்பதாக சொல்லப்பட்டாலும், அந்நிறுவனத்தின் தற்போதைய அறிவிப்புகள் அந்த நம்பிக்கையை உடைத்திருக்கின்றன. 

ஏற்கனவே ஜெர்மனியின் Data Privacy Commissioner உல்ரிச், தரவுகள் பாதுகாக்கப்பட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி, அரசாங்க நிறுவனங்கள் மற்றும் அமைச்சகங்களில் இருப்போர் வாட்சப் செயலியை பயன்படுத்த வேண்டாம் என கேட்டுள்ளார். 

ஃபேஸ்புக் நிறுவனமானது வாட்சப் மற்றும் இன்ஸ்டாகிராம் நிறுவனங்களை கையகப்படுத்தியதன் மூலமாக Monopoly-ஐ உருவாக்க முயல்வதாகவும், இதன் காரணமாக Anti Competitive Law அடிப்படையில் அந்நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கடந்த மாதம் அமெரிக்காவின் 48 மாகாணங்களிலும் வழக்கு பதியப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: இன்ஸ்டாகிராம், வாட்சப் நிறுவனங்களை இழக்குமா பேஸ்புக்? சட்டவிரோதமாக கையகப்படுத்தியதாக வழக்கு!

வாட்சப்பின் முந்தைய நிபந்தனைகளுக்கும், புதிய நிபந்தனைகளுக்கும் என்ன வேறுபாடு?

  • வாட்சப் நிறுவனம் முன்பிருந்தே நம்முடைய பல தகவல்களை பேஸ்புக் நிறுவனத்திடம் பகிர்ந்தே வந்திருக்கிறது. ஆனால் முன்பு நம்முடைய தகவல்களை பகிரக் கூடாது என மறுப்பதற்கான Option நமக்கு இருந்தது. தற்போது அந்த உரிமையை மறுக்கும் விதமாக புதிய நிபந்தனையை வாட்சப் நிறுவனம் வெளியிட்டுள்ளது. 
  • டிசம்பர் 2019 மற்றும் ஜூலை 2020-ல் வெளியிடப்பட்ட வாட்சப்பின் இரண்டு Policy ஆவணங்களும், ஃபேஸ்புக் குழுமத்தின் நிறுவனங்களுக்காக தகவல்கள் பகிர்ந்து கொள்ளப்படும் என்பதை தெரிவிக்கிறது.

    “As part of the Facebook family of companies, WhatsApp receives information from, and shares information with, this family of companies. We may use the information we receive from them, and they may use the information we share with them, to help operate, provide, improve, understand, customize, support, and market our Services and their offerings.”
  • ஆனால் மேற்கண்ட இரண்டு Policy ஆவணங்களிலும் நம்முடைய தகவலை ஃபேஸ்புக்கோடு பகிரக் கூடாது என்று நாம் மறுக்க இயலும்.

    “…you can choose not to have your WhatsApp account information shared with Facebook to improve your Facebook ads and products experiences. Existing users who accept our updated Terms and Privacy Policy will have an additional 30 days to make this choice by going to Settings > Account.”
  • 2021-ம் ஆண்டின் புதிய Policy ஆவணத்தில் இந்த Option நீக்கப்பட்டுள்ளது. நீங்கள் இந்த நிபந்தனையை ஏற்றுக் கொள்ளாவிட்டால் வாட்சப் கணக்கு முடக்கப்பட்டு விடும். 

என்னென்ன விவரங்கள் பகிரப்பட உள்ளது?

  • பரிவர்த்தனை விவரங்கள் (Transaction Data), 
  • சேவை தொடர்பான விவரங்கள் (Service Related Information),
  • மற்றவர்களோடு தொடர்பு கொள்ளும் விவரங்கள் (Information on how we interact with others) 
  • IP முகவரி (IP address)
  • பணப் பரிவர்த்தனை குறித்த தகவல்கள் (Transaction and Payment Data)

Transaction and Payment Data என்பது எதையெல்லாம் உள்ளடக்கியது?

வாட்சப் நிறுவனம் தனது policy ஆவணத்தில் பின்வருமாறு தெரிவிக்கிறது. 

“If you use our payments services, or use our Services meant for purchases or other financial transactions, we process additional information about you, including payment account and transaction information. Payment account and transaction information includes information needed to complete the transaction (for example, information about your payment method, shipping details and transaction amount).”

  • பணம் செலுத்தும் கணக்கு (Payment Account)
  • பரிவர்த்தனை விவரங்கள் (Transaction Information)
  • பரிவர்த்தனை முறை (Payment Method)
  • முகவரி குறித்த விவரங்கள் (Shippind Details)
  • பரிவர்த்தனை தொகை (Transaction Amount)

எனவே முன்பு வாட்சப் நிறுவனம் நம்மைப் பற்றி ஃபேஸ்புக்குடன் பகிர்ந்ததைக் காட்டிலும் இப்போது மிக அதிக அளவிலான தகவல்களை இனி பகிர இருக்கிறது. 

ஒரு தனியார் கார்ப்பரேட் நிறுவனம் நம்முடைய அனுமதியின்றி நம்முடைய தனிப்பட்ட விவரங்களை எடுத்து எப்படி இன்னொரு நிறுவனத்திற்கு பகிர முடியும் என்று டிஜிட்டல் சுதந்திரத்திற்கான செயல்பாட்டாளர்கள் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

One Reply to “வாட்சப் நிறுவனத்தின் புதிய பாலிசி ஏன் எதிர்க்கப்படுகிறது? நம்முடைய எந்தெந்த தகவல்களை பகிரப் போகிறது?”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *