காஷ்மீர் குழந்தைகள் AFP

பகுதி 3 – பிரிவு 370 நீக்கப்பட்ட ஒரு ஆண்டு காலத்தில் காஷ்மீரின் நிலை

இக்கட்டுரையின் முதல் இரண்டு பாகத்தினை இந்த இணைப்புகளில் படிக்கலாம்.
பிரிவு 370 நீக்கப்பட்ட ஒரு ஆண்டு காலத்தில் காஷ்மீரின் நிலை – பகுதி 1

பகுதி 2 – பிரிவு 370 நீக்கப்பட்ட ஒரு ஆண்டு காலத்தில் காஷ்மீரின் நிலை

முதல் இரண்டு பாகங்களின் தொடர்ச்சியே இது.

பொருளாதாரம்

ஆகஸ்ட் 2019 ஊரடங்கிற்குப் பிறகு ஜம்மு காஷ்மீர் பொருளாதாரம் பெரிய சரிவை சந்தித்துள்ளதாக Kashmir Chamber of Commerce (KCCI)  அறிக்கைகள் வெளியிட்டுள்ளது. 2019 ஆகஸ்ட் மாதம் துவங்கி ஊரடங்கின் முதல் நான்கு மாதத்தில் 17878.18 கோடி நட்டமாகியுள்ளதாக அவ்வறிக்கை தெரிவிக்கிறது. அதனைத் தொடர்ந்து 4,97,000 பேர் வேலை இழந்துள்ளனர்.

2020 ஜனவரி முதல் ஜுலை வரை 22,000 கோடி நட்டம் ஏற்பட்டுள்ளது. ஆகஸ்ட் 2019-ல் இருந்து ஜுலை 2020 வரை ஏறத்தாழ 40,000 கோடி நட்டம் ஏற்பட்டுள்ளதாக KCCI கூறுகிறது.

ஆகஸ்ட் 2019-க்குப் பிறகு தேவை குறைந்துவிட்டதுடன், மக்களின் வாங்கும் திறன் சுருங்கி விட்டதால் உற்பத்தித் துறையும் வணிகமும் முழுமையாக தடைபட்டுவிட்டது. இதில் மிகவும் பாதிக்கப்பட்ட துறைகள் விவசாயம், தோட்டக்கலை, சுற்றுலா, கட்டுமானம், கைவினைப் பொருட்கள் உற்பத்தி, தொலைதொடர்பு, தகவல் தொழில்நுட்பம், போக்குவரத்து, ரியல் எஸ்டேட் மற்றும் சில்லறை வணிகம்.  ஏறத்தாழ 50% உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.

வங்கிகள் முடங்கியுள்ளதால் 41 வங்கிகளின் பிரதிநிதிகளை உள்ளடக்கிய  ஜம்மு காஷ்மீர் மாநில வங்கிக் குழு மத்திய ரிசர்வ் வங்கியை அணுகி, வராக்கடன் குறித்தும் மூலதன ஒதுக்கீடு குறித்தும், சிறப்பு தொகுப்பு குறித்தும் விவாதித்து வருகிறது. 

ஜம்மு காஷ்மீரில் பாதிக்கப்பட்ட தொழில்துறை நிறுவனங்களுக்கு நிதிச் சலுகைகளும், நிவாரணங்களும் கொடுக்கப்படும் என்று உறுதியளிக்கப்பட்டது. ஆனால் இதுவரை அதுபோன்ற எந்த தொகுப்பும் அறிவிக்கப்படவில்லை. புதிய சட்டத்தின்படி ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் சுரங்க தொழிலுக்கு ஏலம் விடப்பட்டுள்ளது. அந்த ஏலத்தை எடுத்த அனைத்து நிறுவனங்களும் ஜம்மு காஷ்மீர்  அல்லாத மாநிலத்தைச் சார்ந்தவர்கள் என்பது குறிப்பிடதக்கது.

ஆப்பிள் உற்பத்தி

இந்தியாவில் ஆப்பிள் உற்பத்தியில் முதல் நிலையில் உள்ளது ஜம்மு காஷ்மீர் மாநிலம். ஏறன்த்தாழ ஜம்மு காஷ்மீரின் பொருளாதராத்தில் 10% ஆப்பிள் உற்பத்திதான். பேக்குவரத்து பாதிக்கப்பட்டதால் கடந்த 11 மாதத்தில் 1.35 லட்சம் மெட்ரிக் டன் தேக்கமடைந்துவிட்டது. ஏறத்தாழ அதன் மதிப்பு 14,000 கோடியைத் தாண்டும். மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி, National Cooperative Marketing Federation of India அவற்றை வாங்கி வினியோகம் செய்யும் என்று உறுதியளிக்கப்பட்டது. ஆனால் NAFED வெறும் 70.45 கோடிக்கான பழங்களை மட்டும்தான் வாங்கியுள்ளது. சரக்கு போக்குவரத்து செலவு மூன்று மடங்கு அதிகரித்ததால் ஆப்பிள் உற்பத்தியாளர்கள் திவால் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இணைய வசதி இல்லாததால் ஆன்லைன் கட்டணம் செலுத்த முடியாமல் பணப் பரிமாற்றங்கள் முடங்கியுள்ளது. இதனால் ஒட்டுமொத்த வணிகமும் தடைபட்டுள்ளது. 

சுற்றுலா துறை

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் உள்நாட்டு உற்பத்தியில் 8% சதவீதமானது, சுற்றுலா துறையை நம்பியுள்ளது. அரசு அறிக்கையின்படி 86-90% சுற்றுலா துறை முடங்கிவிட்டது. இதனால் 1,44,500 பேர் வேலை இழந்துள்ளனர்.  

C:\Users\Admin\Desktop\1.png

மார்ச் மாதம் ஜம்மு காஷ்மீர் நிர்வாகம் புதிய சுற்றுலா கொள்கைகளை வெயிட்டுள்ளது. ஜூலை மாதம் புதிய House boat policy வெளியிட்டுள்ளது. அந்த வரைவு பரிந்துரைத்த விதிமுறைகளையும், வழிகாட்டுதல்களையும் கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது. புதிய படகுகளை பதிவு செய்தல், பழையவற்றை புதுப்பித்தல், டால் மற்றும் நகீன் (Dal &Nageen) பள்ளத்தாக்கில் படகு செலுத்துவதற்கு உரிய அனுமதி பல்வேறு துறைகளிடம் இருந்து மூன்று மாதத்திற்குள் அனுமதி  பெறவேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. இது குறித்து இந்தியா டுடே பத்திரிக்கை பின்வருமாறு கூறியுள்ளது.

”இந்த புதிய விதிமுறைகள் கடுமையானதாகவும், மிகமிக கண்டிப்பானதாகவும் அமைந்துள்ளது. மூன்று மாதத்திற்குள் புதுப்பிக்கவில்லை என்றால் இந்த தொழிலைக் கைவிட வேண்டிய நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளனர். ஒரு சுற்றுலாப் படகை புதுப்பிக்க மூன்று மாதகால அவகாசம் போதாது. இருந்தும் இதுபோன்ற நிர்பந்தத்தை அரசு திணித்துள்ளது. இந்த சுற்றுலாப் படகுத் தொழிலை நம்பி லட்சக்கணக்கானவர்கள் உள்ளனர்.  இந்த மாற்றங்கள் நேரடியாக அவர்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும்”

C:\Users\Admin\Desktop\24_trans_NvBQzQNjv4BqqVzuuqpFlyLIwiB6NTmJwfSVWeZ_vEN7c6bHu2jJnT8.jpg
சரக்கு மற்றும் மக்கள் போக்குவரத்துத் துறை

2019 ஆகஸ்ட் முதல் டிசம்பர் மாதம் வரை போக்குவரத்து மற்றும் தொலைதொடர்பு துறைக்கு 2,267 கோடி ரூபாய் நட்டமாகியுள்ளதாக Kashmir Chamber of Commerce (KCCI) அறிக்கை கூறுகின்றது.

ஆப்பிள் பழங்களை ஏற்றிக்கொண்டு இந்தியா முழுவதும் சென்று சேர்க்கும் லாரி தொழில் முற்றும் தடைபட்டுவிட்டது. ஜம்மூ காஷ்மீர் மாநிலம் மூன்று பாகங்களாக உடைக்கப்பட்ட பிறகு பல்வேறு புதிய நிர்வாக நடைமுறைகளால் லாரி ஓட்டுனர்கள் ஆபத்து கருதி வேலைக்குச் செல்லவில்லை. அக்டோபர் மாதம் சோபியான் (shopian) பகுதியில் இரண்டு லாரி ஓட்டுநர்கள் சுட்டுகொள்ளப்பட்டனர். லாரியும் தீவைத்து கொளுத்தப்பட்டது. அரசுப் போக்குவரத்துகள் முடக்கப்பட்டதால் பொதுமக்களின் வாழ்வு அடியோடி பாதிக்கப்பட்டது. தனியார் வாகன உரிமையாளர்கள் தனது வாகனத்திற்கு வாங்கிய கடனை திருப்பி செலுத்தமுடியாத நிலையில் இருக்கின்றனர். 12 மாதங்களாக கடன் தவணையை கட்ட முடியாததால் வட்டி அதிகமாகிக் கொண்டே போவதை உணர்ந்து தனது வாகனங்களை விற்கும் நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளனர். 

இதேபோல் சிறு, குறு நிறுவனங்கள் துவங்கி பெட்டிக்கடை வைத்திருப்பவர்கள் வரை அனைவரும் மிக மோசமான பொருளாதார நெருக்கடியை சந்தித்து வருகின்றனர். தனது அன்றாட வாழ்க்கைக்குத் தேவையான உணவு, மருத்துவம் மற்றும் கல்வி போன்ற செலவுகளுக்கு பணம் இல்லாமல் தவித்து வருகின்றனர். ஜுலை 2020 கணக்கின்படி ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் வேலையின்மை 17.9% சதவீதமாக உயர்ந்துள்ளது. இது இந்தியாவின் தேசிய சராசரியான 9.5% சதவீதத்தைவிட இரண்டு மடங்கு அதிகமாக உள்ளது. இந்த பொருளாதாரப் பின்னடைவில் இருந்து மீண்டு வருவது ஜம்மூ காஷ்மீர்   மக்களின் மூன்னால் இருக்கும் மிகப்பெரிய சவால்.

ஊடகங்கள் மீதான நெருக்கடி

2019 ஆகஸ்ட் 5-ம் தேதிக்குப் பிறகு ஜம்மூ காஷ்மீர் மாநிலத்தில் வெளிவந்த அனைத்து பத்திரிக்கைகளும், தீவிர தணிக்கைகளுக்கு உட்படுத்தப்பட்டது. பத்திரிக்கைகளில் வரும் செய்திகள், கருத்துகள், தலையங்கங்கள் உட்பட அனைத்தும் தணிக்கைக்கு உட்படுத்தப்பட்டது. சமகால அரசியல் பொருளாதார சிக்கல்களை விவாதிக்காத பொதுவான செய்திகளே பெரும்பாலும் வெளிவருகின்றன. பல்வேறு பகுதிகளில் இருந்து பத்திரிக்கையாளர்கள், களநிலவரங்களை ஆய்வு செய்தாலும் அதைத் தொகுத்து அனுப்புவதற்கு இணையதள சேவை இல்லாமல் தடை ஏற்படுத்தப்பட்டது. அந்த தடைகளையும் தாண்டி சேகரித்து அனுப்பப்பட்ட செய்திகள் தணிக்கைகளில் வெட்டி எறியப்பட்டது. 

C:\Users\Admin\Desktop\New_Media_Policy_2020_J&K.jpg

ஒன்றிய அரசு ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கான புதிய ஊடகக் கொள்கைகளை கடந்த ஜுன் 2-ம் தேதி வெளியிட்டது. இந்த கொள்கைகள் அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு நடைமுறையில் இருக்கும் என்று தெரிவிக்ககப்பட்டுள்ளது. ”53 பக்கங்கள் கொண்ட அந்த கொள்கைகள் அரசியல் அமைப்பு சட்டத்தின் அடிப்படை உரிமைகளுக்கு எதிரானதாகவும் பத்திரிக்கை சுதந்திரத்திற்கு விரேதமானதாகவும் உள்ளது” என்று ஜம்மு காஷ்மீர்   பத்திரிக்கையாளர் சங்கம் போராட்டம் நடத்தி வருகிறது. புதிய ஊடகக் கொள்கையை எதிர்த்து பல்வேறு சர்வேதச பத்திரிக்கைகளும் கண்டனம் தெரிவித்துள்ளது. 

ஒரு செய்தியை வெளியிடுவதற்கு முன்பு மேற்கொள்ள வேண்டிய தணிக்கை மட்டுமல்லாது, அவை வெளியிட்டதற்கு பிறகான விளைவுகள் மீதான நடவடிக்கை குறித்தும் புதிய ஊடக கொள்கைகள் விவாதிக்கிறது. இந்த போக்கு பத்திக்யைளர்களுக்கு மிகப்பெரிய அச்சத்தையும், தயக்கத்தையும் ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக பத்திரிக்கை ஆசிரியர்களுக்கும் உரிமையாளர்களுக்கும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. 

ஊடகங்களைக் கட்டுப்படுத்த அரசுக்கு தடையற்ற அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளதை பின்வரும் பரிந்துரைகள் தெரிவிக்கின்றன.

  • Determine what constitutes “fake, anti-national, or unethical” news. 
  • Pursue punitive action against editors, media entrepreneurs, owners, publishers and journalists.
  • Become the exclusive accreditor of journalists, pending a government-issued “security clearance”, with the rights normally afforded to journalists now subject to approval.
  • Perform “background checks on newspaper publishers, editors and key staff members” 
  • Determine whether media should have the ability to receive what presently constitutes most advertising revenues.

ஒரு செய்தி போலியானது என்றோ, தேசத்திற்கு விரேதமானது என்றோ, நெறிமுறையற்றது என்றோ முடிவேடுக்கும் அதிகாரம் அரசிடம் உள்ளது. எது தேசத் துரோகம் அல்லது எது நெறிமுறைகளற்றது என்ற வரையறை அரசின் விருப்பு வெறுப்புக்கு உட்பட்டது. அப்படி அரசு குற்றம் என்று வரையறுத்துவிட்டால் அதன் மீதான தண்டனைகளை அரசே முடிவு செய்யலாம். உரிமையாளர், ஆசிரியர், பத்திரிக்கையாளர், பதிப்பாளர் என்று யார் மீது வேண்டுமானாலும் அரசு நடவடிக்கை எடுக்கலாம். பிரத்யேகமான பத்திரிக்கையாளர் அங்கீகாரம் அரசிடம் இருந்து பெற வேண்டும். பத்திரிக்கையாளர்களின் கடந்த கால பின்னணி குறித்து விசராணைக்கு உட்படுத்தலாம். அதேபோல் விளம்பரத்தினுடாக கிடைக்கும் வருமானங்கள் மீள்பரிசீலனை செய்யப்படும். குறிப்பாக அரசு விளம்பரங்களுக்கு கொடுக்கும் முன்னுரிமை.

எது சரி, எது தவறு என்கிற இறுதி முடிவு ஆட்சியாளர்களின் கையில்தான் இருக்கிறது. இது ஜனநாயகத்தின் முக்கியத்துவத்தினை குறைக்கும் நடவடிக்கையாக இருக்கிறது. இதுபோன்ற சர்வாதிகார அரசு முறையின் போக்கினை இந்தியா போன்ற ஜனநாயகக் குடியரசு நடைமுறைப்படுத்த முடியாது..

இந்த கொள்கைகள் நடைமுறைக்கு வருவதற்கு முன்பே ஜம்மு காஷ்மீர் ஊடகங்கள் பல்வேறு நெருக்கடிகளை தொடர்ந்து சந்தித்து வந்துள்ளனர். அந்த நெருக்கடிகளை இயல்பான போக்காக மாற்றும் வண்ணம் அமைந்துள்ளது இந்த புதிய ஊடகக் கொள்கை 2020.

இதற்கு முன்பே கடந்த காலங்களில் பத்திரிக்கையாளர்களின் பயணம் தடை செய்யப்பட்டுள்ளது, உபகரணங்கள் அபகரிக்கப்பட்டுள்ளது, உபகரணங்கள் உடைக்கப்பட்டுள்ளது, ஊடகவியலாளர்கள் வார்தைகளால் காயப்படுத்தப்பட்டுள்ளனர், உடல் ரீதியாகவும் தாக்கப்பட்டுள்ளனர், அடையாளம் தெரியாத துப்பாக்கிச் சூட்டுக்கு கூட பலியாகியுள்ளனர். பல பத்திரிக்கையாளர்கள் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர், மிரட்டப்பட்டுள்ளனர், அதிகாரிகளால் இழுத்து வரப்பட்டுள்ளனர், என்ன மாதிரியான செய்திகள் வெளியிட வேண்டும் என்று நிர்பந்திக்கப்பட்டுள்ளனர். வெளியிடப்பட்ட செய்திகள் மீதான விளக்கங்கள் கேட்கப்பட்டுள்ளது. பத்திரிக்யைளர்களின் சமூக வலைதளங்கள் முடக்கப்பட்டுள்ளது. அவர்கள் PSA மற்றும் UAPA போன்ற கொடிய சட்டத்தீன் கீழ் வழக்கு பதியப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். 

இவ்வனைத்தையும் கடக்காமல் ஒரு நியாயமாக பத்திரிக்கையாளன் ஜம்மூ காஷ்மீர் பகுதியில் பணியாற்ற முடியுமா என்ற கேள்வியும் எழவே செய்கிறது.  பீர்ஸாடா ஆஷிக்,  மஸ்ரத் சஹ்ரா , கெளஹெர் கிலானி போன்றோர் மீது பதியப்பட்ட வழக்குகளே இதற்கு சாட்சி. பல்வேறு பத்திரிக்கையாளர்களின் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களால் சில ஜம்மு காஷ்மீர் பத்திரிக்கை உரிமையாளர்கள் ஆகஸ்ட் 5-க்குப் பிறகு அரசை பகைத்துக் கொள்ளக் கூடாது என்பதால் உரிய செய்திகளை வெளியிட மறுக்கும் சூழலும் இருக்கிறது. இன்னும் சில பத்திரிக்கை நிறுவனங்கள் தங்களுக்குக் கிடைக்கும் அரசு விளம்பரங்கள் தடைபட்டு விடக்கூடாது என்பதற்காக தங்கள் போக்கில் மாற்றத்தை ஏற்படுத்திக் கொண்டனர். சில ஆங்கிலப் பத்திரிக்கைகள் தலையங்கங்கள் வெளியிடுவதை நிறுத்திக்கொண்டனர். 

கடந்த 70 ஆண்டுகளாக மிகப்பெரிய அரசியல் நெருக்கடியை சந்தித்து கொண்டிருக்கும் ஜம்மு காஷ்மீர் நிலப்பரப்பு இன்றைய எதார்த்தத்தில் ஏராளமானவற்றை இழந்து நிற்கிறது. எந்த வரலாற்றையும் தனித்துவத்தையும் பாதுகாக்க போராடினார்களோ அவ்வனைத்தும் பறிப்போயிருக்கிறது.  

குப்கர் தீர்மானம் 

C:\Users\Admin\Desktop\FL25GUPKAR.jpg

அரசியல், சமூகப் பொருளாதாரம், வாழ்வியல் என அனைத்தும் சிதைக்கப்பட்டுள்ளது. இந்த சூழ்நிலையில் கடந்த வாரம் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் உள்ள அனைத்து கட்சிகளும் (பாஜக தவிர்த்து) ஒன்று கூடி ஒரு ஆண்டுக்கு முன் 2019 ஆகஸ்ட் 4-ம் தேதி வெளியிட்ட குப்கர் அறிவிப்பை (Gupkar Declaration August 4, 2019 மீண்டு வலியுறுத்தியுள்ளனர். 

இந்திய அரசு ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் சிறப்பு அதிகாரத்தை ரத்து செய்வதற்கு ஒரு நாள் முன்பு முன்னாள் முதலமைச்சர் ஃபாரூக் அப்துல்லாவின் வீட்டில் ஆகஸ்ட் 4-ம் தேதி பாஜக தவிர்த்த அனைத்து கட்சிகளும் ஒன்று கூடி எடுக்கப்பட்ட முடிவுதான் குப்கர் அறிவிப்பு. அந்த அறிப்பு பின்வருமாறு அமைந்துள்ளது.

“united and defend identity, autonomy and the special status of the JK against all attacks and onslaughts whatsoever” while describing “any modification, abrogation of Articles 370 and 35A unconstitutional, and process of delimitation or trifurcation of the state aggression against the people of Jammu, Kashmir and Ladakh.”

ஒரு ஆண்டுக்குப் பிறகும் மீண்டும் அதனை வலியுறுத்தி தீர்மானம் கொண்டுவந்துள்னர். தனக்கு இருந்த குறைந்தபட்ச அரசியல் உரிமையை திரும்பப் பெரும் போராட்டத்தில் காஷ்மீரின் அரசியல் கட்சிகள் இன்று ஒற்றை இலக்கை நோக்கி நகர்கின்றனர். இதே சூழ்நிலையில் சாமானிய மக்கள்  உணவு, மருத்துவம், கல்வி, வேலைவாய்ப்பு போன்ற அடிப்படைகளையும் இழந்து நிற்கிறார்கள். காஷ்மீரிகளை விடாது துரத்தும் அச்சம், விரக்தி, சோர்வு போன்றவை எப்போது முடிவுக்கு வரும்?

அவர்களின் உரிமை வாழ்வில் எப்போது மலர்ச்சி ஏற்படும்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *