தேர்தல் களம் 2021: கன்னியாகுமரி,குளச்சல், நாகர்கோவில் தொகுதிகளில் வெற்றி யாருக்கு? – கன்னியாகுமரி மாவட்டம் – பாகம் 4

கன்னியாகுமரி தொகுதி யார் பக்கம்?

கன்யாகுமரி சட்டமன்ற தொகுதி இந்த மாவட்டத்தின் மற்ற தொகுதிகளை விட வித்தியாசமனது.

திராவிட கட்சிகளின் தொகுதி

1967 க்கு பிறகு இங்கு எந்த தேசிய கட்சியும் வெற்றி பெற வில்லை அதே போல மாவட்டதின் மற்ற பகுதிகளை போல இங்கு பி ஜே பி காங்கிரஸ் அமைப்பு வலிமையும் கிடையாது முழுக்க முழுக்க இங்கு திராவிட கட்சிகளே வலுவாக உள்ளது. பச்சைமால், தளவாய்சுந்தரம், சுரேஷ் ராஜன் என்று மூன்று அமைச்சர்களை உருவாக்கிய தொகுதி கன்னியாகுமரி உட்பட பேருராட்சிகளும், கிராம ஊராட்சிகளை மட்டுமே கொண்ட கிரமபுற தொகுதி

2009 தேர்தல் வரை இது திருச்செந்துர் நாடாளுமன்ற தொகுதிக்குள் வந்ததால் டெல்லிக்கு செல்ல ஆசைபடும் தேசிய கட்சியினர் இந்த தொகுதியை கண்டு கொள்ளவில்லை என்பதும் ஒரு காராணம் . தொகுதியின் முக்கிய தொழில்கள் மீன் பிடி விவசாயம், சுற்றுலா, பூ வணிகம் ஆகியவையாகும்.

தொகுதி மக்களின் பிரச்சினைகள்

இந்த தொகுதி மீனவர்கள் மேல்மணகுடியில் அமைய உள்ள சரக்கு பெட்டக துறைமுகத்தை வலுவாக எதிர்கிறார்கள் மேலும் கடல் அரிப்பை தடுப்பதற்கு நீண்ட நாட்களாக கோரிக்கை வைத்து வருகிறார்கள், சுற்றுலா தளமான இங்கு சில்லரை வணிகத்தில் அதிகளவு வெளி மாநிலத்தவர்கள் ஈடுபடுவதால் உள்ளுர் வணிகர்கள் பாதிப்புக்குள்ளாகிறார்கள்.

இந்த தொகுதியில் அதிக அளவு நெல் விவசாயம் செய்யப்படுக்றது அதற்கான உரிய விலை கிடைக்கவில்லை என்ற குற்றச்சாட்டை விவசாயிகள் வைக்கிறார்கள். அதிக அளவு கிராமங்களை கொண்ட தொகுதி இது. ஆனால் கிராமங்களுக்கிடையே போக்குவரத்தை இன்னும் அதிகபடுத்த வேண்டும் என்றும் கோரிக்கை வைகிறார்கள். தோவாளை பூகட்டும் தொழிலாளர்கள் கொரோனா பேரிடரில் வாழ்வாதாராம் இல்லாமல் இருந்த போது அரசு பெரிய உதவிகள் செய்யவில்லை என்று குற்றம் சாட்டுகிறார்கள். இங்கு திமுக அதிமுக இரண்டிலுமே வேட்பாளர் யார் என்பதும் இறுதி நேர பிரச்சாரங்களுமே வெற்றியை தீர்மனிக்கும்

குளச்சல் தொகுதி யார் பக்கம்?

கன்னியாகுமரி மாவட்டத்தில் மீன்பிடித்தலும் விவசாயமும் சரிசமாக நடைபெறும் தொகுதிகளில் ஒன்று குளச்சல். இது இரணியல், திங்கள்நகர், குளச்சல் உள்ளிட்ட 13 பேருராட்சிகளை உள்ளடக்கியது.

கடந்த தேர்தல்கள் வரலாறு

1957-62ல் காமராஜரின் இரண்டாவது அமைச்சரவையில் உள்ளாட்சித்துறை அமைச்சராகவும் மீன்வளத்துறை அமைச்சராகவும் பதவி வகித்த லூர்தம்மாள் சைமன் சட்டமன்ற உறுப்பினராக இருந்த தொகுதி என்பதாலும் ஒரளவு மீனவர் வாக்குகள் அதிகம் உள்ள தொகுதி என்பதாலும் இங்கு மீனவ வேட்பாளரை நிறுத்த கோரிக்கை வைக்கப்படுகிறது.

இத்தொகுதியில் ஐந்துமுறை காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளது, திமுக அதிமுக தலா இரண்டு முறை வெற்றிபெற்றுள்ளது. அதனால் திமுக கூட்டணியில் குளச்சல் தொகுது மீண்டும் காங்கிரசுக்கு ஒதுக்கபடும் என்று எதிர்பார்க்கபடுகிறது. பாஜாக குமரி மாவட்டத்தில் தன் அடித்தளம் அமைக்க காரணமாக இருந்த மண்டைகாடு கலவரம் நடந்த பகுதி இந்த தொகுதிகுள் வருவதால் அதிமுக கூட்டணியில் பிஜேபி கேட்கும் தொகுதி பட்டியலில் குளைச்சலும் இருக்கிறது. அப்படி பாஜகவிற்கு தொகுதியை கொடுக்கும் பட்சதில் மீண்டும் இங்கு சமுக பதற்றம் எற்படும் அபாயமும் இருக்கிறது

தொகுதி மக்களின் பிரச்சினைகள்

கன்னியாகுமரி மாவட்டதின் மற்ற தொகுதிகளை போலவே இங்கும் கிராமங்களை இணைக்கும் சாலை அமைப்பது தான் மக்களின் நீண்டகால பிரச்சனையாகும் அதே போல ஏவிம் கால்வாய் உடப்ட மாவட்டதில் உள்ள ஏரி குளங்களை தூர்வாருவதும் இங்கு நீண்டகால கோரிக்கையாக இருக்கிறது.

மணவாளக்குறிச்சி பகுதியில் மத்திய அரசின் அரிய வகை மணல் ஆலை இயங்கி வருகிறது. இதனால் இந்த சுற்றுவட்டார பகுதிகளில் கதிரியக்கம் அதிக அளவில் இருக்கிறது. மணல் ஆலையை சுற்றியுள்ள கடற்கரை கிராமங்களில் ஆண்டுக்கு 30 பேர் வரை புற்றுநோயால் மரணித்து வருகின்றனர். அதனால் குமரி மாவட்டத்தில் புற்றுநோய் ஆராய்ச்சி மையம் அமைக்க வேண்டும். அதேபோல நாகர்கோவில் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனையில் புற்றுநோயாளிகளுக்கான நவீன சிகிச்சை வசதியை ஏற்படுத்தவேண்டும். என்றும் கோரிக்கை வைக்கிறார்கள்

ஓக்கி புயலில் சிக்கி அதிக மீனவர்கள் இறந்த தொகுதியும் இதுவே. அதனால் மத்திய மாநில அரசுகள் மீது மக்களுக்கு கோபம் இன்னும் இருக்கிறது. கொரோனா காலத்தில் இந்த பகுதியை சேர்ந்த 600க்கும் மேற்பட்ட மீனவர்கள் வளைகுடா நாடுகளில் சிக்கிய போது அரசுகள் சரியாக செயல்படவில்லை என்ற வருத்தமும் மக்களுக்கு இருக்கிறது. 2019 நாடாளுமன்ற தேர்தல் வாக்கு வித்தியாசத்தையும் கூட்டணி கணக்குகளையும் பார்க்கும் போது மீண்டும் திமுக கூட்டணி வெற்றிபெறும் என்று தெரிகிறது.

நாகர்கோவில் தொகுதி யார் பக்கம்?

கன்னியாகுமரி மாவட்டத்தின் ஒரே நகரபகுதியான நாகர்கோவில் தொகுதியில் 1996 க்கு பிறகு இங்கு திமுகவும் அதிமுகவும் மட்டுமே வெற்றிபெற்றுள்ளன.. 2011 பாரதிய ஜனதாவின் முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணனே பொட்டியிட்டு மூன்றாவது இடத்திற்கு தான் வர முடிந்தது, அதிமுக கூட்டணி பலத்தில் இங்கிருந்து சட்டமன்றம் செல்ல பாஜக திட்டமிட்ட நிலையில் கடந்த இரண்டு தேர்தலில் அதிமுக சார்பாக போட்டியிட்டு 2011 வெற்றியும் 2016 தொல்வியும் அடைந்த நாஞ்சில் முருகேசன் சசிகலாவை சந்தித்து ஆதரவு தெரிவித்தது அதிமுக கூட்டணிக்கு பெரும் பலவீனம்.

தொகுதி மக்களின் பிரச்சினைகள்

நாகர்கோவில் நகர பகுதியை பொறுத்தவரையில் போக்குவரத்து நெருக்கடிதான் பிரதான பிரச்னையாக உள்ளது. காலை, மாலை வேளைகளில் மட்டுமல்ல எல்லா நாட்களிலும் நாள் முழுவதும் போக்குவரத்து நெருக்கடி பெரும் பிரச்னையாக மாறியுள்ளது. இதனால் நகர பகுதிக்கே மக்கள் வந்து செல்ல முடியவில்லை.

இந்த தொகுதியில் வேலை இல்லா படித்த இளைஞர்கள், பட்டதாரிகள் எணிக்கையும் அதிகம். மாநராட்சிக்கு குடிநீர் கொண்டுவரும் புதிய திட்டங்கள் எதுவும் செயல்படுத்தபடாமல் இருப்பதும் பெரும் குறையாக இருக்கிறது. திமுக கூட்டணியும் அதிமுக கூட்டணியும் சமபலத்தில் உள்ள இந்த தொகுதி வெற்றி வாய்ப்பை வேட்பாளர் தேர்வே முடிவு செய்யும் அதிமுக கூட்டணியில் முன்னாள் அமைச்சர் தளாவாய் சுந்தரம் வேட்பாளர் ஆக்கப்பட்டால் திமுகவின் சுரேஷ் ராஜனுக்கு கடும் போட்டி கொடுப்பார் என்றும் பாஜக போட்டியிட்டால் திமுகதான் வெற்றி பெறும் என்றும் தொகுதிவாசிகள் கூறுகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *