.
2020 கொரானா காலத்தில் இன்ஸ்டாகிராம் லைவ் ( Instagram Live) காணொளியில் கிரிக்கெட் வீரர் யுவராஜ் தனது சக கிரிக்கட் வீரரை ‘ பாங்கி’ என குறிப்பிட்டு பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது. பாங்கி என குறிப்பிடப்படுபவர்கள் பஞ்சாப் மற்றும் ஹரியானாவில் பெரும்பாலும் துப்புறவு பணியில் ஈடுபட்டுவரும் அட்டவனையில் கீழ் வரும் மக்கள் ஆவார்கள். சாதிய படிநிலையில் மிகவும் அழுத்தபட்டு அதனால் பல கொடுமைகளுக்கு ஆளாகி வருபவர்கள்.
தனது சக வீரர் ஒருவர் ஊரடங்கின் போது குடும்பத்துடன் குடித்துவிட்டு ஆட்டம் போடும் டிக்டாக் வீடியோவை பற்றி பேச்கையில் ‘பாங்கி’ என சாதி பெயரை அவரை குறிப்பிட யுவராஜ் பயன்படுத்தினார். இந்த பேச்சுக்கு இ.த.ச 153(அ), 153(ஆ) மற்றும் எஸ்ஸி, எஸ்டி வன்கொடுமை தடுப்புசட்டம் 1989 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதியபட்டு விசராணை நடந்து வருகிறது.
இதற்கிடையில் தன் மீதான வழக்கை தள்ளுபடி செய்ய வலியுறித்தி யுவராஜ் சிங் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். வழக்கை விசாரித்த நீதிபதிகள், வழக்கை தள்ளுபடி செய்ய முடியாது எனவும், காவல்துறை அவரை கைது செய்யாமல் இருக்க மட்டும் இடைக்கால நிவாரணம் ஒன்றை அளித்தது. மேலும் நீதிபதி, ஒரு சொல்லை சொல்லும் முன் (முக்கியமாக பிரபலமானவர்கள்) சிந்தித்து செயல்பட வேண்டும் என யுவராஜ் சிங்கிற்கு அறிவுரை கூறி வழக்கு விசாரணையை அடுத்த மாதத்திற்கு ( மார்ச் 26 2021) ஒத்திவைத்தார்.
இதே போன்ற ஒரு சம்பவம் இந்திய – ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் போட்டியின் போதும் நடந்தது குறிப்பிடத்தக்கது. இந்திய அணியின் பந்து வீச்சாளர் அஷ்வினும் ஃபீல்டிங் பயிற்ச்சியாளர் சிரிராமும் தங்களுக்குள் இணையத்தில் பேசிக்கொள்ளும் போது சக வீரர் ஒருவரை குறிப்பிட்டு ‘பறகேடி அவன்’ என்று பேசினார்கள். சாதிய வன்மம் அல்ல என்று குற்றம்சாட்டபட்டவர்கள் மறுத்தாலும் இது போன்று தொடர்ந்து நடப்பது கிரிக்கெட் பிரபலங்கள் மத்தியில் வாடிக்கையான ஒன்றாக இருக்கிறது.
கருப்பின மக்களின் போராட்டதிற்கு ஆதரவாக ஹர்திக் பாண்டியா ஐ.பி.எல் போட்டியின் போது மண்டியிட்டு ஆதரவு தெரிவித்தார். ஆஸ்திரேலியாவில் இந்திய வீரர் சிராஜுக்கு எதிரான ‘வெறி’ சொற்களை அஷ்வினே கண்டித்தார்.
இந்திய வீரர்கள் உலக அளவில் நிறவெறிக்கு எதிராக பேசினாலும் அவர்களே சாதியவாதிகளாக இருப்பது ’இரட்டை நிலைபாடு’ என சமூக செயற்பாட்டாளர்களால் கண்டனத்துக்குள்ளானது.
இதே ஹர்திக் பாண்டியாவோ அஷ்வினோ தமிழர்களை இழிவாக பேசிய பாஜக அமைச்சர்களை எதிர்த்தோ தொடரும் தலித் பெண்கள்/ஆதிவாசிகளின் படுகொலைகள் குறித்தோ ஒரு நாளும் வாய் திறந்தது கிடையாது என்பதே கசப்பான உண்மை.
சொந்த நாட்டில் நடக்கும் எந்த பிரச்சனையிலும் பாதிக்கப்பட்டவர்களின் குரலாக இல்லாமல் சமயம் கிடைக்கும் போது வசை சொற்களாக, சமூக அடுக்கில் தாழ்தப்பட்ட இருக்கும் சாதி பெயர்களை பயன்படுத்துவது கிட்டதட்ட 100% உயர் சாதிகளை உள்ளடக்கிய இந்திய கிரிக்கட் அணியனரின் வாடிக்கையாக உள்ளது. இவர்களின் மீது கடுமையான நடவடிக்கை தேவை என்பது செயற்பாட்டாளர்களின் கருத்தாக இருந்து வருகிறது.