ஆகஸ்ட் 5-ம் தேதி ஒரு பக்கம் ராமர் கோயிலுக்கான அடிக்கல்லை நாட்டிக் கொண்டு இது நாட்டின் ஒற்றுமைக்கும் அமைதிக்குமான அடையாளமாகத் திகழும் என்று நரேந்திர மோடி பேசிக் கொண்டிருந்தார். மறுபுறம் பாஜக-வின் முக்கியத் தலைவர்கள் அனைவரும் 1992-ம் ஆண்டு கலவரத்தில் ஈடுபட்டு பாபர் மசூதியை இடித்துத் தள்ளிய காவி வன்முறை கும்பலை தியாகிகள் என்று ட்விட்டரில் பாராட்டிக் கொண்டிருந்தனர்.
வன்முறைக் காணொளிகளை நாட்டின் ஒற்றுமைக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் பெருமையுடன் பகிர்ந்து கொண்டிருந்தனர். பாபர் மசூதியை இடித்து நாட்டின் ஒருமைப்பாட்டை சீர்குலைத்த கரசேவகர்களாகிய வன்முறையாளர்களின் புகைப்படங்களையெல்லாம் பெருமைப்படுத்திக் கொண்டிருந்தனர். இந்த ட்வீட்களில் சிலவற்றை HuffingtonPost இணையதளம் தொகுத்துள்ளது.
பாஜக-வின் தேசிய பொதுச்செயலாளரான பி.எல்.சந்தோஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிந்திருந்தது,
சண்டிகர் மாநில பாஜக-வின் பேச்சாளரான கெளரவ் கோயல், அயோத்தியில் நடந்தது ஒரு போராட்டமல்ல என்றும், ஒரு ஒளிமயமான புது அத்தியாயத்தின் துவக்கம் என்றும் குறிப்பிட்டிருந்தார். மேலும் பாபர் மசூதியின் உச்சியில் நின்று இடிக்கும் கரசேவகர் எனும் காவிகளின் புகைப்படத்தை பதிந்து, ராமர் கோயிலுக்காக போராடியவர்களுக்கு தலை வணங்குகிறேன் என்று தெரிவித்துள்ளார்.
பாஜக-வின் தேசிய செயலாளரான ஒய்.சத்யகுமார், காவல்துறையின் சித்ரவதைக்கும், தாக்குதலுக்கும் உள்ளான எண்ணற்ற கரசேவகர்களின் தியாகத்தினை நினைவு கூர்வோம் என்றும், முலாயம் சிங் யாதவ் இந்து தர்மத்தை கேலிப்பொருளாக்கி, இன்னொரு பிரிவினரை சமாதனம் செய்வதற்காக இதை செய்ததாகவும் பதிவிட்டுள்ளார்.
ஹர்ஷ் பக்தார் எனும் எனும் ABVP அமைப்பினைச் சேர்ந்தவரும் கெளரவ் கோயலின் அதே பதிவினை எழுதியிருந்தார்.
இதுவரை பாஜக தொழில்நுட்பப் பிரிவினைச் சேர்ந்த அதிகாரப்பூர்வமற்ற நபர்கள் மட்டும் பரப்பி வந்த வன்முறைக்கு ஆதரவான கருத்துகளை, தற்போது ஆளும் கட்சியான பாஜக-வின் தலைவர்களே பேச ஆரம்பித்திருப்பது, நாட்டின் மதச்சார்பின்மையை ஆபத்தில் தள்ளி இருப்பதாக சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவிக்கிறார்கள்.