Rhapsody august

ஹிரோசிமா -நாகசாகி: பார்க்க வேண்டிய 5 முக்கிய திரைப்படங்கள்

75 ஆண்டுகளுக்கு முன் இந்த தினங்களில் தான் ஜப்பானின் ஹிரோசிமா, நாகசாகி ஆகிய நகரங்கள் மீது அமெரிக்க ராணுவம் அணுகுண்டுகளை வீசி தரைமட்டமாக்கியது. உலகில் அணுகுண்டு பயன்படுத்தப்பட்ட முதல் பேரழிவுகளாக ஹிரோசிமாவும், நாகசாகியும் திகழ்கின்றன. ஆகஸ்ட் 6ம் தேதி ஹிரோசிமா மீதும், ஆகஸ்ட் 9-ம் தேதி நாகசாகி மீதும் அணுகுண்டுகள் வீசப்பட்டன.

அணுகுண்டு பயன்பாடு என்பது எவ்வளவு மோசமானது என்பதும், அணுக்கதிர்வீச்சுகள் எப்படி மனித இனத்தினை மீண்டெழாமல் அழிக்கும் என்பது குறித்தும் நாம் தெரிந்து கொள்ள வேண்டியது முக்கியம். ஹிரோசிமா-நாகசாகியை உலகம் நினைவு கூர்ந்து கொண்டிருக்கும் இந்த நாட்களில் அப்பேரழிவின் நினைவலைகளை சுமந்து எடுக்கப்பட்ட முக்கிய திரைப்படங்களை உங்கள் பார்வைக்கு வைக்கிறோம்.

இன்னும் பல முக்கிய திரைப்படங்கள் இருந்தாலும் Youtube தளத்தில் முழுமையாகக் காணக்கிடைக்கும் படங்களை மட்டும் இங்கே அளிக்கிறோம்.

Rhapsody in August

1991-ம் ஆண்டு உலகின் மிகச் சிறந்த இயக்குநரான அகிரா குரசேவா அவர்களால் இத்திரைப்படம் எடுக்கப்பட்டது. 1945-ம் ஆண்டு நாகசாகியில் நடத்தப்பட்ட அணுகுண்டு தாக்குதலில் கணவரை இழந்த வயதான பெண்மணியைச் சுற்றி நகரும் கதை. நாகசாகியின் நினைவுகளைக் கொண்ட மூன்று தலைமுறைகளை இத்திரைப்படம் பேசுகிறது. 

Atomic Café

1982-ம் ஆண்டு வெளியிடப்பட்ட இப்படம், அணு ஆயுதங்களுக்கு ஆதரவான அமெரிக்க பிரச்சார திரைப்படங்களின் சில வீடியோ கிளிப்-களைப் பயன்படுத்தி, அதன் பின்னே இருக்கும் பொய்களை அம்பலப்படுத்தும் விதமாக இது அமைந்திருக்கிறது. 

Barefoot Gen

1983-ம் அனிமேசன் தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்ட இத்திரைப்படம், ஹிரோசிமா அணுகுண்டு தாக்குதலுக்குப் பிறகான வாழ்க்கை எப்படி இருந்தது என்பதனை ஒரு குழந்தையின் கண்களின் வழியே வெளிப்படுத்துகிறது.

Children of Hiroshima

1952-ம் ஆண்டு ஜப்பானில் வெளிவந்த இந்த திரைப்படம், இரண்டாம் உலகப் போரின் கோரங்களையும், ஹிரோசிமா-நாகசாகி அணுகுண்டு தாக்குதல்களின் கொடுமைகளையும் கண்முன்னே கொண்டுவருகிறது.

White Light  Black Rain: the Destruction of Hiroshima and Nagasaki

2007-ம் ஆண்டு வெளியான இப்படம் அணுகுண்டு தாக்குதலில் இருந்து மீண்டு உயிர்பிழைத்து, இதுவரை வெளியில் பேசாத பலரின் நேர்காணல்களை வெளிக்கொண்டுவந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *