corona lungs

கொரோனாவிலிருந்து மீண்ட 90% பேருக்கு நுரையீரல் பாதிப்பு – சீன ஆய்வில் தகவல்

கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்களில் 90% பேருக்கு நுறையீரல் பழுதுகள் ஏற்பட்டுள்ளதாக சீனாவின் ஆய்வு முடிவு வெளியிட்டுள்ளது.

சீனாவின் ஊகான் பல்கலைக்கழகத்திற்கு உட்பட்ட சோங்னான் (Zhongnan Hospital) மருத்துவமனையின் அதிகாரிகள்  கொரோனா நோயில் இருந்து முழுமையாக குணமடைந்த 100 பேரிடம் நடத்திய ஆய்வில்  90 பேருக்கு நுரையீரல் பாதிப்படைந்திருப்பதை கண்டுபிடித்துள்ளனர். அவர்கள் ஆய்வுக்கு எடுத்துக் கொண்டவர்களின் சராசரி வயது 59.

ஆய்வுக்கு எடுத்துக் கொண்டவர்களில் 90% பேரின் நுரையீரலின் உட்பகுதி காயமடைந்துள்ளதாகவும், நுரையீரலின் காற்றோட்டம் சீராக இல்லை என்றும், அதேபோல் மூச்சுப் பரிமாற்ற செயல்பாடு இன்னும் இயல்பான மனிதர்களுக்கு இருப்பதைவிட குறைவாக உள்ளது  என்றும் தெரிவித்துள்ளனர். 

சராசரியாக ஆரோக்கியமானவர்கள் 500 மீட்டருக்கு அதிகமாக நடப்பது இயல்பு. கொரோனா தொற்றுக்கு உள்ளாகி குணமடைந்தவர்கள் 6 நிமிடத்திற்கு 400 மீட்டர்தான் நடக்க முடிந்துள்ளது. ஆனால் அவர்களால் அந்த இலக்கை அடைய முடியவில்லை. 

மருத்துவமனையிலிருந்து குணமடைந்து வீடு திரும்பி மூன்று மாதங்கள் ஆனபோதிலும் அவர்களில் சில பேர் ஆக்சிஜன் இயந்திரத்தின் துணையுடன்தான் சுவாசித்துக் கொண்டிருக்கிறார்கள் என்றும் சீன மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த ஆய்வில் மிக அதிர்ச்சிகரமான தகவல் என்னவென்றால், ஒருமுறை வைரஸ் தாக்கியவருக்கு மீண்டும் தொற்று ஏற்படாமல் இருக்க வேண்டுமென்றால் அதனை தொடர்ந்து எதிர்க்கும் ஆண்டிபாடிஸ் (Antibodies) என்றழைக்கப்படும் எதிர்ப்பு சக்தியானது அவர்களின் உடலில் தொடர்ந்து இருக்க வேண்டும். ஆனால் இதில் குணமடைந்தவர்களின் உடம்பில் இருந்து 10 சதவீதம் பேருக்கு அத்தகைய ஆண்டிபாடிஸ் மறைந்துவிட்டது. எனவே 10% சதவீதம் பேர் மீண்டும் கோரோனா தொற்றுக்கு உள்ளாகும் வாய்ப்பும் இருப்பதாக தெரிவித்துள்ளனர்.

இதில் இன்னும் கூடுதல் அதிர்ச்சி என்னவென்றால், ஆய்வுக்கு உட்படுத்தியவர்களில் 5% பேருக்கு நியூக்ளிக் அமில சோதனைகள் (Nucleic Acid tests) செய்தால் நெகட்டிவ் என்று வருகிறது. ஆனால் இம்யூனோகுளோபுலின் M சோதனை (Immunoglobulin M (IgM) tests) செய்தால் பாசிட்டிவ் என்று வருகிறது. எனவே அவர்கள் திரும்பவும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அதேபோல் தொடர் சிகிச்சையும் அளிக்கப்பட்டு வருகிறது. 

ஆய்வுக்கு உட்படுத்திய 100 பேருக்கும் நோய் எதிர்ப்பு சக்தி முழுமையாக மீண்டும் வரவில்லை. நோயை எதிர்க்கும் அடிப்படையான B-செல் குறைந்த அளவில்தான் உள்ளது. உடலின் ஒட்டுமொத்த நோய் எதிர்ப்பு சக்தி இயல்பானவர்களை விட குறைவாக உள்ளதால் அவர்கள் பல்வேறு தொற்றுகளுக்கு ஆளாக வாய்ப்புகள் உள்ளது என  மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *