கடந்த மாதம் 18-ம் தேதி நார்வேயைச் சேர்ந்த எரிக் சோல்ஹேய்ம் சென்னையில் தமிழ்நாட்டு முதலைமைச்சர் ஸ்டாலினை சந்தித்து சென்றிருக்கிறார். சுற்றுச்சூழல் தொடர்பில் வளர்ந்த மேற்குலக நாடுகளின் மரபுசாரா ஆற்றல் – மின்சாரத்தில் இயங்கும் தொழில்நுட்ப சாதனக் கண்டுபிடிப்புகளை வளரும் நாடுகளில் உற்பத்தி செய்யும், சந்தைப்படுத்தும் முயற்சிக்கான அதிகாரப்பூர்வமற்ற முகவராக செயல்படுகிறார். இது தொடர்பிலே அவரது தமிழ்நாட்டு, இந்திய சுற்றுப்பயணம் அமைந்தது.
மேலும் பார்க்க தமிழ்நாட்டில் QUAD-ன் திட்டம்: யானை வருகிறது பின்னே மணியோசை வந்து சென்றிருக்கிறது முன்னே!Tag: அமெரிக்கா-சீனா
சீனாவின் முழுக்கட்டுப்பாட்டில் வரும் இலங்கையின் கொழும்பு துறைமுக நகரம்! புவிசார் அரசியலில் தமிழர்களுக்கு சூழும் நெருக்கடி!
இந்த சீனக் கட்டுப்பாட்டு பிராந்தியத்திற்குள் நுழைவதற்கு தனிச் சிறப்பு கடவுச் சீட்டு (Special Passport) அவசியமாகும். மேலும் இக்குறிப்பிட்ட பிராந்தியத்தில் சீன யுவான் பணப்பரிமாற்றத்திற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது
மேலும் பார்க்க சீனாவின் முழுக்கட்டுப்பாட்டில் வரும் இலங்கையின் கொழும்பு துறைமுக நகரம்! புவிசார் அரசியலில் தமிழர்களுக்கு சூழும் நெருக்கடி!தமிழீழ இனப்படுகொலையும், அமெரிக்க மற்றும் சீனாவின் புவிசார் அரசியலும்!
தமிழீழத்தின் பிரதிநிதிகளான தமிழீழ விடுதலைப் புலிகளும் அழிக்கப்பட்டதையடுத்து, இலங்கைத் தீவை மையப்படுத்தி பின்னிருந்து இயங்கிய வல்லாதிக்கங்களின் இந்தோ- பசுபிக் புவிசார் அரசியல் நலனுக்கான போட்டி, தற்காலத்தில் முன்களத்தை வந்தடைந்திருக்கிறது. தமிழினப் படுகொலை என்ற புள்ளியிலிருந்து வேகமாக விரிவடையத் தொடங்கிய அது, இந்த 12 ஆண்டுகளில் உலக புவிசார் அரசியலின் மையமாக மாறியிருக்கிறது.
மேலும் பார்க்க தமிழீழ இனப்படுகொலையும், அமெரிக்க மற்றும் சீனாவின் புவிசார் அரசியலும்!இலங்கை மீதான ஐ.நா தீர்மானமும், இந்தியாவின் இலங்கை ஆதரவு நிலையும்
ஐ.நா மனித உரிமைகள் ஆணையத்தில் இலங்கை அரசு குறித்தான தீர்மானம் நேற்று வாக்கெடுப்பிற்கு வைக்கப்பட்டது. இந்திய அரசு தீர்மானத்தினை ஆதரிக்காமல் வாக்கெடுப்பில் பங்கேற்காமல் தவிர்த்தது தமிழ்நாட்டில் பெரும் அதிருப்தியை உருவாக்கியுள்ளது. எதிர்க்கட்சிகள் அனைத்தும் பாஜகவிற்கு கடுமையான கண்டனங்களை தெரிவித்து வருகிறார்கள்.
மேலும் பார்க்க இலங்கை மீதான ஐ.நா தீர்மானமும், இந்தியாவின் இலங்கை ஆதரவு நிலையும்தமிழர்கள் விழிப்பாக கவனிக்க வேண்டிய அமெரிக்க உயர்மட்ட செயலாளர்களின் ஆசியப் பயணம்
சீனாவை மையப்படுத்திய அமெரிக்காவினது ‘இந்தோ- பசுபிக் கடற்பிராந்திய’ வெளியுறவுக் கொள்கையினது அரசியல் போக்கு இப்பிராந்தியத்தை மேலும் சிக்கலுக்கு உள்ளாக்கும். அமெரிக்கா மற்றும் சீனாவிற்கான முரண் இந்தளவிற்கு தீவிரமடையாத காலத்திலே இக்கடற் பிராந்தியத்தில் இவைகளின் புவிசார் அரசியல் நலனுக்காக தமிழீழத்திலும், மியான்மாரின் ரைகனிலும் இரு இன அழிப்புகளை நடத்தி முடித்திருக்கிறது.
மேலும் பார்க்க தமிழர்கள் விழிப்பாக கவனிக்க வேண்டிய அமெரிக்க உயர்மட்ட செயலாளர்களின் ஆசியப் பயணம்வேகமெடுக்கிறது இந்தோ-பசுபிக் கடற்பிராந்தியத்தில் அமெரிக்காவின் அரசியல்; QUAD தலைவர்களின் கூட்டத்தில் பேசப்பட்டது என்ன?
(இந்தோ – பசுபிக் கடற்பிராந்திய) நாற்தரப்புக் கூட்டணி கூட்டம் நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் நாற்தரப்புக் கூட்டு நாடுகளின் உச்சத் தலைவர்களான அமெரிக்க அதிபர் ஜோ பைடன், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, ஜப்பான் பிரதமர் யோஷிஹைட் சுஹா மற்றும் ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிஸன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
மேலும் பார்க்க வேகமெடுக்கிறது இந்தோ-பசுபிக் கடற்பிராந்தியத்தில் அமெரிக்காவின் அரசியல்; QUAD தலைவர்களின் கூட்டத்தில் பேசப்பட்டது என்ன?இம்ரான் கானின் இலங்கை பயணத்தின் புவிசார் அரசியல் என்ன?
இந்தியா, ஜப்பான், இலங்கை கூட்டு முயற்சியில் ஆரம்பிக்கப்பட்ட திட்டமான, கொழும்பு துறைமுக கிழக்கு- சரக்கு பெட்டக முனையத் திட்டத்திலிருந்து இந்தியா மற்றும் ஜப்பானை இலங்கை நீக்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.
மேலும் பார்க்க இம்ரான் கானின் இலங்கை பயணத்தின் புவிசார் அரசியல் என்ன?மொரீஷியஸ் நாட்டுடனான இந்தியாவின் ஒப்பந்தமும், அமெரிக்க-சீன பனிபோரின் களமாக மாறும் இந்தோ-பசுபிக் பிராந்தியமும்
இந்தியா மொரீஷியசுடன் தடையற்ற வணிக ஒப்பந்தம் மற்றும் விரிவான பொருளாதாரக் கூட்டு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டிருக்கிறது. இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கரின் மொரீஷியஸ் சுற்றுப் பயணத்தில் இவ்வொப்பந்தங்கள் கையெழுத்தாகி இருக்கின்றன. இவற்றுடன் இந்தியாவிடமிருந்து மொரீஷியஸ் 10 கோடி அமெரிக்க டாலர் மதிப்புடைய ராணுவத் தளவாடங்களை கடனாகப் பெறும் ஒப்பந்தமும் கையெழுத்தாகி இருக்கிறது.
மேலும் பார்க்க மொரீஷியஸ் நாட்டுடனான இந்தியாவின் ஒப்பந்தமும், அமெரிக்க-சீன பனிபோரின் களமாக மாறும் இந்தோ-பசுபிக் பிராந்தியமும்