கடந்த ஆண்டு இதே நாள், கொரோனா தொற்றுப் பரவலுக்காக பிரதமர் நரேந்திர மோடி திடீரென தொலைக்காட்சிகளில் தோன்றி இன்று இரவு முதல் ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக அறிவித்தார்.
எந்த திட்டமிடலும் இல்லாமல், தொழிலாளர்களின் வாழ்க்கை என்னவாகப் போகிறது, வெளிமாநிலங்கள் பணிபுரியும் ஏழை தொழிலாளர்கள் என்னவாகப் போகிறார்கள், மக்கள் உணவுக்கு என்ன செய்யப் போகிறார்கள் என்று எதையும் சிந்திக்காமல் அறிவித்த ஊரடங்கினால் மக்கள் பட்ட பாடுகளை சொல்லி மாளாது.
அதிலும் குறிப்பாக சொந்த ஊரை விட்டு வயிற்றுப் பிழைப்புக்காக வெளிமாநிலங்களில் பணிபுரியும் புலம்பெயர் தொழிலாளர்கள் நடந்தே ஊருக்குத் திரும்பிய காட்சிகள் அனைவரையும் உலுக்கின. குழந்தைகளையும், மூட்டை முடிச்சுகளையும் தூக்கிக் கொண்டு கால்கடுக்க நடந்தனர். 900-க்கும் மேற்பட்டோர் ஊருக்கு திரும்பும் வழியிலேயே மடிந்து போயினார்.
போக்குவரத்து வசதியின்றி, உணவுக்கான உதவியின்றி நடு சாலையில் கைவிடப்பட்ட மக்களின் புகைப்படங்கள் அளித்த துயரம் இன்னும் நம் மனதில் வடுக்களாய் உள்ளன.
துயரம் மிக்க வரலாறு மீண்டும் தொடராமல் இருக்க, துயரத்தினை நினைவூட்டும் கடமை நமக்கு இருக்கிறது. ஊரடங்கில் புலம்பெயர் தொழிலாளர்களின் துயரத்தினை வெளிப்படுத்தும் புகைப்படத் தொகுப்பினை இங்கு அளிக்கிறோம்.
மகாராஷ்டிராவின் நாசிக் நெடுஞ்சாலையில் தங்கள் உடைமைகள் மற்றும் செல்லப் பிராணிகளுடன் நடந்து செல்லும் தொழிலாளிகள்
டெல்லியிலிருந்து உத்திரப் பிரதேசத்தின் ராம்பூருக்கு நடந்து செல்லும் வழியில் புழுதிப் புயலில் சிக்கியதால் புழுதியில் சிக்கியதால் கான்கிரீட் பைப்களுக்குள் அடைக்கலம் புகுந்திருக்கிறார்கள்.
டெல்லியிலிருந்து உத்திரப் பிரதேசத்திற்கு தனது குடும்பத்துடன் நடந்து செல்லும் தொழிலாளியின் குடும்பம்
டெல்லியில் தொழிலாளி ஒருவர் தனது மாற்றுத் திறனாளி பெண்ணை மிதிவண்டியில் வைத்து தள்ளிச் செல்கிறார்
35 வயதான பிரதீப் மாற்றுத் திறனாளி. புலம்பெயர் தொழிலாளியான இவர் ஊரடங்கு அறிவிக்கப்பட்டதால் அகமதாபாத்திலிருந்து, ராஜஸ்தானில் உள்ள தனது சொந்த ஊருக்கு செல்வதற்காக போக்குவரத்திற்கு வழி கிடைக்குமா என்று வலியுடன் காத்துக் கிடக்கிறார்.
அகமதாபாத்தில் ரயில்வே டிராக் வழியாக நடந்து செல்லும் தொழிலாளிகள்
குஜராத்தின் அகமதாபாத்திலிருந்து உத்திரப் பிரதேசத்திற்கு செல்வதற்கு ரயிலுக்காக காத்திருக்கும் தொழிலாளிகள்
வெயிலில் நடந்து நடந்து கொப்புளமாகிப் போன புலம்பெயர் தொழிலாளியின் கால்
மார்ச் 26, 2020 அன்று டெல்லியிலிருந்து தனது 5 வயது மகனை தோளில் சுமந்து கொண்டு மத்தியப் பிரதேசத்தை நோக்கி நடந்து செல்லும் தொழிலாளி
மதுராவிலிருந்து சொந்த ஊருக்கு செல்வதற்காக, ஆக்ரா-டெல்லி நெடுஞ்சாலையில் லாரி ஒன்றில் ஆடுகளைப் போல அடைத்துக் கொண்டு போகும் புலம்பெயர் தொழிலாளர்கள்
ராஜஸ்தான் ஜெய்பூரில் தங்கள் சொந்த ஊருக்கு செல்வதற்காக பேருந்து கிடைக்கிறதா என்று பார்க்கவும், முகாம்களுக்கும் செல்லும் மக்கள்
தனது சொந்த ஊரான ஒடிசாவிற்கு நடந்து செல்லும்போது, சாலையை கடக்கும்போது சிறிய விபத்துக்குள்ளான தாயைப் பார்த்து மகனான சிறுவன் அழுதுகொண்டிருக்கிறார்.
புனே-பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் ட்ராலி ஒன்றில் தனது குழந்தையை அமர வைத்துக் கொண்டு நடந்தே சொந்த ஊருக்கு செல்லும் தொழிலாளி
பீகாரின் பாட்னாவில் தனது பெட்டியில் குழந்தையை படுக்க வைத்துவிட்டு இழுத்துச் செல்கிறார்
சென்னை செண்ட்ரல் ரயில் நிலையத்தில் ஸ்ராமிக் ரயிலுக்காக காத்திருக்கும் ராஜஸ்தான் மற்றும் மேற்கு வங்கத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள்
பஞ்சாபிலிருந்து உத்திரப் பிரதேசத்திற்கு நடந்து செல்லும் பெண் தொழிலாளி தூங்கி விழும் தனது குழந்தையை பெட்டியின் மீது படுக்க வைத்து விட்டு இழுத்துச் செல்லும் இந்த புகைப்படம் அனைவரையும் உருக வைத்தது.
PTI புகைப்படவியலாளர் அதுல் யாதவ் எடுத்த இந்த புகைப்படம் இணையதளங்களில் வைரலாகப் பரவியது. தனது 1 வயது மகன் இறந்தபோது, இறுதியாக தன் மகனைப் பார்க்க டெல்லியிலிருந்து பீகாருக்கு செல்லும்போது எல்லையில் தடுக்கப்பட்டுவிட்டார். தன் மகனின் முகத்தை இறுதியாகப் பார்க்க முடியாமல் தொலைபேசியில் கதறி அழும் தொழிலாளி ராமின் அழுகை அனைவரையும் உலுக்கியது.
டெல்லியிலிருந்து உத்திரப் பிரதேசத்திற்கு செல்வதற்காக டெம்போ ஒன்றில் முண்டியடித்துக் கொண்டு ஏறும் தொழிலாளர்கள்.
மோசமான பருவநிலை சூழலிலும் கூட உத்திரப் பிரதேசத்திலிருந்து பல நூறு கிலோமீட்டர் தூரங்களுக்கு குழந்தைகளை தூக்கிக் கொண்டு நடந்து செல்லும் தொழிலாளிகள்
பேருந்து வருமா என்றூ ஏக்கத்துடன் காத்திருக்கும் தொழிலாளிகள்
உத்திரப் பிரதேசத்தில் முகாமுக்கு செல்வதற்காக வரிசையில் காத்திருக்கும் தொழிலாளிகள்
One Reply to “ஊரடங்கின் ஒரு ஆண்டு: தடம் மறையாத துயரங்கள் – புகைப்படத் தொகுப்பு”
இன்றில்லா விட்டாலும் என்றாவது ஒருநாள் மத்திய பாஜக அரசாங்கம் மக்களிடம் மன்னிப்பு கேட்கும் நேரம் வந்தே தீரும். அன்று மக்கள் மன்னிக்க மாட்டார்கள். தண்டனை தருவார்கள்.
இன்றில்லா விட்டாலும் என்றாவது ஒருநாள் மத்திய பாஜக அரசாங்கம் மக்களிடம் மன்னிப்பு கேட்கும் நேரம் வந்தே தீரும். அன்று மக்கள் மன்னிக்க மாட்டார்கள். தண்டனை தருவார்கள்.