கடந்த இரண்டு வார காலத்திற்கும் மேலாக தொடர்ந்து நடைபெற்று வரும் விவசாயிகள் போராட்டத்தில் 15 விவசாயிகள் போராட்டத்தின்போதே உயிரிழந்திருக்கிறார்கள்.
விவசாயிகளின் கோரிக்கைகளை ஏற்றுக் கொள்ளாமல் அரசு தாமதித்துக் கொண்டிருக்கும் ஒவ்வொரு நாளும் சராசரியாக ஒரு விவசாயி போராட்டக் களத்திலேயே இறந்து கொண்டிருக்கிறார்.
10 விவசாயிகள் மாரடைப்பினாலும், 4 விவசாயிகள் விபத்தினாலும், ஒரு விவசாயி குளிரினை தாங்க இயலாமலும் இறந்திருக்கிறார்.
டெல்லிக்கு விவசாயிகள் போராட்டத்திற்காக புறப்பட்டு வந்து கொண்டிருந்த போது நவம்பர் 24-ம் தேதி ககன் சிங் என்ற விவசாயி கார் ஒன்று மோதி உயிரிழந்தார். அவர்தான் இப்போராட்டத்தில் உயிரிழந்த முதல் விவசாயி ஆவார். அதன் பிறகு தன்னா சிங் என்ற விவசாயி காவல்துறையின் தடுப்புகளைத் தாண்டி டெல்லிக்கு டிராக்டரில் வேகமாக முன்னேறும்போது விபத்தில் உயிரிழந்தார்.
மாரடைப்பால் உயிரிழந்த விவசாயிகளில் இரண்டு பெண் விவசாயிகளும் அடக்கம். டெல்லியை நோக்கி முன்னேறும்போது ஏராளமான விவசாயிகள் காயமும் அடைந்தனர்.
மகிந்தர் கெளர் என்ற பெண்மணி போராட்டத்தின் போது தனது கால் உடைந்த பிறகும், போராட்டம் முடியாமல் திரும்ப மாட்டேன் என்று அங்கேயே காத்திருக்கிறார்.
போராட்டத்தில் இறந்த விவசாயிகள்
- நவம்பர் 24 : ககன் சிங்
- நவம்பர் 27: தன்னா சிங்
- நவம்பர் 28: கஜ்ஜன் சிங்
- நவம்பர் 29: ஜனக் ராஜ்
- நவம்பர் 30: குருதேவ் சிங்
- டிசம்பர் 2: குர்ஜந்த் சிங்
- டிசம்பர் 3: குர்பச்சான் சிங் சிபியா, பல்ஜிந்தர் சிங்
- டிசம்பர் 4: லக்வீர் சிங்
- டிசம்பர் 7: கர்னாயில் சிங்
- டிசம்பர் 8: குர்மாயில் கெளர், மேவா சிங், அஜய் குமார், லக்வீர் சிங்