தேர்தல் கருத்துக்கணிப்பு

தமிழ்நாடு உள்ளிட்ட 5 மாநில தேர்தல்களில் யார் யாருக்கு வெற்றி? சி வோட்டர்ஸ் கருத்துக்கணிப்பு முடிவுகள்

5 மாநிலங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளதையொட்டி டைம்ஸ் நவ் மற்றும் சி வோட்டர்ஸ் நிறுவனம் இணைந்து நடத்திய தேர்தல் கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியாகி உள்ளன. இக்கருத்துக்கணிப்பின் படி, தமிழ்நாட்டில் திமுக கூட்டணியும், மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரசும், கேரளாவில் இடதுசாரிகளும், அசாம் மற்றும் பாண்டிச்சேரியில் பாஜகவின் தேசிய ஜனநாயகக் கூட்டணியும் வெற்றியைப் பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

5 மாநில தேர்தல்களில் 3 மாநிலங்களில் ஆளும் கட்சியின் ஆட்சியே தொடரும் என்றும், தமிழ்நாட்டிலும், பாண்டிச்சேரியிலும் மட்டும் ஆட்சி மாற்றம் நடைபெறும் என்றும் சி வோட்டர்ஸ்சின் தேர்தலுக்கு முந்தைய கருத்துக் கணிப்பின் முடிவுகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மாநில வாரியான முடிவுகள் இதோ:

1. தமிழ்நாடு

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை திமுக, காங்கிரஸ், மதிமுக, விடுதலை சிறுத்தைகள், இடதுசாரிகள், இந்திய யூனியன் முஸ்லீம் லீக், மனிதநேய மக்கள் கட்சி, தமிழக வாழ்வுரிமைக் கட்சி மற்றும் இதர கட்சிகள் உள்ளடக்கிய மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி மொத்தமுள்ள 234 இடங்களில் 158 இடங்கள் வரை பெற்று ஆட்சியமைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிமுக, பாஜக, பாமக, தேமுதிக கூட்டணியானது 65 இடங்கள் வரை பெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

கூட்டணிவெற்றி பெற வாய்ப்புள்ள இடங்கள்2016 தேர்தலில் வெற்றி பெற்ற இடங்கள்ஏற்றம்/இறக்கம்வாக்கு சதவீதம்
திமுக +158986043.20
அதிமுக+65136-7132.10

2. மேற்கு வங்காளம்

மேற்கு வங்காளத்தில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியே மீண்டும் ஆட்சி அமைக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. கடந்த தேர்தலில் மொத்தமுள்ள 294 தொகுதிகளில் 211 தொகுதிகளில் வெற்றி பெற்றிருந்த திரிணாமுல் காங்கிரஸ் இந்த தேர்தலில் 154 தொகுதிகளில் வெற்றி பெறும் என்று கணிக்கப்படுகிறது. அதே சமயம் கடந்த 2016 சட்டமன்றத் தேர்தலில் வெறும் 3 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்ற பாஜக, இத்தேர்தலில் 107 தொகுதிகளில் வெற்றி பெற்று மிகப்பெரும் வளர்ச்சியைப் பெறும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ், இடதுசாரிகள் இணைந்த கூட்டணியானது வெறும் 33 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற வாய்ப்பிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

கூட்டணிவெற்றி பெற வாய்ப்புள்ள இடங்கள்2016 தேர்தலில் வெற்றி பெற்ற இடங்கள்ஏற்றம்/இறக்கம்வாக்கு சதவீதம்
திரிணாமுல்+154211-5742.20
பாஜக+107310437.50
காங்கிரஸ்+3376-4314.80

3. கேரளா

கேரளாவில் ஆளும் பிணராயி விஜயன் தலைமையிலான இடதுசாரிகள் கூட்டணியானது மொத்தமுள்ள 140 தொகுதிகளில், 82 தொகுதிகளில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் கூட்டணியானது 56 இடங்களில் வெற்றி பெற்று எதிர்கட்சி அந்தஸ்தை மீண்டும் தக்கவைத்துக் கொள்ளும் என்றும், பாஜக ஒரு இடத்தில் மட்டுமே வெற்றி பெறும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. சபரிமலை தீர்ப்பு, பினராயி விஜயன் அரசு மீதான தங்கக் கடத்தல் குற்றச்சாட்டு உள்ளிட்ட பாஜகவின் ராஜ தந்திரங்கள் எதுவும் கேரளாவில் எடுபடவில்லை என்பதே இக்கருத்துக்கணிப்பின் மூலம் தெரிகிறது.

கூட்டணிவெற்றி பெற வாய்ப்புள்ள இடங்கள்2016 தேர்தலில் வெற்றி பெற்ற இடங்கள்ஏற்றம்/இறக்கம்வாக்கு சதவீதம்
இடதுசாரிகள்+8291-938.00
காங்கிரஸ்+5647943
பாஜக110

4. அசாம்

அசாம் மாநிலத்தில் ஆளும் பாஜகவின் தேசிய ஜனநாயகக் கூட்டணி மொத்தமுள்ள 126 தொகுதிகளில் 67 தொகுதிகளில் வெற்றிபெற்று மீண்டும் ஆட்சி அமைக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. கடந்த தேர்தலில் 26 தொகுதிகளில் மட்டுமே வென்ற காங்கிரஸ் கூட்டணியானது இம்முறை 57 தொகுதிகளில் வெற்றி பெறும் என்று கணிக்கப்படுகிறது. 

கூட்டணிவெற்றி பெற வாய்ப்புள்ள இடங்கள்2016 தேர்தலில் வெற்றி பெற்ற இடங்கள்ஏற்றம்/இறக்கம்வாக்கு சதவீதம்
பாஜக+6786-1942.29
காங்கிரஸ்+57263140.70

5. பாண்டிச்சேரி

யூனியன் பிரதேசமான பாண்டிச்சேரியில் ஆட்சி மாற்றம் நடைபெறும் என்று கணிக்கப்பட்டுள்ளது. மொத்தமுள்ள 30 தொகுதிகளில் இம்முறை பாஜக, என்.ஆர்.காங்கிரஸ், அதிமுக இணைந்த தேசிய ஜனநாயகக் கூட்டணி 18 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. கடந்த தேர்தலில் 17 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியமைத்த காங்கிரஸ் கூட்டணி இம்முறை 12 தொகுதிகள் வரை மட்டுமே பெறும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. 

கூட்டணிவெற்றி பெற வாய்ப்புள்ள இடங்கள்2016 தேர்தலில் வெற்றி பெற்ற இடங்கள்ஏற்றம்/இறக்கம்வாக்கு சதவீதம்
என்.ஆர்.காங், பாஜக +1812646
காங்கிரஸ்+1217-538

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *