தனிநபரின் தனிப்பட்ட தேர்வுகளில் நீதிமன்றங்கள் தலையிடுவது அரசியலமைப்பை மீறுவதாகும்-அலகாபாத் உயர்நீதிமன்றம்

திருமணத்திற்காக மதம் மாறுவது சட்டவிரோதமான நடவடிக்கை என்று கூறிய ஒற்றை நீதிபதிகளின் முந்தைய உத்தரவுகளை தவறு  என்றும் அது நல்ல சட்டம் அல்ல (not a good law) என்றும் அலகாபாத் உயர்நீதிமன்றத்தின் நீதிபதிகள் கொண்ட பெஞ்ச் கூறியுள்ளது

”எந்தவித மதபாகுபாடும் இல்லாமல் யார் வேண்டுமானாலும் தான் விரும்பியவரை திருமணம் செய்துகொண்டு வாழும் உரிமை அவர்களின் தனிப்பட்ட சுதந்திரமாகும்”   என்று இரு நீதிபதிகள் கொண்ட பெஞ்ச் கூறியது. தனிப்பட்டவர்களின் வாழ்விலும் உறவிலும் தலையிடுவது கடுமையான அத்துமீறலாகும். இரண்டு நபர்களின் வாழ்க்கை துணைக்கான தேர்வு சுதந்திரத்திற்கான உரிமை. இரண்டு நபர்கள்  ஒன்றாக சேர்ந்து வாழ்வதற்கான உரிமையை அரசால் ஆக்கிரமிக்க முடியாது. அந்த இருவருக்கும் இணக்கமான ஒரு சூழல் இருந்தால் அதை மதமாற்றம் என்ற வட்டத்திற்க்குள் பொருத்த முடியாது.

“ஒரே பாலினத்தைச் சேர்ந்த இருவர் கூட நிம்மதியாக ஒன்றாக வாழ சட்டம் அனுமதித்தால், எந்தவொரு தனிநபரோ அல்லது ஒரு குடும்பமோ அல்லது மாநிலமோ கூட இரண்டு தனிநபர்களின் உறவுக்கு ஆட்சேபனை தெரிவிக்க முடியாது”  என்று அலகாபாத் உயர்நீதிமன்றம் நவம்பர் 11 தேதி உத்தரவிட்டுள்ளது.

காதல் திருமணங்களில்  அரசியல் செய்ய நினைத்த பா,ஜ,க

இதை நீதிமன்றத்தின் ஒரு முக்கியமான தருணத்தில் உத்தரவிட்டுள்ளது. ‘லவ் ஜிஹாத்தை’ சமாளிக்க சட்டங்களின் தேவை இருக்கிறது என்று ஒரு  வியாக்கானத்தின் அடிப்படையில் முந்தைய உயர்நீதிமன்ற உத்தரவுகளை உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் மற்றும் கர்நாடக பாஜக தலைவர் சி.டி.ரவி போன்ற பாஜக தலைவர்கள் வரவேற்று ஆதரித்தனர். இந்த சூழ்நிலையில் இது போன்ற ஒரு உத்தரவு வெளிவந்துள்ளது. 

முந்தைய தீர்ப்புகள் நல்ல சட்டத்தை வைக்கவில்லை – உயர் நீதிமன்றம் 

நீதிபதிகள் விவேக் அகர்வால் மற்றும் பங்கஜ் நக்வி ஆகியோரின் டிவிஷன் பெஞ்ச் முந்தைய இரண்டு உத்தரவுகளையும் (ஒன்று கடந்த செப்டம்பர் மாதத்திலும், மற்றொன்று 2014ம் ஆண்டில்) நிறைவேற்றியது. அந்த இரு உத்தரவுகளையும்  “not laying good law”.  “நல்ல சட்டத்தை வைக்கவில்லை” அந்த இரு தீர்ப்புகளும் ஒருவர் தனது துணையை தேர்ந்தெடுப்பதில் மற்றும் முதிர்ச்சியடைந்த இருவர் தங்களது வாழ்க்கையை அமைத்துககொள்ளும் சுதந்திரத்திற்கான  உரிமையை பாதுகாக்கும் நல்ல சட்டத்தை முன்வைக்கவில்லை  என்று உயர்நீதிமன்றம் விமர்சித்துள்ளது. 

”ஒரு நபர் 18 வயதுக்கு மேற்பட்டவர்களாக இருக்கும்போது, அவர்கள் எங்கு வசிக்க வேண்டும் அல்லது யாருடன் தங்கலாம் அல்லது அவர்கள் நம்பிக்கையை தேர்ந்தெடுப்பது குறித்து எந்த தடையும் விதிக்க முடியாது. “நீதிமன்றம் அல்லது மனுதாரரின் உறவினர்கள் அத்தகைய விஷயத்தில் மனுதாரரின் கருத்து அல்லது விருப்பத்தை மாற்ற முடியாது.” என்ற ஹாதியா வழக்கில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை எடுத்துக்காட்டாக முன்வைத்துள்ளனர்.

சக்தி வாகினி வழக்கின் தீர்ப்பையும் முன் உதாரணமாக காட்டிய நீதிபதிகள்.

“சட்டப்படியான திருமண வயதுவந்த இருவர்    தங்கள் விருப்பப்படி திருமணம் செய்து கொள்ளும்போது, அவர்கள் தங்கள் பாதையைத் தேர்வு செய்கிறார்கள்; அவர்கள் தங்கள் உறவை நிறைவு செய்கிறார்கள்; அது அவர்களின் குறிக்கோள் என்று அவர்கள் உணர்கிறார்கள்.  அவ்வாறு செய்ய அவர்களுக்கு உரிமை உண்டு என்றும், அந்த உரிமையின் எந்தவொரு மீறலும் அரசியலமைப்பு மீறல் என்றும் சந்தேகத்திற்கு இடமின்றி கூறலாம்.”  என்ற சக்தி வாகினி வழக்கின் தீர்ப்பையும் முன் உதாரணமாக காட்டியுள்ளனர்.

இறுதியாக, தனிப்பட்ட உறவுகள், திருமணம், ஒருவரின் வீடு அல்லது பாலியல் நோக்குநிலை ஆகியவற்றுக்காக ஒருவரின் வாழ்க்கையைப் பற்றிய தனிப்பட்ட தேர்வுகளின் முக்கியத்துவத்தை Right to privacy case என்ற வழக்கை மனதில் கொண்டு தனியுரிமைக்கான (Privacy) அடிப்படைகள் என்று  வலியுறுத்தினார்கள்.

இந்திய அரசியல் அமைப்பு சட்டம் சரத்து 25 வது பிரிவின் கீழ் மத சுதந்திரத்திற்கான உரிமையின் அடிப்படையில் ஒருவர் தனது நம்பிக்கையானவர்களை தேந்தெடுப்பதும் அதை உலகிற்கு தெரிவிப்பதும் தெரிவிக்காமல் தவிர்பதற்கும்  உரிமை இருக்கிறது.

 “The constitutional right to the freedom of religion under Article 25 has implicit within it the ability to choose a faith and the freedom to express or not express those choices to the world.”

ஒரு தனிநபரின் தனிப்பட்ட தேர்வுகளில் நீதிமன்றங்கள் தலையிடுவது இந்திய அரசியலமைப்பின் 21 வது பிரிவை  மீறுவதாகும், இதில் துணையை தேர்வு செய்யும் சுதந்திரம் மற்றும் கண்ணியத்துடன் வாழும் உரிமையும் அடங்கியுள்ளது.

எனவே ஐபிசியின் பிரிவு 363, 366, 352 மற்றும் 506  மற்றும் பிரிவு 7 மற்றும் 8 ஆகியவற்றின் கீழ் குற்றம் சாட்டப்பட்ட  பிரியங்கா கர்வார் மற்றும் சலமத் மீதான வழக்கை அலகாபாத் உயர்நீதிமன்றம் ரத்து செய்தது. 

“பிரியங்கா கர்வார் மற்றும் சலமத்தை இந்து மற்றும் முஸ்லீம்களாக நாங்கள் பார்க்கவில்லை, மாறாக வளர்ந்த இரண்டு நபர்கள் தங்கள் சொந்த விருப்பத்தின் அடிப்படையில் ஒரு வருடத்தில் நிம்மதியாகவும் மகிழ்ச்சியாகவும் வாழ்கின்றனர்” என்றும் நீதிமன்றம் குறிப்பிட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *