தார் பாலைவனம் என்றவுடன் நமக்கெல்லாம் வெறும் மணல் நிரம்பிய, தண்ணீருக்கு திண்டாடக்கூடிய பரப்பு என்பதாகத்தான் நம் நினைவிற்கு வரும். ஆனால் தார் பாலைவனத்தில் நிறைந்திருக்கும் தாவர வகைகளையும், விலங்கினங்களையும் மையப்படுத்திய உயிர்ச்சூழலை ஒரு புத்தகமாக ஆவணப்படுத்தி இருக்கிறார் இந்திய வனத்துறை அதிகாரி கோபிந்த் சாகர் பரத்வாஜ். அந்த புத்தகம் The National Park: A Jewel in vibrant Thar என்ற பெயரில் வெளிவந்துள்ளது.
ஆறு ஆண்டுகளாக தார் பாலைவனத்தில் ஆய்வுகளை மேற்கொண்டு, அதன் உயிர்ச்சூழல் பல்வேறு ஆபத்துகளை சந்தித்துக் கொண்டிருப்பதாகத் தெரிவித்துள்ளார். ஏராளமான புகைப்படங்களையும் ஆவணப்படுத்தியிருக்கிறார்.
பல்வேறு அரிதான வேறெங்கும் காணக்கிடைக்காத தாவர மற்றும் விலங்கின வகைகள் தார் பாலைவனத்தில் இருப்பதையும் வெளிக்கொண்டு வந்திருக்கிறார்.
உலகத்திலேயே அதிக மனிதர்கள் வசிக்கும் பாலைவனப் பகுதியாக தார் பாலைவனம் இருக்கிறது. திட்டமிடப்படாத கட்டுமானங்கள், நிலத்தை பயன்படுத்தும் முறைகளில் தொடர்ச்சியாக நிகழ்த்தப்படும் மாற்றங்கள் போன்றவை இப்பகுதியின் உயிர்ச்சூழலுக்கு முக்கிய சவாலாக இருப்பதாக தெரிவித்துள்ளார்.
கோபிந்த் சாகர் பரத்வாஜ் எடுத்துள்ள முக்கிய புகைப்படங்களை இங்கு பார்ப்போம்.










புகைப்படங்கள்: நன்றி – Mongabay India