கொரோனா தடுப்பூசி

கொரோனா தடுப்பூசி குறித்து என்ன திட்டம் வைத்திருக்கிறது இந்திய அரசு?

இந்தியாவில் கொரோனா வைரசின் தாக்கம் மக்களை சில காலம் வீட்டிற்குள் முடக்கிப் போட்டாலும், அடிப்படை வாழ்வாதர சிக்கல்கள் அவர்களை வீதிக்கு இழுத்துவிட்டது. கொரோனாவை பொருட்படுத்தாமல் மக்கள் தங்களது அன்றாட வாழ்கைக்கான தேவையைப் பூர்த்தி செய்ய வேண்டிய நிர்பந்தம் உயிரைப் பணையமாக வைக்கும் நிலைக்கு மக்களை தள்ளிவிட்டது.

இந்தியாவில் ஏறத்தாழ 9.5 மில்லியனுக்கும் அதிகமானவர்கள் கொரோனவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இறந்தவர்களின் எண்ணிக்கை 1.4 மில்லியனை நெருங்கிவிட்டது. ஒவ்வொரு நாளும் புதிதாக 40,000 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு வருகிறது. அதேபோல் ஏறத்தாழ நாள் ஒன்றுக்கு இறப்பின் எண்ணிக்கை 550-ஐ நெருங்குகிறது.

தடுப்பூசி குறித்து பிரதமரின் வாக்குறுதி

”தடுப்பூசிகள் தயாரானவுடன் அனைத்து இந்தியர்களுக்கும் தடுப்பூசி போடப்படும் என்று  பிரதமர் நரேந்திர மோடி கடந்த அக்டோபர் 29-ம் தேதி தெரிவித்திருந்தார். மேலும் ஒரு நேர்காணலில் பின்வருமாறு தெரிவித்தார். “ஒரு தடுப்பூசி கிடைக்கும்போது, ​​அனைவருக்கும் தடுப்பூசி போடப்படும் என்று நான் தேசத்திற்கு உறுதியளிக்க விரும்புகிறேன்.” “நிச்சயமாக, ஆரம்பத்தில் நாம் மிகவும் பாதிக்கப்படக்கூடிய மற்றும் முன் வரிசை தொழிலாளர்களைப் பாதுகாப்பதில் கவனம் செலுத்துவோம். கோவிட் -19 க்கான தடுப்பூசி நிர்வாகம் குறித்த ஒரு தேசிய நிபுணர் குழு அமைக்கப்பட்டுள்ளது.” என்று சொன்னார்.

தடுப்பூசி குறித்து உலக சுகாதார அமைப்பின் அறிக்கை

உலக சுகாதார அமைப்பு (WHO) ஆவணம் பின்வருமாறு தெரிவிக்கிறது. “COVID-19ஐத் தடுப்பதற்காக ஒரு பாதுகாப்பான மற்றும் பயனுள்ள தடுப்பூசி உருவாக்கப்பட்டால், அந்த தடுப்பூசியால் பயனடையக்கூடிய அனைவருக்கும் எல்லா இடங்களுக்கும் மிக விரைவில் அனுப்பப்படும். சர்வதேச மட்டத்தில் உலகளாவிய நோய்தடுப்பு (universal immunization) வழங்க வேண்டும் என்ற திட்டத்தை சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

பாராளுமன்றக் குழு அறிக்கை

தேர்ந்தெடுக்கப்பட்ட குழுக்களுக்கு தடுப்பூசி போடுவதன் மூலம் தொற்றுநோயைத் தடுக்க ஒரு “smart vaccination” (சிறந்த தடுப்பூசி) பிரச்சாரத்தை சுகாதாரத்துறை அதிகாரிகள் முன்மொழிகின்றனர். இந்திய மக்கள் தொகையை மூன்று குழுக்களாகப் பிரித்து செயல்படுத்தலாம் என்ற அனுமானத்தின் அடிப்படையில் இந்த திட்டம் விவாதிக்கப்படுகிறது. 

முதலாவது எளிதில் பாதிப்படையக்கூடிய முன்னணி தொழிலாளர்கள் மற்றும் சுகாதாரப் பணியார்களை உள்ளடக்கிய குழு. இந்த மையக் குழுவிற்கு தடுப்பூசி போடப்பட்ட பின்னர் மக்கள் தொகையை மூன்று குழுக்களாகப் பிரிக்கலாம் என்று இந்த திட்டம் கருதுகிறது. இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் இயக்குநர் ஜெனரல் பால்ராம் கருத்தை மேற்கோள் காட்டி “நோய் பரவுவதற்கான வாய்ப்புகள் குறைவு, முழு மக்களுக்கும் தடுப்பூசி போடுவதற்கான தேவை இருக்காது” என்று பாராளுமன்ற குழு அறிக்கை கூறுகிறது.

2021 செப்டம்பர் மாதத்திற்குள் 30 கோடி பேருக்கு தடுப்பூசி போடப்படும்

முன்னதாக, ஜூலை மாதத்தில், முன்னணி வரிசை தொழிலாளர்கள் முன்னுரிமையின் அடிப்படையில் தடுப்பூசியைப் பெறுவார்கள் என்று  மத்திய அரசு  சுட்டிக்காட்டியது.  2021 ஆகஸ்ட்-செப்டம்பர் மாதங்களுக்குள் சுமார் 30 கோடி மக்களுக்கு தடுப்பூசி போடப்படும் என்று மத்திய சுகாதார அமைச்சர் ஹர்ஷ் வர்தன் கடந்த நவம்பர் மாதம் தெரிவித்தார். 

இதில் முன்னணி வரிசை தொழிலாளர்கள் மற்றும் பாதிக்கப்படக்கூடியவர்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படும்  எனவே முதல் கட்டமடாக சுமார் 22% இந்தியர்களுக்கு மட்டும் தடுப்பூசி போடப்படும் என்று தெரிகிறது. இந்தியாவில் எத்தனை மருத்துவ ரீதியாக “பாதிக்கப்படக்கூடிய” நபர்கள் இருக்கிறார்கள் என்பதைக் கணக்கிடுவது நடைமுறையில் சாத்தியமற்றது. 

ஸ்மார்ட் திட்டத்தின் குறைபாடுகள்

இந்த திட்டத்தின் குறைபாடுகள் மிகப் பெரியவை, ஒரு விமர்சனத்திற்கான தொடக்க புள்ளியைக் கண்டுபிடிப்பது கடினம். எனவே, ஒரு சிறிய சிக்கலுடன் தொடங்குவோம்.  “பாதிக்கப்படக்கூடிய” நபர்களை, வேறுவிதமாகக் கூறினால், நோயின் துவக்க நிலைமைகளைக் கொண்டவர்கள் – சுவாச நோய்கள், இருதய பிரச்சினைகள் மற்றும் நீரிழிவு நோயைக் கண்டறிவது குறித்து அரசு எவ்வாறு திட்டமிட்டுள்ளது? அரசு அவர்களை தேடிச்  செல்லுமா அல்லது அவர்கள் அரசை நாடிச் செல்ல வேண்டுமா? இந்தியாவில் 10 கோடி முதியவர்கள் உள்ளனர். அவர்கள் வழக்கமாகவே மேற்சொன்ன காரணங்களால் பாதிக்கப்படுகின்றனர். அவர்கள் “ஸ்மார்ட்” திட்டத்திற்குள் வருகிறார்களா? இல்லையா? 

இந்த திட்டத்தின் பின்னணியில் உள்ள அனுமானங்கள், தொற்றுநோயியல், வைராலஜி மற்றும் பொது சுகாதாரம் ஆகிய கொள்கைகளுடன் ஒத்துப்போகவில்லை என்று பல அறிஞர்கள் கூறுகிறார்கள். 

பாதிக்கப்பட்ட நபரின் ஆன்டிபாடிகள் எவ்வளவு காலம் நீடிக்கும், எனவே, அவர் எவ்வளவு காலம் பாதுகாப்பாக இருக்கிறார் என்பது எங்களுக்கு இன்னும் தெரியவில்லை என்று கூறுகிறார். இந்த திட்டத்தை வேறுவிதமாக பார்த்தால் முன் வரிசையில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கும், பாதிக்கப்படக் கூடியவர்களுக்கும் தடுப்பூசி போடுவது ஒரு கவசத்தை உருவாக்கும். தேவைப்படுபவர்களைப் பாதுகாப்பதை விட பரவலைத் தடுக்க வேண்டுமானால் உதவும்.

இந்த புதிய திட்டத்தை செயல்படுத்த தடுப்பூசிகளை முன்கூட்டியே ஆர்டர் செய்து இருப்பு வைக்க வேண்டும். அதேபோல் தடுப்பூசிகளின் தொகுப்பை உருவாக்குவது தொடர்பான புதிய திட்டங்களை நடைமுறைபடுத்த வேண்டும். ஆனால் இதுபோன்ற எந்த நடிவடிக்கையிலும் அரசு இதுவரை ஈடுபடவில்லை. அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் ஏற்கனவே ஃபைசர் தடுப்பூசிக்கான ஆர்டர்களை கொடுத்துள்ளது. ஆனால் இந்தியா இதுபோன்ற நடவடிக்கையில் ஈடுபட்டதாகத் தெரியவில்லை. ஆக்ஸ்போர்டு-அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசி மற்றும் இந்திய தயாரிக்கும் பாரத் பயோடெக் உருவாக்கி வருபவை எப்போது அறிமுகமாகும் என்பது தெரியவில்லை.

இந்தியாவின் தடுப்பூசி ஒப்பந்தங்கள்

இருப்பினும், டிசம்பர் 4-ம் தேதி, டியூக் பல்கலைக்கழகத்தின் ஆய்வின் படி இந்தியா 160 கோடி தடுப்பூசிக்கு ஒப்பந்தம் செய்து முன்னிலையில் உள்ளது. அஸ்ட்ராசெனெகா (50 கோடி) கமலேயா (10 கோடி) மற்றும் நோவாவாக்ஸ் (100 கோடி) ஆகிய நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்துள்ளது. ஆக்ஸ்போர்டு தடுப்பூசி விவாதத்தில் இருக்கிறது. நோவாவாக்ஸ் மற்றும் கமலேயா தடுப்பூசிகள் எப்போது வெளிவரும் என்பது இன்னும் தெரியவில்லை.

வைரஸைப் பற்றிய நமது பரந்த அறியாமை, அதன் பரவல் முறைகள் மற்றும், நிச்சயமாக, எதிர்வரும் மாதங்களில் விஷயங்கள் எவ்வாறு இயங்கப் போகின்றன என்பதை வெளிப்படைத் தன்மையுடன் மக்கள் பாதுகாப்பில் ஒன்றிய அரசு செயல்பட வேண்டும். எந்த முடிவு எடுக்கப்பட்டாலும் தற்போதைய சூழ்நிலையின் வெளிச்சத்தில் எடுக்கப்பட வேண்டும். கடந்த ஒரு மாதமாக பருவநிலை மாறுதல்கள் ஏற்பட்டுவருகிறது அடுத்த இரு மாதங்கள் வட இந்தியாவில் கடும் குளிர் வாட்டி வதைக்கும். எனவே பருவ நோய்கள் அதிகரிக்கும் இதை அரசு பொருட்படுத்தி தடுப்பூசி போடுவது குறித்து எதாத்தமான திட்டங்களை உருவாக்க வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *