தமிழ்நாட்டில் உள்ள 26 அரசு மருத்துவக் கல்லூரிகளில் 3,650 எம்.பி.பி.எஸ் இடங்களும், சென்னையில் உள்ள தமிழ்நாடு அரசு பல் மருத்துவக் கல்லூரியில் 100 இடங்களும் உள்ளன. இதில் 15 சதவீத இடங்கள், அதாவது 547 எம்.பி.பி.எஸ் இடங்களும் 15 பல் மருத்துவர் இடங்களும் அகில இந்திய தொகுப்பிற்கு கொடுக்கப்படுகின்றன.
நீட் தேர்வு அமல்படுத்தப்பட்ட பின், தற்போது மாநிலங்கள் மத்தியத் தொகுப்பிற்கு வழங்கும் 50 சதவீத முதுநிலை, 15 சதவீத இளநிலை மருத்துவப் படிப்பிற்கான இடங்களில் இதர பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு ஒதுக்கப்படவேண்டிய இடஒதுக்கீடு மூன்றாண்டுகளாக ஒதுக்கப்படவில்லை.
மருத்துவப் படிப்புகளில் மத்தியத் தொகுப்பில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த மாணவர்களுக்கான 50 சதவீதம் இடஒதுக்கீட்டினை வழங்கக் கோரி அதிமுக, திமுக, பாமக, மதிமுக மற்றும் தமிழக சுகாதாரத் துறை சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன.
ஜூலை 27-ம் தேதியன்று உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில், அகில இந்திய இடங்களில் பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீடு குறித்து முடிவு செய்ய மத்திய அரசு, மாநில அரசுகள், மருத்துவக் கவுன்சில் ஆகியவற்றின் பிரதிநிதிகள் அடங்கிய குழு ஒன்றை அமைக்க வேண்டும் என்றும் அந்த குழுவின் பரிந்துரைகளின்படி அந்த இடஒதுக்கீட்டை செயல்படுத்த வேண்டும் என்றும் உத்தரவில் கூறப்பட்டது.
அந்தக் குழுவின் பரிந்துரைகளின்படி அந்த இடஒதுக்கீட்டை செயல்படுத்த வேண்டும் என்றும் உத்தரவில் கூறப்பட்டது. மேலும் அந்த பரிந்துரையானது அடுத்து வரும் ஆண்டுகளுக்குத்தான் பொருந்துமே தவிர, இந்த ஆண்டுக்குப் பொருந்தாது எனவும் உத்தரவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
ஜீலை 28
உயர் நீதிமன்றம் வழங்கிய இந்த தீர்ப்புக்கு எதிராக யாராவது மேல்முறையீடு செய்தால் அந்த வழக்கு விசாரணையில் தங்களையும் ஒரு தரப்பாக விசாரிக்காமல் எந்த உத்தரவும் பிறப்பிக்கக் கூடாது என்று வலியுறுத்தி தி.மு.க செய்தித் தொடர்பாளர் டி.கே.எஸ்.இளங்கோவன் தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டது
தமிழக அரசின் தரப்பில் ஆகஸ்ட் 4-ல் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவில், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு மருத்துவப் படிப்புகளில் 50 சதவீத இடஒதுக்கீட்டை
இந்த கல்வி ஆண்டிலேயே வழங்க உத்தரவிட வேண்டும் என்று கோரப்பட்டிருந்தது.
அக்டோபர் 13
உயர்நீதிமன்றத் தீர்ப்பின் அடிப்படையில் 22.9.2020 அன்று கமிட்டி கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் இந்த ஆண்டே மருத்துவப் படிப்பில் இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை தமிழக அரசின் பிரதிநிதி முன் வைக்கவில்லை. அடுத்த ஆண்டு இடஒதுக்கீடு வழங்குவது குறித்து மட்டுமே விவாதிக்கப்பட்டது என்று ஒன்றிய அரசின் தரப்பில் கூறப்பட்டுள்ளது.
திமுக வழக்கறிஞர் வில்சன், தீர்ப்பின் அடிப்படையிலான இடஒதுக்கீட்டை முடிவு செய்யும் வரை அந்த தீர்ப்பிற்கு பாதகமின்றி ஏற்கனவே நடைமுறையில் உள்ள 27 சதவீத இடஒதுக்கீட்டை இந்த ஆண்டே வழங்கிட வேண்டும்’ என்று கோரிக்கை விடுத்தார்.
அக்டோபர் 15
இந்திய மருத்துவக் கவுன்சில் சார்பில் ஆஜரான வக்கீல் கவுரவ் சர்மா அகில இந்திய தொகுப்புக்கு ஒதுக்கப்படும் இடங்களில் தமிழகத்தின் இதர பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கான 50 சதவீத இடஒதுக்கீட்டை நடப்புக் கல்வி ஆண்டிலேயே அமல்படுத்த சாத்தியமில்லை என்று கூறியது.
அக்டோபர் 26
மருத்துவப் படிப்பில் அகில இந்திய ஒதுக்கீட்டிற்கு தமிழகம் வழங்கும் இடங்களில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 50 சதவீத இடஒதுக்கீட்டை இந்த ஆண்டே வழங்க உத்தரவிட முடியாது என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ் படிப்புகளின் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கான கலந்தாய்வு அக்டோபர் 27-ம் தேதி ஆன்லைனில் தொடங்குகிறது.