மதுரை ஆதினத்தின் ஐந்து முக்கிய காணொளிகள்

தமிழ்நாட்டின் மிகத்தொன்மையான சைவ சமய திருமடங்களில் மதுரை ஆதீன மடமும் ஒன்றாகும். இது திருஞானசம்பந்தரால் தோற்றுவிக்கப்பட்டது.

இந்த மடத்தின் 292-வது ஆதீனமாக அருணகிரிநாதர் இருந்து வந்தார். சுவாசப் பிரச்சினையால் அவர் உடல்நலம் பாதிக்கப்பட்டு இருந்த நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையில் இருந்தவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

சைவமும், தமிழும் தனது இருக்கண்கள்  என்று  வாழ்ந்த அருணகிரிநாதர், சைவ திருமட ஆதினமாக இருந்த போதும் தமிழ் இனத்தின் உரிமைகளுக்கான போராட்டங்களில் பங்கெடுத்தவர். 

தமிழீழ ஆதரவு

தமிழ் ஈழ விடுதலை போராட்டத்தையும், தமிழீழ விடுதலை புலிகளையும் 1983 ஆம் ஆண்டில் இருந்தே ஆதரித்தவர். டெசோ மாநாடுகளில் கலந்து கொண்டது மட்டுமில்லாமல் தன் இறுதி காலம் வரை தமிழீழப் போராட்டத்தை ஆதரித்தவர்.

2000 ஆம் ஆண்டு  மே மாதம் நெல்லையில் பத்திரிகையாளர்களை சந்தித்த மதுரை ஆதினம், ஈழத் தமிழர் பிரச்சனையைப் பொறுத்தவரை 1983 – ம் வருடம் வலியுறுத்திய கருத்தையே இப்பொழுதும் வலியிறுத்துகிறோம். தனித் தமிழீழம் பெறுவது ஒன்றே ஈழத் தமிழர் நல்வாழ்வுக்கு வழிவகுக்கும்; வேறு எந்த முடிவும் சரி வராது என்று கூறினார்.  2008 ஆம் ஆண்டு இனப்படுகொலை போரை நிறுத்தக்கோரி தமிழ்நாடில் போராட்டங்கள் தீவிரமான போதும்  போர் நிறுத்தத்திற்கு ஆதாரவாக குரல் கொடுத்தார்.  அப்போதும்  தமிழீழ மக்கள் அமைதியாக வாழ தனிநாடு அமைத்துக் கொடுக்க வேண்டும்; அப்படி தமிழீழ மக்களுக்கு தனிநாடு கிடைத்தால் தான் அவர்கள் நல்வாழ்வு பெற முடியும். அந்த தனித் தமிழீழத்தை விடுதலை புலிகளால் தான் பெற்று தர முடியும் என்பது எனது தனிப்பட்ட கருத்து என்று கூறி ஈழத்தமிழர் பிரச்சனைக்கு தனித் தமிழீழமே தீர்வு என்பதில் உறுதியாக இருந்தார்.

திராவிட இயக்கதுடன் அருணகிரிநாதர்

குன்றகுடி அடிகளாருக்குப் பின்  திராவிட இயங்களோடு நெருங்கிய தொடர்பை வைத்திருந்தவர் மதுரை ஆதீனம் அருணகிரிநாதர் மதுரை திருமங்கலத்தில் பெரியார் சிலை திறப்பு விழாவிற்கு தலைமை தாங்கினார்.

திராவிட அரசியல் என்பது ஆன்மீகத்துக்கு எதிரானது அல்ல பகுத்தறிவு என்பது பகுத்தறியும் அறிவுதான்  என்று தெளிவாக முழங்கியவர்.

முல்லைப் பெரியாறு போராட்டத்தில்  பங்கெடுத்தவர்

மதுரை நகர பண்பாட்டுக்கழகம் சார்பில் முல்லைப் பெரியாறு அணையை மீட்கும் உரிமை முழக்க விளக்க கூட்டம் மதுரை விக்டோரியா எட்வர்டு திறந்த வெளி அரங்கில் 2011  நவம்பர் 26 அன்று  நடந்தது. 

முல்லைப் பெரியாறு பிரச்சனையை கேரள அரசு அவதூறாக தூண்டி விட்டு மனிதாபிமான மற்ற செயல்களில் ஈடுபடுகிறது. உச்ச நீதிமன்ற தீர்ப்பை கேரள அரசு அலட்சியப்படுத்திவி்ட்டு, தமிழகத்துக்கு கேடு விளைவித்துக் கொண்டுள்ளது. தென் மாவட்ட மக்களின் ஜீவாதார உரிமையை பறிக்கப் பார்க்கிறது. இதற்கு முற்றுப்புள்ளி வைப்பது தமிழினத்தின் கடைமையாகும்.

கேரள அரசு தனது பிடிவாதத்தை விட்டுவிட்டு ஒருமைப்பாட்டை காக்க முன்வர வேண்டும். ஜவஹர்லால் நேரு போதித்த வேற்றுமையில் ஒற்றுமை என்ற கோட்பாடு எங்கே? இங்கே ஒட்டுமொத்த தமிழர்கள் அனைவரும் கேரளத்துக்கு எதிராக கொந்தளித்து முல்லைப் பெரியாறு அணையை பாதுகாக்க புறப்பட்டுள்ளனர். இது தான் தமிழின உணர்வு, இது கேரளத்துக்கு நல்ல எச்சரிக்கை.

கேரள அரசு உடனே தனது பொய்ப் பிரசாரத்தை விட்டுவிட்டு தமிழக உரிமையை பறிக்காமல் 142 அடிக்கு தண்ணீரை தேக்குவதற்கு அனுமதிக்க வேண்டும். புதிய அணையை கட்டினால் நானே நேரடிப் போராட்டத்தில் குதிப்பேன்; முல்லைப் பெரியாறுக்கு செல்வேன்; எல்லைப் போராட்டத்தில் ஈடுபடுவேன். முல்லைப் பெரியாறு அணை பகுதி மீனாட்சியம்மனுக்கு சொந்தமானது. எனவே, கேரள அரசு வறட்டுப் பிடிவாதம் பிடிக்காமல் தமிழ்நாட்டிடம் அப்பகுதியை ஒப்படைக்க வேண்டும். இது சிவபெருமானின் ஆணை. இந்த போராட்டத்தில் தமிழர்கள் வெற்றி பெறுவார்கள் என்று  பேசியவர்.

அதேபோல் ஏழுதமிழர் விடுதலையை தீவிரமாக ஆதரித்தவர்.  தமிழ்நாட்டினுடைய மத நல்லிணக்கத்தின் அடையாளமாக இருந்தவர். மதுரை மடத்தில் நாகூர் அனிஃபா பாடல்களை பாடுவார். இஸ்லாமிய இலக்கிய விழாவில் கலந்து கொண்டு மத நல்லிணக்கத்திற்கு ஆதரவாய் இருந்தவர்.  தமிழ்நாட்டில்  வகுப்புவாதிகளுக்கு சிம்ம சொப்பனமாக இருந்தவர்களில் ஒருவர்.

மதுரை ஆதினம்  அருணகிரிநாதரின் முக்கியமான ஐந்து காணொளிகள்:

பெண் சமுதாயத்திற்கு கிடைத்த வெற்றி

சபரிமலை ஐயப்பன் கோவிலில்  பெண்கள் வழிபட அனுமதித்து நீதிமன்ற தீர்ப்பு போது அதனை எதிர்த்து ஆர் எஸ் எஸ் சங்பரிவார் அமைப்புகள்  பெரும் அரசியல் செய்ய முயற்சித்த போது இது  பெண் சமுதாயத்திற்கு கிடைத்த வெற்றி என்று கூறியவர். விரிவாக பார்க்க:

ஒளெரங்கசிப் வழங்கிய தந்ததினால் ஆன திருவடி

மதுரை  திருமடத்தின் நோக்கம்  சைவம் பரப்புவது மட்டும் இல்லை  மக்கள் ஒற்றுமையாக வாழ வழிகாட்டுவதும், மத நல்லிணக்கத்தை வளர்ப்பதும் தான்.  மதுரை மடத்தில்  ஒளெரங்கசிப் வழங்கிய தந்ததினால் ஆன திருவடி இந்த ஆலையத்தில் இருக்கிறது என அவர் பேசிய காணோளி:

இப்பொழுது தேவை மத நல்லிணக்கம்

அனைத்து மதங்களும் போதிப்பது ஒரே கருத்தை தான்  இப்பொழுது தேவை மத நல்லிணக்கம் தான் என்பதை வலியுறுத்தும் காணோளி:

இஸ்லாமிய இலக்கிய விழாவில்   நாஹூர் அனிபாவின் பாடல் பாடி  மத  நல்லிணக்கம்  குறித்தும், மதுரை ஆதின மடத்திற்கு வந்த மாற்று மத  பெரியோர்கள் குறித்தும் பேசும் விரிவான காணோளிகள்:

மதுரை ஆதினத்தின் தொன்மையும் வரலாறும்:

 தன் நீண்ட கால நண்பர்  நாகூர் அனிஃபாவுடனான அன்பு பறிமாற்றம்:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *