புது டில்லியில் ஒடுக்கப்பட்ட தலித் சமூகத்தைச் சேர்ந்த ஒன்பது வயது சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கபட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்.அது மட்டும் இல்லாமல் அவரது உடலை பலவந்தமாக தகனம் செய்து ஆதாரத்தை அழித்துள்ளனர்.
டெல்லி புறநகர் பகுதியில் உள்ள ஒரு தகன மய்யத்தில் உள்ள தண்ணீர் தொட்டியில் தன் குடும்பத்திற்கு தேவையான குடிநீர் எடுக்க சென்ற 9 வயது சிறுமி,நீண்ட நேரமாக வீடு திரும்பவில்லை. அந்நேரத்தில் தகன மைய்யத்தில் உள்ள புரோகிதர்,அவரசமாக அக்குழந்தையின் தாயை தகன மேடைக்கு வரச் சொல்லி இருக்கிறார். அவ்விடத்திற்கு சென்ற அக்குழந்தையின் அம்மா,எந்த அசைவும் இல்லாமல் கிடந்த தன் மகளின் உடலை பார்த்துள்ளார். அவள் உடலில் பல இடங்களில் காயம் எற்பட்டு இருந்ததை அப்போதே சிறுமியின் அம்மா பார்த்துள்ளார்.
அந்த தகன மையத்தில் இருந்த ராதே சியாம் எனும் தகனமேடை சடங்கு செய்யும் புரோகிதர்,உங்கள் மகள் மின்சார தாக்குதலில் இறந்துவிட்டாள் என்று கூறியுள்ளார்.அச்செய்தி அக்குழந்தையின் தாய்க்கு பெரும் அதிர்சியை கொடுத்துள்ளது.
சிறுமியின் அம்மா, “நான் என் மகளை மருத்துவமனைக்கு கொண்டு செல்ல வேண்டும்.மேலும் காவல் நிலையத்தில் புகார் கொடுக்க செல்கிறேன்’,என்று கூறியபோது, அங்கிருந்த தகன நிலைய புரோகிதர் ராதே சியாம்,’அப்படி செய்தால் உன் குழந்தையின் உறுப்புகளை திருடி விற்றுவிடுவார்கள் என்றும் உங்களால் வழக்கு நடத்த முடியாது. நான் உங்களுக்கு பணம் தருகிறேன் இதை இதோடு விட்டுவிடுங்கள் ‘,என்றும் கூறியுள்ளார்.
மேலும் அந்த சிறுமியின் உடலில் காயங்கள் இருந்துள்ளது.அவளது முகம் வெளிரி அவளது உடைகள் ஈரமாகவும் இருந்துள்ளது.மேலும் உடன் யாரும் துணைக்கு இல்லாமல் தனியாக இருந்த சிறுமியின் தாய் தடுத்ததையும் மீறி,தகன மையத்தின் கேட்டை பூட்டி வலுகட்டயமாக சிறுமியின் உடலை எரித்துள்ளனர்.
அப்பொழுது அங்கு அவர்களது கிராமத்தை சேர்ந்தவர்கள் மற்றும் உறவினர்கள் சிறுமியின் உடல் எரிக்கபடுவதை தடுத்து நிறுத்த முயற்சி செய்துள்ளனர்.அதனையும் மீறி எரித்துள்ளனர்.
இதனை எதிர்த்து கடந்த நான்கு நாட்களாக டெல்லியில் பெரும் போராட்டத்தை நடத்தி கொண்டுள்ளனர்.பீம் ஆர்மியின் தலைவர் சந்திர சேகர் ஆசாத் உள்ளிட்டவர்கள் இந்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.
குற்றத்தில் ஈடுபட்டவர்களை விசாரிப்பதற்கு பதிலாக காவல்துறையினர் சிறுமியின் பெற்றோரை இரவு முழுவதும் காவல் நிலையத்தில் வைத்து விசாரித்துள்ளனர்.மேலும் காவல் துறையால் பாலியல் வன்கொடுமை புகாரை திரும்ப பெற சொல்லி மிரட்டபட்டதாகவும் சிறுமியின் தந்தை ஊடகங்களில் கூறியுள்ளார்.
அதேபோல பாலியல் ரீதியாகத் தாக்கப்பட்டதாக நாங்கள் பலமுறை காவல் நிலையத்தில் சொன்னோம். ஆனால் அவர்கள் கேட்கவில்லை. பாதிக்கபட்டவள் ஒரு தலித் என்பதால் அலட்சியம் செய்தார்கள்.மேலும் ‘எங்களை காவல் துறையினர் அச்சுருத்தினர் மற்றும் பாலியல் பலாத்கார குற்றச்சாட்டை திரும்பப் பெறுமாறு எங்களை மிரட்டினார்கள்’, என்று சிறுமியின் அம்மா குற்றம் சாட்டியுள்ளார்.
உடல் எரியிட்டபட்ட போது அதில் இருந்து நாங்கள் உடலை வெளியே எடுக்க முயற்சித்தோம்.அந்த சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதாக அவளது அம்மா அப்போது கூறினார்.ஆனால் காவல்துறையினர் அதை கண்டு கொள்ளவில்லை என்றும் கூறியுள்ளார்.நாங்கள் அனைவரும் அதற்கு நேரில் கண்ட சாட்சிகள் என்றும் அப்போது அங்கிருந்த பிபின் ஊடகங்களில் கூறினார்.
நீண்ட போராட்டத்திற்கு பிறகு குற்றச்சாட்டப்பட்ட நான்கு பேர்,போஸ்கோ மற்றும் வன்கொடுமை தடுப்புச் சட்டம் ஆகியவற்றின் கீழ் கைது செய்யபட்டுள்ளனர்.
உலகில் பெண்களுக்கு மிக ஆபத்தான இடங்களில் ஒன்றாக இந்தியா கருதப்படுகிறது. நாட்டில் ஒவ்வொரு 15 நிமிடங்களுக்கும் ஒரு பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்படுவதாக உள்துறை அமைச்சகத்தின் தகவல்கள் கூறுகின்றன.
கடந்த ஆண்டு செப்டம்பரில் தேசிய தலித் இயக்கம் (NDMJ) வெளியிட்ட அறிக்கை, 2009 மற்றும் 2018 க்கு இடையில் சுமார் 400,000 வன்முறை சம்பவங்கள் பதிவாகியுள்ளன.இது கடந்த காலத்தை விட 6 சதவிகிதம் அதிகரித்துள்ளது.