மோலி

2020-ன் மற்றொரு ஆச்சர்யம். தாய்க்கும் மகளுக்கும் வயது வித்தியாசம் 2 வருடங்களே! அறிவியலின் மகத்தான சாதனை

கடந்த 2020-ம் ஆண்டு பல்வேறு விசித்திரங்களையும் கொண்டுவந்தது. அவற்றில் ஒன்றுதான் அக்டோபர் 26, 2020 அன்று அமெரிக்காவில் பிறந்த ‘மோலி எவரெட் கிப்சன்’ (Molly Everette Gibson). ஏனெனில் அறிவியல் ரீதியாக மோலி உலகின் மிக வயதான குழந்தையாகக் குறிப்பிடப்படுகிறாள். இதற்கான காரணம் ‘மோலி எவரெட் கிப்சன்’ அக்டோபர் 1992-ல் உறைய வைக்கப்பட்ட கருவைப் பயன்படுத்தி பிறந்தாள். 

ஏறத்தாழ 27 வருடங்கள் உறைய வைக்கப்பட்ட கருவிலிருந்து பிறந்த குழந்தைதான் ‘மோலி எவரெட் கிப்சன். இதில் குறிப்பிடத்தக்க விடயம் அவரது தாய் ‘டினா கிப்சன்’ பிறந்தது ஏப்ரல் 1991-ம் வருடம். இதில் குறிப்பிடத்தக்க விடயம் ஒன்றும் உண்டு மோலி தன் பிறப்பின் மூலம் அவளின் மூத்த சகோதரியான ‘எம்மா ரென்’ (Emma Wren) இதுவரை வைத்திருந்த அறிவியல் சாதனையையும் முறியடித்துள்ளாள். ஆம். 24 வருடங்கள் உறைநிலையில் வைக்கப்பட்ட கருவிலிருந்து பிறந்தவள்தான் எம்மா. மோலியோ 27 வருடங்கள் உறை நிலையில் வைக்கப்பட்ட கருவிலிருந்து பிறந்தவள்.

முழு மரபணு கருக்கள் இரண்டும் ஒன்றாக உறைந்து, மூன்று வருட இடைவெளியில் தாயான டினாவின் கருப்பைக்கு மாற்றப்பட்டதன் விளைவாக இருவரும் பிறந்தனர். 

குழந்தைக்காக காத்திருந்த டினா கிப்சன் மற்றும் பெஞ்சமின் தம்பதியினர்

அமெரிக்காவின் ‘டென்னசி’ மாநிலத்தில் உள்ள ‘நாக்ஸ்வில்லே’ என்னும் சிறிய நகரத்தில் வசிக்கும் டினா கிப்சன் (Tina Gibson) மற்றும் அவரின் கணவர் பெஞ்சமின் (Benjamin) திருமணம் முடிந்த ஐந்து வருடங்களில் இயற்கையான கருத்தரிப்பிற்கு காத்திருந்தனர். பெஞ்சமினுக்கு ‘சிஸ்டிக் ஃபைப்ரோஸிஸ்’ (cystic fibrosis) என்னும் மரபு சார்ந்த குறைபாடு இருப்பதால் குழந்தை கருத்தரித்தல் நடைபெறவில்லை. 

2017-ம் வருடம் டினா வின் பெற்றோர்கள் தொலைக்காட்சியில் தாங்கள் கண்ட செயற்கை கருத்தரிப்பு முறையை அவர்களுக்கு கூறி அதைப்பற்றி கவனமெடுக்கக் கூறினர்.

டினா மற்றும் பெஞ்சமின் இயற்கையாக குழந்தை பிறப்பு என்பது இயலவில்லை எனில் ஒரு குழந்தையை தத்தெடுப்பதுதான் சரியாக இருக்கும் என நினைத்தனர். ஆனால் அவர்களுக்கு அதன்பின் அவர்களின் சிந்தனை ‘கருமுட்டை தானம்’ என்ற அவர்கள் தொலைக்காட்சியில் கண்ட செயல்முறையையே சுற்றிசுற்றி

வந்தது. நீண்ட நாட்கள் யோசனைக்கு பின் ‘தேசிய கரு நன்கொடை மையத்தின்’ (National Embryo Donation Centre) மருத்துவர் ஜெஃப்ரி கீனன் (Jeffrey Keenan) அவர்களின் ஆலோசனையைப் பெற்றனர்.

செயற்கை கருத்தரித்தலுக்கான முயற்சி

இதை மீண்டும் நினைவு கூறும் டினா அங்கு அவர்களுக்கு உதிரி கருக்களை நன்கொடையாக வழங்கிய சுமார் 300 நபர்களின் சுயவிவரங்கள் அவர்களுக்கு வழங்கப்பட்டன என்றும், தொடக்கப் பள்ளி ஆசிரியராகப் பணிபுரியும் டினாஅவற்றைப் பார்த்து, “நாங்கள் தேர்ந்தெடுப்பதில்லை” என்று கூறினார். “நாங்கள் ஒரு குழந்தையை விரும்பினோம், அவ்வளவே.” ஆனாலும், நன்கொடையாளர்களின் சுகாதார பின்னணியைக் கருத்தில் கொள்வதற்கு முன்பு, “நாங்கள் இருவரும் சிறிய மனிதர்கள்” என்று டினா சிரித்தார். அவர்கள் தேர்வைச் சுருக்கிக் கொண்டு இறுதியாக கருவைத் தேர்ந்தெடுத்தனர்.

27 ஆண்டுகளாக உறைந்திருந்த கரு

டினாவிற்கு கருமுட்டை மாற்றம் செய்யப்பட்ட நாளில்தான் அந்த கரு அக்டோபர் 14, 1992-ம்  தேதியிலிருந்து 2017-ம் ஆண்டுவரை 24 ஆண்டுகளாக உறைந்திருப்பதைக் கண்டுபிடித்தார். அவர் நிபுணர் டாக்டர் ஜெஃப்ரி கீனனிடம் கேட்டார். ‘இதன் பொருள் என்ன?’ அவர் ‘சரி, இது ஒரு உலக சாதனையாக இருக்கலாம்.’ என்று பதிலளித்தார். ஏனெனில் ஏப்ரல் 1991-ல் பிறந்தவர் டினா. இதன்படி மருத்துவ அறிவியல் படி தாய் டினாவிற்கும் மகள் எம்மா விற்கும் ஏறத்தாழ 18 மாதங்களே வயது வித்தியாசம். எம்மா நவம்பர்  2017 இல் பிறந்தாள்.

இப்போது எம்மாவின் சகோதரி அக்டோபர் 26, 2020 ம் ஆண்டு பிறந்த ‘மோலி எவரெட் கிப்சன்’. அறிவியல் ரீதியாக  மோலி உலகின் மிக வயதான குழந்தையாக குறிப்பிடப்படுகிறாள். இதற்கான காரணம்  ‘மோலி எவரெட் கிப்சன்’ அக்டோபர் 1992 இல் உறைய வைக்கப்பட்ட  கருவைப் பயன்படுத்தி பிறந்தார். ஏறத்தாழ 27 வருடங்கள் உறையவைக்கப்பட்ட கருவிலிருந்து பிறந்த குழந்தை மோலி எவரெட் கிப்சன்.  

அதிசயமான குழந்தை மோலி

முழு மரபணு கருக்கள் இரண்டும் ஒன்றாக உறைந்து, மூன்று வருட இடைவெளியில் தாயான டினாவின் கருப்பைக்கு மாற்றப்பட்டன.  மோலி பிறந்ததை உச்சிமுகரும் தாய் டினா “2020-ம் ஆண்டில் எங்களை சுற்றியிருக்கும் அனைத்துமே ஏதாவதொரு வகையில் வீழ்ச்சியடைந்து கொண்டிருந்தன. அப்போதுதான் ஒவ்வொரு நாளும் எங்கள் வாழ்வில் வெளிச்சத்தைக் கொண்டுவருபவளாக மோலி வந்தாள்” என்கிறார்.

தாய்க்கும் மகள்களுக்கும் ஒரு வருடமே வயது வித்தியாசம். எம்மா மற்றும் மோலி இருவரும் ஒரே மரபணுவைச் சார்ந்த கருமுட்டைகள், ஒரே வருடத்தில் உறைநிலையில் வைக்கப்பட்ட இரு கருவும் பிறந்தது 3 ஆண்டுகால இடைவெளியில். ஆனாலும் அக்காவிற்கும் தங்கைக்கும் ஒரே வயது. இப்படி நிறைய சுவாரசியங்கள் எம்மாவிற்கும் மோலிகும் உண்டு.  

எம்மா மற்றும் மோலி

இரு குழந்தைகளின் தாய் டினா குறிப்பிடுவதை போல “இது அனைவராலும் புரிந்துகொள்ளமுடியாத விடயம், ஆனால் எங்களைப் பொருத்தவரை, மோலி எங்களின்  சிறிய அதிசயம்.” என்றுதான் சொல்லவேண்டும். இத்தகைய வியத்தகு சாதனைகளை அறிவியலின் அற்புதங்கள் என்றுதான் குறிப்பிடவேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *