1)விளைநிலங்கள் வழியாக உயர்மின் கோபுரம் அமைக்க எதிர்ப்பு
விளைநிலங்கள் வழியாக உயர்மின் கோபுரம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து, கலசபாக்கத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் கதறி அழுததனர்.
அரியலூர் மாவட்டத்தில் இருந்து ஆந்திர மாநிலத்திற்கு மின் வினியோகம் செய்ய திருவண்ணாமலை மாவட்டம் வழியாக உயர்மின் கோபுரங்கள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. விவசாய நிலங்களிலும் உயர்மின் கோபுரம் அமைப்பதால் தங்களது வாழ்வாதாரம் பாதிக்கும் என கூறி, ஆரம்பம் முதலே விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், திருவண்ணாமலை மாவட்டம், கலசபாக்கம் வட்டம், அலங்கார மங்கலம், காம்பட்டு, அணியாலை உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் இத்திட்டத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
உரிய இழப்பீடு வழங்க வலியுறுத்தியும், இத்திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும் கலசபாக்கம் தாலுகா அலுவலகம் முன்பு நேற்று முன்தினம் விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, அப்போது விவசாயிகள் கதறி அழுதனர். போலீசார் வந்து அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதிகாரிகளிடம் பேசி நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததன்பேரில் விவசாயிகள் கலைந்து சென்றனர்.
2)சேலத்தில் முதல்வர் வீட்டு முன் திரண்ட ஆசிரியர்கள்
சேலத்தில் பணி நியமனம் கேட்டு முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் வீட்டின் முன் வெயிட்டேஜ் ஆசிரியர்கள் திரண்டு கோரிக்கை அட்டைகளை ஏந்தி காத்திருந்தனர். தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள சேலம் வந்துள்ளார். நெடுஞ்சாலைநகரில் உள்ள தனது வீட்டில் தங்கியுள்ள நிலையில், அப்பகுதியில் நேற்று காலை 7 மணிக்கு ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்று பணி நியமனத்திற்கு சான்றிதழ் சரிபார்க்கப்பட்டு காத்திருக்கும் வெயிட்டேஜ் ஆசிரியர்கள் 200க்கும் மேற்பட்டோர் திரண்டனர். அவர்கள், கோரிக்கை அட்டைகளை கையில் ஏந்தியபடி காத்திருந்தனர்.
அதன் பின் எடப்பாடி பழனிசாமியிடம் கோரிக்கை மனுவை ஆசிரியர்கள் கொடுத்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது: கடந்த 2013ம் ஆண்டு ஆசிரியர் தகுதி தேர்வில் அதிக மதிப்பெண் (90-110) பெற்று, சான்றிதழ் சரிபார்ப்பு முடித்து பணி நியமனம் பெறும் வேளையில், தவறான வெயிட்டேஜ் முறையால் பணி வாய்ப்பை இழந்து நிற்கிறோம். பல ஆண்டுகளாக வேதனையில் தவிக்கும் எங்களுக்கு, கடந்த 2018ம் ஆண்டு வெயிட்டேஜ் முறையை அரசு ரத்து செய்தது மகிழ்ச்சியை தந்தது. ஆனால், பாதிக்கப்பட்ட எங்களுக்கு இன்னும் பணி நியமனம் கிடைக்காமல் தவித்துக் கொண்டிருக்கிறோம். அதனால், பணி நியமனம் வழங்கி வாழ்வை காக்குமாறு கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறு அந்த மனுவில் கூறியுள்ளனர்.
3)கேரளாவில் கொரோனா தொற்று மேலும் அதிகரிக்க வாய்ப்பு சுகாதாரத்துறை அமைச்சர் சைலஜா
இது தொடர்பாக சைலஜா வெளியிட்டுள்ள அறிக்கையில்
கேரளாவில் நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலையொட்டி மக்களின் நெருங்கிய நடமாட்டம், கொரோனா தொற்று மேலும் அதிகரிப்பதற்கான நிலையை உருவாக்கி உள்ளது. இதன் தொடர்ச்சியாக கடந்த 3 தினங்களாக கொரோனா பாதிப்புக்குள்ளானவர்களின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது.
எனவே இனி வரும் நாட்களில் பொதுமக்கள் மிக எச்சரிக்கையுடன் இருக்க வேண்டிய காலகட்டமாகும். எனவே மக்கள் தேவையின்றி வெளியிடங்களில் சுற்றுவதை தவிர்க்க வேண்டும். அத்தியாவசிய அவசர தேவைகளுக்காக மட்டுமே மக்கள் வீட்டை விட்டு வெளியே வரவேண்டும். குழந்தைகள், முதியவர்களின் கண்காணிப்பில் அதிக கவனம் செலுத்துங்கள். அடிக்கடி, சோப் மூலம் கைகளை கழுவுங்கள், முக கவசம் அணிய மறக்காதீர்கள்.
4)நிவர்,புரெவி புயல் பாதிப்பு
கறம்பக்குடி பகுதியில் வி்ட்டு விட்டு மழை பெய்து வருவதால் அறுவடைக்கு தயாரான சோளப்பயிர்கள் மற்றும் நிலக்கடலை பயிர்கள் அழுகியும் மீண்டும் முளைத்தது. புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி பகுதியில் உள்ள கோட்டைக்காடு கிராமம் அமைந்துள்ளது. இக்கிராமத்தில் விவசாயிகள் ஏராளமானோர் உள்ளனர். இங்குள்ள விவசாயிகள் ஏராளமானோர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தங்களது விவசாய விலை நிலங்களில் பல ஏக்கரில் மக்காச்சோள பயிர்களை பயிரிட்டனர். மேலும் நிலகடலை பயிர்களையும் சாகுபடி செய்திருந்தனர்.
கடந்த சில தினங்களுக்கு முன்பு தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் நிவர் புயல் மழையின் காரணமாக பல்வேறு மாவட்டங்கள் பாதிக்கப்பட்டன. நிவர் புயல் பாதிப்பை ஏற்படுத்தின. இதன் பாதிப்பால் பல ஏக்கர் விவசாய நிலங்கள் பெரும் பாதிப்பை ஏற்படுத்தின. அந்த பாதிப்பு அடங்குவதற்குள் புரெவி புயல் திடீரென உருவாகி கன மழை கொட்டியது. இதன் காரணமாக கோட்டைக்காடு கிராமத்தில் பல ஏக்கரில் சில மாதங்களுக்கு முன்பு பயிரிடப்பட்டு நன்கு விளைந்து அறுவடைக்கு தயார் நிலையில் இருந்த சோள கதிர்கள் முழுவதும் தண்ணீருக்குள் விழுந்து மூழ்கி மீண்டும் முளைத்து விட்டது.
5)தமிழ் நாட்டில் கோரானா
தமிழ் நாட்டில் நேற்று 1 127 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழ் நாட்டில் கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 8 லட்சத்து 5 ஆயிரத்து 777 ஆக அதிகரித்துள்ளது.
9 ஆயிரத்து 692 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
நேற்று 1 202 பேர் சிகிச்சைக்கு பின் வீடுதிரும்பியுள்ளனர் செய்யப்பட்டுள்ளனர்.
இதனால் தமிழ் நாட்டில் கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 7 84 117 ஆக உயர்ந்துள்ளது.
நேற்று14 பேர் உயிரிழந்துள்ளனர்.
6)தமிழக மீனவர்கள் கைது
புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினத்தைச் சேர்ந்த கான்ஸ்டன்ட் என்பவருக்குச் சொந்தமான விசைப்படகில் அதே பகுதியைச் சோ்ந்த ரமேஷ், பாண்டு, மோகன் ஆகிய 4 பேரும் கோட்டைப்பட்டினம் மீன்பிடித் துறைமுகத்தில் இருந்து சனிக்கிழமை கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனா்.
நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த இவர்களை, அங்கு வந்த இலங்கைக் கடற்படையினர் எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கைது செய்தனர்.
பின்னா், 4 பேரையும் காரைநகரிலுள்ள கடற்படை முகாமுக்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்ட அவா்கள் 4 பேரையும் அங்கு தங்க வைத்துள்ளனர்.
7)எம்.பில்., பி.ஹெச்டி. பயிலும் மாற்றுத் திறனாளி மாணவா்கள் யுஜிசி கல்வி உதவித் தொகைக்கு விண்ணப்பிக்கலாம்.
இது குறித்து யுஜிசி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: நாடு முழுவதும் உள்ள பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளில் எம்.பில், பி.ஹெச்டி. ஆராய்ச்சிப் படிப்புகளை மேற்கொண்டு வரும் மாற்றுத் திறனாளி மாணவா்களுக்கு யுஜிசி சாா்பில் உதவித் தொகை வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி 2020-2021-ஆம் கல்வியாண்டில் பயிலும் மாணவா்கள் உதவித்தொகை பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.