டைம் இதழ் யோகி

அமெரிக்காவின் டைம் இதழ் யோகியை பாராட்டியதா? உ.பி அரசின் விளம்பரத்தை செய்தியாக பரப்பிய இந்திய ஊடகங்கள்

கடந்த ஜனவரி 6/21 ஆம் தேதி, யோகி ஆதித்யநாத்தின் தலைமையிலான அரசு கொரோனா தொற்றைக் கையாள்வதில் திறன்பட செயல்பட்டதாக அமெரிக்காவின் டைம் இதழ் பாராட்டியுள்ளதாக ‘நியூஸ் 18 UP’ செய்தி வெளியிட்டது. மேலும் “யோகியின் முயற்சிகள் இந்தியாவில் பாராட்டப்படுவது மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் எதிரொலிக்கின்றன” என்றும் நியூஸ் 18 தொலைக்காட்சியில் தொடர்ச்சியாக செய்திகள் வெளியிடப்பட்டன.

“டைம் இதழ் உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் அரசாங்கத்தின் பணிகளைப் பாராட்டியுள்ளது” என ‘ஜீ நியூஸ்’ செய்தி வெளியிட்டது. மேலும் உலகம் தற்போது அவரது (யோகியின்) நடவடிக்கைகளை அங்கீகரித்து உள்ளதாகவும் செய்திகள் வெளியிடப்பட்டன.

‘ஜீ நியூஸ்’, ‘நியூஸ் 18 யுபி’ மட்டுமின்றி ‘ஏபிபி கங்கா’, மற்றும் ‘டிவி 9 பரத்வர்ஷ்’ ஆகிய செய்திகளிலும் யோகி ஆதித்யநாத் அரசாங்கத்தின் கொரோனா தடுப்பு பணிகளைப் ‘டைம் நாளிதழ்’ பாராட்டி உள்ளதாக” தொடர்ச்சியான செய்திகளை வெளியிட்டனர்.

நியூஸ் லாண்டரி இணையதளம் மேற்கொண்ட விசாரணை

‘டைம் நாளிதழ்’ யோகி ஆதித்யநாத்தை பாராட்டியதாக வந்த செய்திகளின் பின்னணி குறித்து ‘நியூஸ்லாண்டரி’ இணையதள செய்தி நிறுவனம் மேற்கொண்ட விசாரணையில், இது முழுக்கமுழுக்க உத்திரப்பிரதேச அரசு சார்பாக வெளியிட்டுள்ள விளம்பரம் என்றும், அந்த விளம்பரப் பக்கத்தில், உத்திரப் பிரதேசத்திலிருந்து வெளியாகும் content என  சுட்டிக்காட்டப்பட்டுள்ளதாகவும் ‘டைம் நாளிதழ்’ தெரிவித்தது.

‘டைம் நாளிதழில்’ வெளியான மூன்று பக்க விளம்பரத்தில் ஆதித்யநாத் மேற்கொண்ட “சிறந்த மற்றும் திறமையான” கோவிட் மேலாண்மையால் இந்தியாவின் அதிக மக்கள் தொகை கொண்ட மாநிலத்தில் கோவிட் இறப்பு விகிதம் 1.3 சதவீதமாக குறைந்துவிட்டதாகவும்”, மேலும் “உத்திரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தைத் தவிர வேறு எந்த தலைவரும் இதைவிட சிறப்பாக செய்திட முடியாது” என யோகி அரசை பெருமைப்படுத்தும் வாசகங்கள் அந்த விளம்பரத்தில் இடம்பெற்றிருந்தன. 

விளம்பரத்தை செய்தியாக சித்தரித்த யோகியின் அலுவலகம்

டிசம்பர் 15 அன்று யோகி ஆதித்யநாத்தின் அலுவலகத்திற்கு சொந்தமான ட்விட்டர் பக்கம் முதன்முதலாக இந்த “விளம்பரத்தை”, “செய்தி அறிக்கை” என திரித்து பதிவிட்டது.

இதனைத் தொடர்ந்து சில வாரங்களில், உத்திரப்பிரதேச மாநில பாரதிய ஜனதா கட்சி தலைவர் ஸ்வதந்திர தேவ் சிங் மற்றும் மும்பை பங்குச் சந்தையின் தலைமை நிர்வாக அதிகாரி ஆஷிஷ் சவுகான் உட்பட பல பிரபலமான சமூக ஊடகக் கணக்குகள் இந்த போலி செய்திகளை பரப்ப தொடங்கின.

டைம் இதழ் யோகியைப் பாராட்டியதாக போலி செய்தியை தொடர்ந்து வெளியிட்ட ஊடகங்கள்

2021-ம் ஆண்டு ஜனவரி மாதமும் இந்த செய்தியின் உண்மைத்தன்மை  குறித்து கவலையில்லாமல் தொலைக்காட்சி செய்திகள் சரமாரியாக இந்த போலி செய்திகளைப் பரப்பின.

இது மட்டுமின்றி ‘டைம் நாளிதழில்’ இந்த விளம்பரம் வெளிவருவதற்கு முன்னரே டிசம்பர் மாத தொடக்கத்தில் உத்திரப்பிரதேச அரசு, பத்திரிகையாளர் சந்திப்பிற்காக இந்த தகவல்களை அனுப்பி வைத்ததைத் தொடர்ந்து  

பல்வேறு ‘ஃபர்ஸ்ட் இந்தியா’, ‘டெய்லி கார்டியன்’ மற்றும் ‘தெஹல்கா’ போன்ற ஆங்கில செய்தித்தாள்களிலும் இது வெளியிடப்பட்டது. 

  • ராஜஸ்தான், டெல்லி, உத்தரபிரதேசம் மற்றும் குஜராத் ஆகிய மாநிலங்களில் வெளியாகும் ஃபர்ஸ்ட் இந்தியா’ ஆங்கில செய்தித்தாளில் இந்த செய்தி முதல்முறையாக வெளியிடப்பட்டது. 
  • இந்த செய்தியை வெளியிட்ட முன்னால் ‘ஜீ செய்தி’ நிர்வாகி ஜகதீஷ் சந்திரா “கோவிட் -19 எனும் கண்ணுக்குத் தெரியாத எதிரியை முதல்வர் யோகி எவ்வாறு எதிர்த்துப் போராடினார்!” என்ற தலைப்பில் இந்த போலி செய்தியை டிசம்பர் 5 ஆம் தேதி வெளியிட்டார்.
  • இதனைத் தொடர்ந்து இந்த போலி செய்தி டிசம்பர் 9ஆம் தேதி டெய்லி கார்டியன் பத்திரிக்கையிலும் டிசம்பர் 14-ம் தேதி தெகல்கா பத்திரிக்கையிலும் வெளியானது. 
  • மேலும் டிசம்பர் 17 அன்று ‘இந்தியன் எக்ஸ்பிரஸ்’ செய்தியில் உத்திரப்பிரதேச அரசின் சுகாதாரத் துறையின் கூடுதல் செயலாளர் அமித் மோகன் பிரசாத் செய்தி வெளியீட்டை பறைசாற்றி எழுதினார்.

புலனாய்வுக்கு பெயர் பெற்ற பத்திரிகையான  தெகல்கா பத்திரிகையைச் சேர்ந்த ஊழியர் ஒருவர், இது போன்ற செய்தி வெளியீடுகளை அறிக்கைகளாக மாற்றி பொய் செய்திகளை பரப்புவதற்கான காரணமாக நியூஸ் லாண்ட்ரி இணையதளத்திற்கு தெரிவித்த தகவலானது, “யோகி ஆதித்யநாத் அரசுடன் அனுசரித்து செல்லுமாறு நிறுவனத்தின் தலைமை அறிவுறுத்தியதாகவும், மேலும் இந்த செய்தி வெளியான பின்னர் தெகல்கா பத்திரிகைக்கு உத்திரப்பிரதேச அரசு சார்பாக பல பக்கத்திற்கு விளம்பரங்கள் பெறப்பட்டதாகவும் தெரிவித்தார். மேலும் அவர் “நீங்கள் இன்று உத்தரபிரதேசத்தில் ஊடக அறத்தை பார்க்க விரும்பினால், அதை மெழுகுவர்த்தியுடன் வெளியே தேடி செல்ல வேண்டும்” என்றும் தெரிவித்தார்.

மேலும் அரசுக்கு சாதகமான ‘ANI’ போன்ற செய்திகளுக்கு மட்டுமே உத்திரப்பிரதேச அரசு முன்னுரிமை வழங்குவதாகவும் தெரிவித்தார் .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *