மூன்று கட்டங்களாக நடைபெற்ற பீகார் சட்டமன்றத் தேர்தல் நவம்பர் 7-ம் தேதியுடன் முடிவடைந்துள்ள நிலையில் நாளை (நவம்பர் 10) தேர்தல் முடிவுகள் வெளிவர இருக்கின்றன. இந்நிலையில் பல்வேறு தொலைக்காட்சி ஊடகங்கள் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பினை வெளியிட்டுள்ளன.
மூன்று முக்கிய அணிகள் இந்த தேர்தலை சந்தித்தன.
- நிதிஷ் குமாரின் ஒருங்கிணைந்த ஜனதா தளம் (JD(U)) மற்றும் பாரதிய ஜனதா கட்சி (BJP) உள்ளிட்ட கட்சிகள் இணைந்த தேசிய ஜனநாயகக் கூட்டணி,
- ராஷ்ட்ரிய ஜனதா தளம்(RJD), இந்திய தேசிய காங்கிரஸ் (INC) மற்றும் இடதுசாரி கட்சிகள் இணைந்த மெகா கூட்டணி,
- சிராக் பஸ்வானின் லோக் ஜனசக்தி கட்சி.
அனைத்து ஊடக கருத்துக் கணிப்பு முடிவுகளிலும் தேஜேஸ்வி யாதவ்-ன் ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சி முன்னிலையில் வந்திருக்கிறது. நாளை தேர்தல் முடிவுகள் வெளியாகவுள்ள நிலையில் இந்த கருத்துக் கணிப்பு முடிவுகள் பெரும் எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.
டைம்ஸ் நெள, டிவி9, ஏபிபி கருத்துக்கணிப்பு முடிவுகள் ஆட்சியமைப்பதில் கடும் போட்டி இருக்கும் என்பதைக் காட்டுகின்றன.
இந்தியா டுடே – ஆக்சிஸ் மை இந்தியா நடத்திய கருத்துக்கணிப்பு
தேசிய ஜனநாயக கூட்டணி : 69 – 91
மெகா கூட்டணி : 139 – 161
லோக் ஜனசக்தி : 3 – 5
டைம்ஸ் நவ் – சி வோட்டர் கருத்துக்கணிப்பு
தேசிய ஜனநாயக கூட்டணி : 116
மெகா கூட்டணி : 120
லோக் ஜனசக்தி : 1
ஏபிபி (ABP) கருத்துக்கணிப்பு
தேசிய ஜனநாயக கூட்டணி : 104 – 128
மெகா கூட்டணி : 108 – 131
லோக் ஜனசக்தி : 1 – 3
ரிபப்ளிக் டிவி – ஜன் கி பாத் கருத்துக்கணிப்பு
தேசிய ஜனநாயக கூட்டணி : 91 – 117
மெகா கூட்டணி : 118 – 138
லோக் ஜனசக்தி : 5 – 8
டிவி9 கருத்துக்கணிப்பு
தேசிய ஜனநாயக கூட்டணி : 110 – 120
மெகா கூட்டணி : 115 – 125
டுடேஸ் சாணக்யா கருத்துக்கணிப்பு
தேசிய ஜனநாயக கூட்டணி : 55 (11 இடங்கள் கூடலாம் அல்லது குறையலாம்)
மெகா கூட்டணி : 180 (11 இடங்கள் கூடலாம் அல்லது குறையலாம்)