தமிழ்நாட்டில் வயது வாரியான வாக்காளர்களும் நினைவுபடுத்த வேண்டிய விஷயங்களும்!

தமிழ்நாட்டில் வயது வாரியாக வாக்காளர் பட்டியல் வெளியாகியிருக்கிறது, 18 இருந்து 29 வயதுக்குள் சுமார் ஒரு கோடியே 33 லட்சத்து 7,779 வாக்காளர்கள் இருக்கிறீர்கள், உங்களிடம் பேச நினைவுபடுத்த பல்வேறு விஷயங்கள் இருக்கிறது. பொதுவாக இந்த வயது வாக்காளர்கள் உயர்நிலைப் படிப்பை முடித்து கல்லூரி படிப்பிற்குள் நுழையும் வயதில் தொடங்கி வேலைதேடுவது, வேலையில் சேர்வது, திருமணம் போன்ற நிலைகளுக்கு வந்தடைபவர்களாக இருக்கிறீர்கள்.

பள்ளி படிப்பை முடித்து கல்லூரி படிப்பை எதிர்நோக்கும் பலருக்கு மருத்துவம் படிக்கும் கனவும் இருந்திருக்கும், அந்த கனவு கடந்த மூன்று வருடங்களாக அதிமுக பாஜக அரசு கொண்டு வந்த நீட் தேர்வால் நொறுங்கிப்போனது என்பதை இந்த தேர்தல் நேரத்தில் உங்களுக்கு ஞாபகப்படுத்த வேண்டியிருக்கிறது, பல்வேறு போராட்டங்களுக்கு பிறகு இறுதியாக அரசு பள்ளி மாணவர்களுக்கு ஒரு 7.5 சதம் இட ஒதுக்கீடு தர அதிமுக அரசு முடிவெடுத்து இருக்கிறது. ஆனால் அதைக் கூட தரக்கூடாது என்று பாஜக அரசு உச்சநீதிமன்றத்தில் எதிர்க்கிறது.

தமிழ்நாட்டில் பெரும்பான்மையான பிற்படுத்தப்பட்ட அல்லது தாழ்த்தப்பட்ட சமூகத்தில் இருந்து ஒரு மருத்துவர் உருவாவது என்பது எவ்வளவு கடினமானது என்பது நமக்கு தெரியும். அப்படி மருத்துவர் ஆகும் குடும்பம் அதன் தலைமுறையே முன்னேறிவிடும், நுழைவுத்தேர்வு ரத்து செய்யப்பட்ட திமுக ஆட்சிக் காலத்தில் தமிழக கிராமங்களில் இருந்து குறிப்பாக கொங்கு மற்றும் வட மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான மருத்துவர்கள் வந்தார்கள், ஆளும் அதிமுக பாஜக ஆட்சியில் தமிழக மாணவ வாக்காளர்களின்மருத்துவ கனவு என்பது நிர்மூலமாக்க பட்டு இருக்கிறது என்பதை நாம் நினைவுபடுத்திகொள்ள வேண்டியிருக்கிறது.

மத்திய மாநில அரசுகள் நுழைவுத்தேர்வு நடைமுறையை கொண்டுவந்த பிறகு மருத்துவ படிப்பு என்பது பெரும்பணக்கார்களின் உடைமையாக மாற்றப்பட்டு விட்டது, நுழைவுத்தேர்வுக்கான பயிற்சி மையங்களின் கட்டணம் சராசரியாக 2 லட்சம் என்பது பொதுவாக நீங்கள் எல்லோரும் அறிந்திருக்க கூடிய தகவல்தான்.

கேரளா ராஜஸ்தான் போன்ற இடங்களில் இன்னும் பல மடங்கு அதிகம் கட்டி மாணவர்கள் படிப்பதாக தகவல்கள் இருக்கிறது. யோசித்து பாருங்கள் தமிழகத்தில் 60 சதவீதம் கிராமப்புறமாக இருக்கின்றன, இங்கிருந்து ஆண்டின் சில மாதங்கள் மட்டுமே வேலை கிடைக்கும் விவசாய கூலிகளின் பிள்ளைகளோ, அல்லது சிறிய நிலம் வைத்திருக்கும் ஆண்டுக்கு ஒருபோகம் மட்டும் விவசாயம் செய்து மிகச்சொற்ப வருமானம் ஈட்டும் சிறுவிவசாயின்  குடும்பங்களின் பிள்ளைகளோ இவ்வளவு விலை உயர்ந்த நுழைவுத்தேர்வு பயிற்சியை எங்கிருந்து பெறமுடியும்? கிராமங்களில் இருக்கும் பெரும்பாலும் பிற்படுத்தப்பட்ட தாழ்த்தப்பட்ட குடும்பங்களில் இருந்து டாக்டர்கள் உருவாக்கும் வாய்ப்பையே இந்த அரசு நசுக்கி இருக்கிறது.

தமிழக நகரங்களை பொறுத்தவரைக்கும் மிகப்பெரிய பொருளாதார பின்னணி உள்ளவர்களை தவிர்த்து மாத சம்பளக்காரர்கள், சிறு வியாபாரிகள், கடைக்காரர்கள், தினக்கூலிகள், துப்புரவு பணியாளர்கள், ஆட்டோ ஓட்டுனர்கள், பிளம்பர்கள், எலெக்ட்ரீஷியன்கள், மெக்கானிக்குகள், காய்கறி வண்டிக்காரர்கள், முறைசாரா தொழிலாளர்கள் என்று ஒரு நகரின் 80 சதவீதம் இருப்போரின் பிள்ளைகளுக்கு மருத்துவ மருத்துவ படிப்பு என்பது எட்டாக்கனியாக்கி இருக்கிறது இந்த அரசு. இந்த கட்டுரை எழுதும் நேரத்தில் இவ்வளவு அநீதியான நுழைவுத்தேர்வு என்பது

இளங்கலை நர்சிங் படிப்புகளுக்கும் கொண்டுவந்திருக்கிறது ஆளும் பாஜக அரசு. மருத்துவ படிப்பு கூட ஒரு சமூகத்தில் நூற்றில் 2 பேரின் கனவாகஇருந்திருக்கும் ஆனால் செவிலியர் படிப்பு என்பது கிராமங்களில் சிறு நகரங்களில் உள்ள பல்லாயிரக்கணக்கான குடும்பங்களுக்கு வருமானம் ஈட்டித்தந்து கொண்டிருக்கும் படிப்பு. இன்னொரு நோக்கில் தமிழ்நாட்டின் பெண் பிள்ளைகளுக்கு பொருளாதார விடுதலையும், சுயமரியாதையையும் கொடுத்த படிப்பு, இன்னைக்கு அதற்கும் நீட் தேர்வு,அதற்கான பயிற்சி, மையங்கள், அதற்கான கட்டணங்கள் என்பதும் 18 வயதில் துவங்கும் உங்கள் 1கோடி வாக்காளர்களில் எத்தனை ஆயிரம் பெண்களின் வாழ்வை முறித்து போடக்கூடிய ஆபத்தான கொள்கை என்பதை நாம் நினைவுபடுத்திக்கொள்ள வேண்டியிருக்கிறது.

சென்னையில் மட்டும் 9 லட்சம் வேலையில்லா பட்டதாரிகள்

இந்த ஒரு கோடியே முப்பத்தி மூன்று லட்சம் வாக்கலாளர்களுக்குள் தான் தமிழ்நாட்டின் அரசு வேலை தேடி பதிந்திருக்கும் 81.30 லட்சம் பேர்இருக்கிறீர்கள், அதில் 2.4 லட்சம் என்ஜினீயர்கள் வேலைவாய்ப்புஅலுவலகத்தில் வேலை தேடி பதிந்திருக்கிறீர்கள், பட்டதாரிகள், முதுநிலை பட்டதாரிகள், பொறியாளர்கள் என்று கடந்த நிதியாண்டில் சென்னையில் மட்டும் 9 லட்சம் பேர் வேலைதேடி பதிவு செய்திருக்கும் நிலையில் ஆளும் அதிமுக அரசு தமிழக அரசு வேலைகளை வெளிமாநிலத்தவர்களுக்கு கொடுத்துக் கொண்டிருந்தது என்பதை நாம் எப்படி மறக்கமுடியும்?

நெய்வேலி நிலக்கரி சுரங்க வேலை வாய்ப்புகள், திருச்சி தென்னக ரயில்வேவேலைவாய்ப்புகள். அஞ்சல் பணி வாய்ப்புகள், வங்கி, வருமானவரிவேலைவாய்ப்புகளில் என்று இந்த ஒரு கோடி வாக்காளர்கள் இழந்தது பல்லாயிரக்கணக்கான வேலைவாய்ப்புகள் என்பதை நாம் நினைவுப்படுத்திக் கொள்ள வேண்டியிருக்கிறது.

2014ம் ஆண்டு ஆட்சிக்கு வரும்போது ஆண்டுக்கு 2 கோடி இருக்கு வேலைவாய்ப்பு வழங்குவோம் என்று மோடி அறிவித்து இருந்தார், மோடி பணமதிப்பிழப்பு நடவடிக்கையை அறிவித்திருந்த 2016 நவம்பரில் இருந்து 2018 வரைக்கும் 50 லட்சம் பேர் வேலையிழந்திருப்பதாக பெங்களூரு ஆஸிம் பிரேம்ஜி பல்கலைக்கழக ஆய்வு தெரிவிக்கிறது.

அடுத்து மோடி அறிமுகப்படுத்திய GST மாபெரும் தவறான பொருளாதார சீரழிவாக இன்றளவும் தொடர்கிறது, காங்கிரஸ் தலைவர் அஜய் உபாத்யாய் பணமதிப்பிழப்பு மற்றும் GST மூலமாக 2 கோடி பேர் வேலை இழந்துள்ளதாக புள்ளிவிபரங்களை முன்வைத்தார்.

4 வருடங்களில் 35 லட்சம் வேலையிழப்பு

கைத்தறிகள், ஆயத்த ஆடையாகங்கள், தோல் தொழிற்சாலைகள், நகை தொழில்கள், சிறிய பட்டறைகள், லேத்துகள், பல்வேறு உதிரிபாக தொழில்கள் என்று TMSME என்று சொல்லக்கூடிய வணிக சிறு குறு தொழில்களில் மட்டும் கடந்த 4 வருடங்களில் 35 லட்சம் வேலையிழப்புகள் நிகழ்ந்துள்ளதாக அகில இந்திய உற்பத்தியாளர்கள் சங்க (AIMO) ஆய்வு சொல்கிறது.

இப்படி பல்வேறு ஆய்வுகளும் புள்ளிவிபரங்களும் சொல்வது ஒன்றுதான் மோடி அரசு செயல்படுத்திய தவறான பொருளாதார சீர்திருத்தங்களினூடாக பல லட்சக்கணக்கான இந்தியர்கள் வேலை இழந்துள்ளார் என்பதுதான், அடுத்து கடந்த ஒரு வருடமாக நாம் சந்திக்கும் கோரனோ லாக்டவுனில் எத்தனை லட்சம் வேலையிழப்புகள், எத்தனை லட்சம் மக்கள் வேலையிழந்து கால்நடையாக தங்கள் சொந்த கிராமங்களுக்குள் புகுந்திருக்கிறார்கள்? இந்த ஒரு கோடி வாக்காளாளர்களில் அவர்களும் இருக்கிறீர்கள் என்பதை நாம் நினைவுபடுத்திக் கொள்ள  வேண்டியிருக்கிறது.

இத்தனை கோடி பேர் வேலை இழந்து கொண்டிருக்கும் சூழலில் கூட  24 லட்சம் அரசு பணிகளை நிரப்பப்படாமல் வைத்திருக்கிறது இந்த அரசு என்று RTI க்கு அளித்த பதிலில் அரசே சொல்லியிருக்கிறது என்பதையும் இந்த நாட்டு இளைஞர்களின் வேலைவாய்ப்பில் எவ்வளவு இந்த அரசு என்ன லட்சணத்தோடு இருக்கிறது என்பதையும் இந்த ஒருகோடி வாக்காளர்களும் நினைவுபடுத்திக்கொள்ள வேண்டியிருக்கிறது.

எந்த வேலைவாய்ப்பையும் தொழில் வாய்ப்பையும் இந்த 5 ஆண்டுகளில் வழங்காத அரசுகள்தான் இன்றைய சர்வதேச சந்தை நிலவரப்படி வெறும் 30 ரூபாய்க்குவழங்கவேண்டிய பெட்ரோலை வரிகளின் மூலமாக மட்டுமே 94 ரூபாய்க்கு விற்று நம்மை சுரண்டி கொழுத்துக் கொண்டிருக்கிறது.

இந்த ஒரு கொடியே முப்பத்திமூன்று லட்சம் வாக்காளர்களில் சொந்தமாக ஆட்டோவோ வாடகைக்காரோ அல்லது OLA, UBER SWIGGY ZOMOTO என்று பெருநிறுவனங்களுக்கு பல்வேறு நெருக்கடிகளுக்கு இடையே பணிபுரியும் லட்சக்கணக்கான இளைஞர்களுக்கு இந்த அரசுகள் பெட்ரோல் டீசல் விலையேற்றத்தினூடாக எத்தனை வாழ்வியல்நெருக்கடிகளை கொடுக்கின்றன என்பதையும் இந்த தேர்தல் நேரத்தில் நாம்நினைவுபடுத்திக் கொள்ள  வேண்டியிருக்கிறது.

அடுத்து 30 முதல் 39 வயதிற்குள் இருக்கும் வாக்காளர்கள் சந்திக்கும் சந்தித்த நெருக்கடிகளை பார்ப்போம்.

– அழகிரிசாமி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *