1. கல்லும் கதை சொல்லும் – தமிழக சிற்பக் கலைகள் குறித்து
மக்கள் சிந்தனைப் பேரவை நடத்தும் ஈரோடு புத்தகக் கண்காட்சியில் ஆவுடையார் கோயில் உள்ளிட்ட தமிழகத்தின் கோவில் சிற்பக் கலைகள் குறித்து தா.பாண்டியன் அவர்கள் தமிழர்களின் கலை அறிவு குறித்து பேசிய காணொளி.
2. பொதுவுடைமைப் போராட்டக்காரர் ஜீவா பற்றி அரிய தகவல்கள்
தமிழக பொதுவுடைமை இயக்கத்தின் முன்னோடி, விடுதலைப் போராட்ட வீரர் தோழர் ஜீவா குறித்து, ’ஜீவாவும் நானும்’ என்று புத்தகம் எழுதிய தா.பாண்டியன் தாமரை இதழ் விழாவில் பேசியது.
3. பெரியாரை ஏன் ’தந்தை பெரியார்’ என்று அழைக்க வேண்டும் என்ற விளக்கம்
நியூஸ் 18 தொலைக்காட்சிக்கு 2017 ஆம் ஆண்டு டிசம்பர் 24 அன்று தந்தை பெரியாரின் நினைனவு நாளை முன்னிட்டு ஏன் பெரியாரை ’தந்தை பெரியார்’ என்று அழைக்க வேண்டும் என்று தா.பாண்டியன் அவர்கள் கொடுத்த பேட்டி
4. கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை – வரலாற்று அரசியல் வகுப்பு
மூலதனத்தின் வரலாறு குறித்தும், கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை குறித்தும் தா.பாண்டியன் அவர்கள் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்களுக்கு எடுத்த விரிவான அரசியல் வகுப்பு.
5. கார்ல் மார்க்ஸ் வாழ்வும் பணியும்
மதுரையில் 2017 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ’கார்ல் மார்க்ஸ் வாழ்வும் பணியும்’ புத்தக வெளியீட்டு விழாவில் கார்ல் மார்க்ஸ் குறித்து தா.பாண்டியன் அவர்கள் பேசியது.