சர்க்கரை நோய்

சர்க்கரை எப்படி நோயாக மாறுகிறது? மீள்வதற்கு நாம் என்ன செய்ய வேண்டும்?

நோயினைப் பொருத்தவரையில் நோய்க்கான காரணம் அறிதல், பிறகு சிகிச்சை என்ற இரு பகுதிகளாக பிரிக்கலாம். தற்போது பலரின் நிம்மதியை கெடுத்து, பல குடும்பங்களின் பொருளதாரத்தை சீர்குலைத்து வந்து கொண்டிருக்கிற, பெயரில் இனிப்பு இருந்தாலும் கசப்பான அனுபவத்தை கொடுக்கும் சர்க்கரை நோய் பற்றி பேசுவோம். 

சர்க்கரை – உருவாக்கமும், பயன்பாடும், நீக்கமும்

எப்படி ஒரு வாகனம் இயங்க எரிபொருள் அவசியமோ அதேபோல் மனிதனின் ஒவ்வொரு செல்லும் இயங்க குளுக்கோஸ் எனும் சர்க்கரையே எரிபொருளாகும். நாம் உண்ணும் உணவானது வாயில் உமிழ்நீருடன் கலந்து முதல்கட்ட செரிமானம் தொடங்குகிறது. வாயில் நன்கு உமிழ்நீரோடு கலந்து கூழாக்கப்பட்ட உணவானது உணவுக் குழாய் வழியாக இரைப்பையை சென்றடைகிறது. இரைப்பையில் சுரக்கும் அமிலங்களால் உணவானது சிதைக்கப்பட்டு உணவிலுள்ள ஆற்றலானது இரைப்பை சுவரினால் உறிஞ்சப்படுகிறது. 

இரைப்பையில் செரிக்கப்பட்ட உணவானது சிறு குடலுக்குள் நுழைந்து சிறுகுடலால் சுரக்கப்படும் அமிலங்களால் சிதைக்கப்பட்டு இறுதிக்கட்ட செரிமானம் நடக்கிறது. இவ்வாறு வாயில் தொடங்கிய செரிமானம், பிறகு இரைப்பையில் செரிக்கப்பட்டு, பிறகு சிறுகுடலில் செரிக்கப்பட்டு, சிறுகுடலின் குடல் உறிஞ்சிகளால் சத்துக்கள் உறிஞ்சப்பட்டு ரத்தத்தில் கலக்கிறது.

பிறகு சிறுகுடலால் செரிக்கப்பட்ட உணவானது பெருங்குடலுக்குள் நுழைந்து மேலும் செரிக்கப்பட்டு கழிவுப்பொருளாக மலப்பைக்குள் தள்ளப்படுகிறது.

இவ்வாறு செரிமானத்தில் கிடைக்கக்கூடிய பொருளே சர்க்கரை(குளுக்கோஸ்). ரத்தத்தில் சர்க்கரையின் அளவு கூடினாலோ குறைந்தாலோ அது நோயாகக் குறிப்பிடப்படுகிறது.

சர்க்கரையின் உற்பத்தியும் அளவும் செரிமானத்தைப் பொறுத்தே கிடைக்கிறது. உணவு முறையை ஒழுங்குபடுத்துவதன் மூலம் சர்க்கரை நோய் வராமல் தடுக்கவும் குணப்படுத்தவும் முடியும். மேலும் நீண்ட நாட்கள் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டு உடல் தொந்தரவுகள் உள்ளோர், உணவு முறையை ஒழுங்குபடுத்துவதோடு மரபு வழி மருத்துவங்களின் துணையோடு முழுவதும் குணப்படுத்தவும் முடியும்.

செரிமானத்தில் மேற்சொன்ன உறுப்புகள் மட்டுமல்லாமல் இன்னும் பிற துணை உறுப்புகளும் இணைந்தே செரிமானம் நிகழ்கிறது. உடலில் எந்த உறுப்பும் தனித்து இயங்குவதில்லை. அனைத்தும் ஒருங்கிணைந்தே செயல்படுகிறது. உணவானது செரிக்கப்பட வெப்பம் தேவை. அதற்கு இதயம் துணை புரிய வேண்டும். காற்று தேவை, அதற்கு நுரையீரல் பங்கு தேவை. இப்படி அனைத்து உறுப்புகளும் இணைந்தே உடலில் இயக்கம் நடைபெறுகிறது.

செரிமானத்தின் இறுதியில் கிடைக்கும் சர்க்கரையானது ரத்தத்தில் கலக்கப்பட்டு உடலில் ஒவ்வொரு செல்லினாலும் பயன்படுத்தப்பட வேண்டும். அப்படி செல்களினால் பயன்படுத்தப்படவில்லை என்றால் ரத்தத்தில் சர்க்கரையின் அளவானது அதிகமாகிறது. பிறகு அதிகப்படியான சர்க்கரையானது சிறுநீர் மூலமாக வெளியேறுகிறது.

ஏன் ரத்தத்தில் உள்ள சர்க்கரை உடலால் நிராகரிக்கப்படுகிறது?

செரிமானத்தில் கிடைக்கும் சர்க்கரையானது செல்களால் பயன்படுத்தப்பட வேண்டுமெனில் கணையமானது இன்சுலினை சுரந்து ரத்தத்தில் உள்ள சர்க்கரையோடு கலக்கப்பட வேண்டும். இன்சுலின் சர்க்கரையோடு கலந்தால் மட்டுமே ரத்தத்தில் உள்ள சர்க்கரையானது செல்களால் ஏற்றுக்கொள்ளப்படுகிறது. கணையம் இன்சுலின் சுரந்து சர்க்கரையோடு கலக்காத போது செல்களால் சர்க்கரை நிராகரிக்கப்பட்டு ரத்தத்தில் சர்க்கரையின் அளவு கூடுகிறது. பின்னர் இந்த அதிகப்படியான சர்க்கரையானது சிறுநீரகத்தால் ரத்தத்திலிருந்து பிரிக்கப்பட்டு வெளியேற்றப்படுகிறது

கணையம் ஏன் இன்சுலின் சுரப்பை நிறுத்துகிறது?

செரிமானத்திலிருந்து கிடைக்கும் சர்க்கரையானது செல்கள் பயன்படுத்தும் அளவிற்கு தரமானதாக இருந்தால் மட்டுமே கணையமானது இன்சுலினை சுரக்கிறது. முறையற்ற செரிமானம் காரணமாக கிடைக்கும் தரமற்ற சர்க்கரையானது செல்களால் பயன்படுத்தப்படுமானால் உடலானது ஆரோக்கியத்தோடு இயங்க முடியாது. முறையான செரிமானம் நடைபெற்று கிடைக்கும் தரமான சர்க்கரையின் மூலமாக கணையாமானது தூண்டப்பட்டு இன்சுலினை சுரக்கிறது. இன்சுலின் சேர்ந்த சர்க்கரையானது செல்களால் பயன்படுத்தப்படுகிறது. உடலின் தேவையைவிட அதிகமாக இருக்கும் தரமுள்ள சர்க்கரையானது கிளைக்கோஜனாக மாற்றப்பட்டு, அதாவது செறிவு மிகுந்த குளுக்கோசாக கல்லீரலிலும் தசை நார்களிலும் சேமிக்கப்படுகிறது.

கிளைகோஜன் எந்த நிலையில் உடலால் பயன்படுத்தப்படுகிறது?

உடலின் அசாதாரண சூழலின் போதோ, உணவின் மூலமாக கிடைக்கக்கூடிய குளுகோசானது உடலின் தேவைக்கு போதுமானதாக இல்லாத போதோ, கிளைகோஜன் உடலால் பயன்படுத்தப்படுகிறது. உதாரணத்திற்கு ஒரு நாய் நம்மை பார்த்து துரத்துகிறதெனின் என்ன செய்வோம்? பயம் ஏற்படும். நம்மை பாதுகாக்கும் பொருட்டு தற்காத்துக்கொள்ள ஓடுவோம். அதேபோல் ஒருவர் அதிர்ச்சியான செய்தியைக் கேட்கும்போது, உடல் உறுப்புகளில் பாதிப்புகள் ஏற்படும்போது, உடலில் அடிபடும்போது பாதிப்பிற்குத் தகுந்தாற்போல இந்த அசாதாரண சூழலின்போது இயல்பாக செரிமானத்தின் மூலமாக கிடைக்கப்பட்ட குளுகோசானது உடலுக்கு அதிக ஆற்றல் அளிக்கக்கூடியதாக இருக்காது.

எனவே அந்த நேரத்தில் சிறுநீரகத்தின் மேற்புரத்தில் உள்ள அட்ரினல் சுரப்பிகள் அட்ரினலின் எனும் சுரப்பு நீரை சுரக்கிறது. இந்த நிலையில் கணையம் இன்சுலின் சுரப்பதை நிறுத்துகிறது. இப்போது கல்லீரலிலும் தசை நார்களிலும் செறிவு மிகுந்ததாக ஏற்கனவே சேமிக்கப்பட்ட கிளைகோஜனை வெளியிட்டு அசாதாரண ஆபத்து நிலையில் உடலுக்குத் தேவையான ஆற்றலை கொடுக்கிறது.

சர்க்கரை நோயின் அடிப்படை முறையற்ற செரிமானம்

முறையான செரிமானம் நடந்து அதன் மூலம் கிடைக்கும் சர்க்கரையானது தரமானதாகும். அதன் காரணமாக கணையம் இன்சுலினை சுரந்து செல்களால் சர்க்கரை பயன்படுத்தப்படும்போது, ரத்த்திலும் சிறுநீரிலும்  சர்க்கரை அளவு அதிகமாவதில்லை. ஒருவேளை முறையான செரிமானம் நடக்கவில்லையெனில் அதிலிருந்து கிடைக்கும் சர்க்கரையின் தரம் குறைந்ததாகவும், செல்களால் பயன்படுத்தப்படக்கூடிய நிலையில் இல்லாமல் கழிவாக மாறுகிறது. பிறகு அதில் நச்சுக்கள் இருப்பின் கல்லீரலால் அழிக்கப்பட்டு பிறகு சிறுநீரகத்தால் வெளியேற்றப்படுகிறது.

நாம் உண்ணும் உணவில் உள்ள நச்சுக்களை நீக்கும் முக்கியப் பணியை செய்வது கல்லீரல். கல்லீரல் இந்த நச்சு நீக்கும் பணியை செய்யவில்லையெனில் உணவின் மூலமாக ரத்தத்தில் கலந்துள்ள நச்சுக்கள் நேரடியாக சிறுநீரகத்திற்கு செல்லும்போது நாளடைவில் சிறுநீரகமானது பாதிப்பிற்குள்ளாகிறது. எனவேதான் நீண்ட நாட்கள் ரசாயன மருந்துகள் எடுப்பவர்களுக்கு கல்லீரல் பிரச்சினையும், சிறுநீரக செயலிழப்பும் ஏற்படுகிறது. பெரும்பாலான ரசாயன மருந்துகளில் பக்கவிளைவு குறித்தான தகவலில் கல்லீரல் பாதிப்பு குறிப்பிடப்பட்டிருக்கும்.

அது என்ன முறையற்ற செரிமானம், தரமற்ற சர்க்கரை?

”தீயள வன்றித் தெரியான் பெரிதுண்ணின்
நோயள வின்றிப் படும்”

– திருக்குறள்,மருந்து அதிகாரம்

பசியின் அளவின்படி அல்லாமல் மிகுதியாக உண்டால் நோய்கள் அளவில்லாமல் ஏற்படும்.

பசியற்ற நிலையிலோ அல்லது பசியின் அளவை விட அதிகமாகவோ உண்ணும்போது செரிமானம் பாதிக்கப்படுகிறது. முறையான செரிமானம் நடைபெறுவதில்லை. பசியற்ற நிலையில் உண்ணும் உணவானது நல்ல முறையில் செரிக்கப்படுவதில்லை. இதனால் கிடைக்கும் சர்க்கரையானது தரம் குறைந்த நிலையில் ரத்தத்தில் கலக்கிறது. தரம் குறைந்த சர்க்கரையின் காரணமாக கணையமானது இன்சுலினை சுரப்பதில்லை. இதனால் செல்களும் ரத்தத்தில் உள்ள சர்க்கரையை பயன்படுத்துவதில்லை. தற்போது ரத்த பரிசோதனை செய்யும்போது சர்க்கரையின் அளவு அதிகமாக இருக்கிறது. அந்த நபர் சர்க்கரை நோயாளியாக அறிவிக்கப்படுகிறார்.

செரிமானத்தை பாதிக்கும் அனைத்தும் சர்க்கரை நோய்க்கு வழிவகுக்கும்.

எப்போதெல்லாம் செரிமானம் பாதிப்படைகிறது?

  • பசி ஏற்படும்போது உண்ணாமல் இருப்பது.
  • பசி அளவை விட அதிகமாக உண்ணுவது. அடிக்கடி நொருக்கு தீணிகள் உண்பது.
  • இரவு தாமதமாக உண்பது.
  • மன அழுத்தம், கவலை, பயம்-ஆகிய மனநிலையும் செரிமானத்தை பாதிக்கும்.
  • உடல் உழைப்பின்மை.
  • இரவு தூக்கம் தவிர்ப்பது.
  • வேதிப் பொருட்கள் அதிகமுள்ள உணவுகளை உண்பது.
  • மது, புகையிலைப் பழக்கம்.
  • நீண்ட நாட்கள் ரசாயன மருந்துகள் எடுப்பது.

இப்படி செரிமானத்தைப் பாதிக்கும் ஒவ்வொன்றுமே தரமுள்ள சர்க்கரை உருவாக்கத்தை பாதிக்கும். மேற்சொன்ன பெரும்பாலானவை தவிர்க்க முடியாமல் ஏற்படுவது தான். ஆனால் அவைகள் தொடராமல் பார்த்துக்கொள்வது அவசியம்.

உதாரணத்திற்கு பசி ஏற்படும்போது உண்ணாமலிருப்பது என்பது எப்போதாவது தவிர்க்க முடியாத காரணங்களுக்காக இருக்கலாம். அது உடலில் பெரும் பாதிப்பை ஏற்படுத்துவதில்லை. ஆனால் அதுவே தொடர்வது நோயுண்டாக்கும். இது பசியற்ற நிலையில் தொடர்ந்து உண்பதற்கும் அளவிற்கு அதிகம் உண்பதற்கும் பொருந்தும். வேலை காரணமாக பசி ஏற்படும் நேரங்களை தொடர்ந்து புறக்கணித்து பசியற்ற நிலையிலேயே சாப்பிட்டு வருவது முறையற்ற செரிமானத்திற்கு வழிவகுக்கும்.

ஒருவர் அடிக்கடி மன அழுத்தம், பயம் போன்ற இயல்பிற்கு மாறான மன நிலையில் இருக்கும் சூழலில் இருப்பாரானால் பசியின் தன்மையில் மாற்றம் ஏற்பட்டு செரிமானம் பாதிப்படைகிறது. இதுபோன்ற அசாதாரண சூழலில் உடலைப் பாதுகாக்க, மேற்கண்ட அட்ரினலின் சுரப்பு, அடுத்ததாக கல்லீரலிலும் தசை நார்களிலும் சேமித்து வைக்கப்பட்டுள்ள வீரியம் மிகுந்த குளுகோஸ் என உடலிற்கு கிடைக்கக் கூடிய இயற்கையான ஒரு அமைப்பு உடலில் உள்ளது. 

ஆனால் இந்த மாதிரியான அசாதாரண சூழல் அடிக்கடி ஏற்படும் நிலையில் இருக்கும்போது சேமித்து வைக்கப்பட்டுள்ள வீரியமிகுந்த குளுகோசானது தீர்ந்து உடல் இயங்க முடியாத நிலை உருவாகும்.

சர்க்கரை கட்டுப்பாடும் குணமாக்குதலும்

சர்க்கரை நோயை கட்டுக்குள் வைப்பதென்பது நாம் நிர்ணயித்து வைத்துள்ள சராசரி அளவீடுகளுக்குள்ளாக ரத்தத்தில் சர்க்கரை அளவை வைத்திருப்பது. அந்த அளவை விட கூடினாலோ குறைந்தாலோ அதற்கேற்றார்போல ஊசி மருந்துகள் பரிந்துரைக்கப்பட்டு, மீண்டும் அந்த அளவிற்குள்ளாக வைத்திருப்பது நடக்கிறது. ஊசி, மருந்து மாத்திரைகளை நிறுத்தும்போது மீண்டும் சர்க்கரையின் அளவு கூடவோ குறையவோ செய்கிறது. அந்த குறிப்பிட்ட அளவிற்குள்ளாக சர்க்கரையின் அளவை ஊசி, மாத்திரகள் மூலமாக கட்டுக்குள் வைத்திருந்தாலும் கூட உடல் தொந்தரவுகள் குறைவதில்லை. உடல் தொந்தரவுகளை மூளை உணர முடியாமலிருக்க கூட்டு ஊசி மருந்துகள் கொடுக்கப்படுகிறது. உண்மையில் நோய் குணமாக்கப்படுவதில்லை. உடலிற்குள்ளே அழுத்தி வைக்கப்படுகிறது. அல்லது உணர முடியாமல் இருக்க வலி நீக்கி மருந்துகள் கொடுக்கப்படுகிறது.

மனித உடலின் இயக்கம் என்பது ஒவ்வொரு நொடியும் மாற்றத்திற்கு உட்பட்டது. எந்நேரமும் மனிதர்களின் கண்டுபிடிப்புகள் மூலம் நிர்ணயித்துள்ள அளவீடுகளுக்காகவே சர்க்கரை அளவோ, ரத்த அழுத்தமோ, இன்னும் பிற உடல் சத்துக்களோ இருக்க வேண்டியதில்லை. ஒருவர் இயல்பாக அமர்ந்திருக்கும்போது அவரின் ரத்த அழுத்தமும், ஓடும்போது ரத்த அழுத்தமும், ஒரு மாடிப்படியில் ஏறும்போதான ரத்த அழுத்தமும், அதிர்ச்சியான செய்தியைக் கேட்கும்போது இருக்கும் ரத்த அழுத்தமும் என வெவ்வேறானதாக இருக்கும். இதுவே சர்க்கரை அளவிற்கும் பொருந்தும். உணவிற்கு முன்பாக ஒரு அளவு, உணவிற்கு பின்பாக ஒரு அளவு, பசித்து உண்ணும்போது ஒரு அளவு, பசிக்காமல் உண்ணும்போது ஒரு அளவு, உணவின் தன்மையைப் பொருத்து என வெவ்வேறு காரணிகளைப் பொறுத்து சர்க்கரையின் அளவு மாறுபடும்.

உணவு முறை, வாழ்வியல் முறையில் செய்யும் தவறுகளை அல்லது அதற்கான சூழலை சரி செய்வதன் மூலம் சர்க்கரை நோய் வராமல் தடுக்கவும் நோயிலிருந்து மீளவும் முடியும்.

செயற்கையாக சர்க்கரை நோய் உருவாகும் முறை

உணவு, வாழ்வியல் முறையில் ஏற்படும் சர்க்கரை நோயினைத் தவிர நீண்ட நாட்கள் எடுக்கும் ரசாயன மருந்துகளாலும், பக்க விளைவுகள் காரணமாக சர்க்கரை நோய் உண்டாகிறது. ஏனெனில் பெரும்பாலான ரசாயன மருந்துகள் செரிமானத்தை பாதிக்கிறது.

இதயவியல் மருத்துவர், பேராசிரியர், பல மருத்துவ நூல்கள், கட்டுரைகள் எழுதியுள்ள மணிபால் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணை வேந்தரும், பத்மபூசன் விருது பெற்றவருமான மருத்துவர் B.M.ஹெக்டே இவ்வாறு கூறுகிறார்.

”கொழுப்பை குறைப்பதற்காக STATIN மருந்து எடுப்பவர்களில் 40% பேர் ஒரு வருடத்தில் சர்க்கரை நோயாளிகளாக மாறுகின்றனர். மேலும் மன அழுத்தத்திற்காக கொடுக்கப்படும் மருந்துகளினாலும் சர்க்கரை நோய் உண்டாகிறது” என்கிறார். மேலும் அவர் சர்க்கரை நோய் பற்றி கூறும்போது அனைத்து மக்களையும் பரிசோதிப்பதும், மருந்துகளை திணிப்பதும் தீர்வாகாது. பல மருந்துகள் நீண்ட காலம் பயன்படுத்தும்போது பயனற்றுப் போவதுடன் அபாயகரமான் விளைவுகளை உண்டாக்கி விடுகின்றன. அமெரிகர்களை கொல்லும் நான்காவது பெரிய காரணி மருந்துகளே என்கிறார்.

இந்தியாவில் இப்போது எல்லோருக்கும் சர்க்கரை நோய், ரத்த அழுத்த நோய் வர வாய்ப்புள்ளதாக டாக்டர்கள் அச்சுறுத்துகின்றனர். உங்கள் அப்பா, அம்மா  யாருக்காவது சர்க்கரை நோய் உள்ளதா என முதலில் கேட்கின்றனர். இதன் மூலமாக சிகிச்சைக்கு சென்றவருக்கு பயத்தை ஏற்படுத்துகின்றனர். சர்க்கரை நோய் தடுப்பு என்ற பெயரில் பரிசோதனைகள் மூலம் மருத்துவ வர்த்தகக்  கொள்ளை நடைபெற்று வருவதாகவும் கூறுகிறார். பிறர் மீது அன்பு செலுத்துவது, மிதமான அளவு உணவு, எளிய உடற்பயிற்சிகள் (Diet and Exersice) என சர்க்கரை நோயை விரட்ட ஆலோசனை கூறுகிறார்.

அளவீடுகளை கட்டுக்குள் வைப்பதற்கு முயற்சி செய்வதை விட்டு, உடல் தொந்தரவுகளுக்கான மூல காரணத்தை மரபுவழி மருத்துவங்களின் துணையோடு அறிந்து உணவு முறையையும் வாழ்வியல் முறையையும் சரியாக்கும்போது நோய்களிலிருந்து மீள முடியும்

பசிக்கு உணவு, உடற்பயிற்சி அல்லது உடலுழைப்பு மற்றும் மன அழுத்தம் இல்லாத வாழ்க்கை முறை அவசியம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *