உலகத்திற்கு இன்று தலைப்புச் செய்தியை அளிக்கின்ற ஊடகங்களின் அலுவலகங்களில் என்னென்ன இருக்கின்றன, எப்படி இருக்கின்றன என்பதை நீங்கள் பார்த்திருக்கிறீர்களா?
சர்வதேச அளவில் முக்கியமான இதழியல் ஊடகங்களாகத் திகழும் ஊடகங்களின் அலுவலகங்களுக்கு சென்று, அங்கு செய்தி உற்பத்தியாகக் கூடிய இடத்தினை புகைப்படவியலாளர் நோயல் பெளலர் படம் பிடித்துள்ளார். 2012-ம் ஆண்டு துவங்கி 8 ஆண்டுகளில் ஐரோப்பா, அமெரிக்கா மற்றும் ஆசியாவில் உள்ள முக்கிய ஊடகங்களின் செய்தி அறைகளை புகைப்படமெடுத்து முடித்திருக்கிறார். தி கார்டியன் இணையதளம் இந்த புகைப்படங்களை வெளியிட்டுள்ளது.