கொரோனா மரணங்கள்

அதிர்ச்சியான ஆய்வு முடிவு – 61% இந்தியர்களின் வட்டத்தில் கொரோனாவால் இறந்த ஒருவராவது இருக்கிறார்!

இந்தியா இன்றுவரை மொத்தம் 1,40,573 கோவிட்-19 இறப்புகளைப் பதிவு செய்துள்ளது. அதே நேரத்தில் ஒரு புதிய ஆய்வு ஒன்று அதிர்ச்சிகரமான தகவலை தெரிவித்துள்ளது.

இந்த ஆய்வின்படி 61% இந்தியர்களுக்கு அவர்களது வட்டத்தில் கொரோனா தொற்றில் இறந்தவர் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்டவர்களைப் பற்றி அறிந்திருக்கிறார்கள் என்று கண்டறியப்பட்டுள்ளது. 

லோக்கல் சர்க்கிள்ஸ் நடத்திய ஆய்வு

இந்தியாவின் 208 மாவட்டங்களில் சமூகஊடக தளமான லோக்கல் சர்க்கிள்ஸ் இந்த ஆய்வினை நடத்தியுள்ளது. 

இந்த ஆய்வில் 69% ஆண்களும், 31% பெண்களும் பங்கெடுத்துள்ளனர். 51% பேர் பெரும் நகரங்களைச் சேர்ந்தவர்கள். 24 சதவீதம் பேர் பெரும் சிறு நகரங்களைச் சேர்ந்தவர்கள். 25% பேர் கிராமங்களைச் சேர்ந்தவர்கள் ஆவர்.

அதன் ஆய்வில் 16,000 பேரிடம் எடுக்கப்பட்ட ஆய்வில், 44 சதவீதம் பேர் கொரோனா வைரஸ் காரணமாக இறந்திருக்கக்கூடிய ஒன்று அல்லது அதற்கு மேற்பட்டவர்களைப் பற்றி அறிந்திருப்பதாகத் தெரிவித்துள்ளனர். ஆனால் அது கொரோனா மரணமா என்று உறுதிபடுத்தப்படவில்லை என்று தெரிவித்துள்ளனர்.

சிறு நகரப் பகுதிகள்

மேலும் இந்தியாவின் சிறிய நகரங்களில் மக்கள் பெருந்தோற்று கால நிலையில் தான் இருக்கிறார்கள் என்று நம்புவதில்லை என்றும், முகக்கவசம், தனிநபர் இடைவெளி எதுவுமின்றி இருக்கிறார்கள் என்றும் அந்த ஆய்வு தெரிவிக்கிறது. மேலும் கொரோனா அறிகுறிகள் இருந்தும் பலர் தங்களை சோதனைக்கு உட்படுத்திக் கொள்ளவில்லை என்றும் தெரியவருகிறது.

இந்த ஆய்வில் பங்கெடுத்தவர்கள் கொரோனா மரணம் குறித்து கேள்விப்பட்ட சில நாட்கள் எச்சரிக்கையாக இருப்பதாகவும், அதன்பின் இயல்பாக வாழத் துவங்கியதாகவும் கூறினார்கள்.

அதிர்ச்சி தரும் முடிவுகள்

மேலும் கொரோனா அறிகுறிகளைக் கொண்ட நோயாளிகள் சோதனை செய்யும்முன்னே இறந்துவிட்டாலோ அல்லது சோதனை முடிவு வருவதற்கு முன்னரே இறந்துவிட்டாலோ, அவர்கள் இறப்பு கொரோனா மரணத்தில் சேர்க்கப்படவில்லை என்பதும் இந்த ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் பத்தில் 9 இந்தியர்கள் தங்கள் வட்டத்தில் ஒருவராவது கொரோனா தொற்றுக்கு உள்ளானதை அறிந்துள்ளனர். அதேவேளையில் 60 சதவீதம் பேர்  5 க்கும் மேற்பட்ட கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களை தெரிந்துள்ளனர் என்றும் அந்த ஆய்வு தெரிவிக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *