india - uk flights

மாற்றமடைந்த கொரோனா வைரஸ்; இங்கிலாந்திலிருந்து இந்தியாவிற்கு வரும் விமானங்கள் நிறுத்தம்

இங்கிலாந்தில் இருந்து இந்தியாவிற்கு வரும் விமானங்களை வரும் 31-ம் தேதி வரை இந்திய அரசு தற்காலிகமாக நிறுத்தியுள்ளது. 

நோய் தடுப்பிற்கான ஐரோப்பிய மையம் (The European Centre for Disease Control) ஞாயிற்றுக் கிழமை தனது அச்சுறுத்தல் மதிப்பீட்டு அறிக்கையில் (threat assessment report ) கொரானா வைரஸின் புதிய மாறுபாடு 70% வரை அதிகமான தொற்றை ஏற்படுத்துவதாக இருக்கும் என்று நேற்று அறிவித்தது.

இந்த புதிய திரிபு வைரஸ் இங்கிலாந்தில் அதிக வீரியத்துடன் தொற்றை ஏற்படுத்தி வருகிறது. எனவே இங்கிலாந்துடனான போக்குவரத்தை பல நாடுகள் தற்காலிகமாக தடை செய்துள்ளது. 

டிசம்பர் 22-31 வரையிலான காலப்பகுதியில் இங்கிலாந்து மற்றும் புறப்படும் விமானங்களை நிறுத்தி வைக்குமாறு கோரி இந்தியாவின் சிவில் விமானப் போக்குவரத்துச் செயலாளர் பிரதீப் சிங் கரோலாவுக்கு சுகாதாரச் செயலாளர் ராஜேஷ் பூஷண் கடிதம் எழுதியிருந்தார். பொது சுகாதாரத்திற்கான இயக்குனர் ஜெனரல் (director-general for health services) டாக்டர் சுனில் குமார் தலைமையிலான கூட்டு கண்காணிப்புக் குழுவின் பரிந்துரைக்குப் பிறகு இன்றில் இருந்து டிசம்பர் 31-ம் தேதிவரை இந்தியாவில் இருந்து இங்கிலாந்திற்குச் செல்லும் அனைத்து விமானங்களும் மற்றும் இங்கிலாந்தில் இருந்து இந்தியாவிற்கு வரும் விமானங்களையும் தற்காலிகமாக நிறுத்திவைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. 

இருப்பினும் சர்வதேச சரக்கு விமானங்கள், ஏர் சார்ட்டர்ஸ் மற்றும் air bubble pacts என்ற அழைக்கப்படும் கொரோனா கால சிறப்பு ஒப்பந்தத்தின் கீழ இயக்கப்படும் விமானங்கள் தொடர்ந்து செயல்பட இந்திய விமான ஒழுங்குமுறை ஆணையம் அறிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *