நிவார் புயல் அவசரத் தொடர்புகள்

நிவார் புயல்: அவசரத் தொடர்புகள் மற்றும் நிவாரண முகாம் விவரங்கள்! இணைந்து எதிர்கொள்வோம்!

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மக்களுக்கு மெட்ராஸ் ரேடிக்கல்ஸ் குழுமத்தின் வணக்கம்,

நிவார் புயல் கடலில் மையம் கொண்டு நமது கரையினை நெருங்கிக் கொண்டிருக்கிறது. அதிதீவிர புயலாக நிவார் உருவெடுத்திருப்பதாக வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்திருக்கிறார்கள். சென்னை முதல் வேதாரண்யம் வரை உள்ள கடலோர மாவட்டங்கள் அனைத்திற்கும் அபாய எச்சரிக்கை விடப்பட்டிருக்கிறது. நாளை முழுதும் மிக கனமழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது. 

தற்போதைய நிலவரப்படி புதுச்சேரிக்கு தென்கிழக்கே 380 கி.மீ தொலைவில் இருக்கிறது. இது வடமேற்கு திசையில் நகர்ந்து வந்து கொண்டிருக்கிறது. 

7 மாவட்டங்களில் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டு, தமிழ்நாடு முழுமைக்கும் பொது விடுமுறை அளிக்கப்பட்டிருக்கிறது. சென்னையிலிருந்து தென்மாவட்டங்களுக்கு செல்லும் அனைத்து ரயில்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன.

ஒவ்வொரு முறையும் இயற்கை சீற்றங்கள் நம் மக்களை தாக்கிய போதும், நாம் ஒன்றாகக் கைகோர்த்து எதிர்கொண்டிருக்கிறோம். 2015 பெருவெள்ளம், வர்தா புயல், கஜா புயல் என இயற்கை சீற்றங்களை நம் மன வலிமையாலும், உதவிகளைப் பகிர்ந்து நம் ஒற்றுமையாலும் வென்றிருக்கிறோம். இப்போது மீண்டும் அப்படி ஒரு தருணம் நம் முன் வந்திருக்கிறது. 

இந்த நேரத்தில் நம்மிடம் உள்ள வேறுபாடுகளையெல்லாம் தூர எறிந்துவிட்டு நாம் மனிதநேயம் ஒன்றே முதலாய் இணைந்து நிற்கும் தேவை இருக்கிறது. பாதிக்கப்பட்ட மக்கள் தங்குவதற்காக மசூதிகள் அனைத்தையும் திறந்து வைப்பதாக தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் அமைப்பு அறிவித்திருக்கிறது. இத்தகைய இயற்கைப் பேரிடர்கள் நம்மை சாதி, மதம், கட்சி வேறுபாடுகள் கடந்து இணைக்கின்றன. 

அனைவரும் பாதுகாப்பாக இருங்கள். உங்கள் அருகில் இருப்போரையும் பாதுகாப்பாக இருப்பதற்கான வழியை ஏற்படுத்துங்கள். பாதுகாப்பற்ற சூழலில் யாரேனும் இருந்தால் முடிந்தவரை நண்பர்களுடன் இணைந்து அவர்களுக்கான உதவியை மேற்கொள்ளுங்கள். அரசாங்கத்தின் நிவாரண மையங்கள் குறித்த தகவல்களை இங்கே தொகுத்து அளித்திருக்கிறோம். அதை அனைவருக்கும் தெரியப்படுத்துங்கள்.

கவனத்தில் கொள்ள வேண்டிய விடயங்கள்

  • புயலுக்கு முன்னே உள்ள அமைதியைப் பார்த்து புயல் வராது என்ற அலட்சியம் வேண்டாம். 
  • உங்கள் தொலைபேசியில் முழுக்க சார்ஜ் செய்து வைத்திருங்கள்.
  •  வீடுகளில் பாத்திரங்களில் முடிந்தவரை தண்ணீரை நிரப்பி வையுங்கள்.
  •  காற்று பலமாக வீசும் பட்சத்தில் வீட்டிலுள்ள மின்சாதனங்களை அணைத்து வையுங்கள்.
  • புயல் வீசும்போது வீட்டை விட்டு எக்காரணத்தைக் கொண்டும் வெளியே வராதீர்கள்.
  • மழைக்கு ஒதுங்குவதாக நினைத்துக் கொண்டு மரத்தடியில் நிற்க வேண்டாம்.
  • உங்கள் வாகனங்களை மரத்தடியில் நிறுத்துவதை தவிர்க்கவும்.
  • உங்கள் வீட்டின் அருகே மின்சார டிரான்ஸ்பாமர்களில் விபத்து ஏற்படுவதைப் போன்ற அறிகுறிகள் இருந்தால் உடனே கீழே கொடுக்கப்பட்ட இணைப்பிலிருந்து மின்சார அலுவலகத்திற்கு தகவல் கொடுங்கள்.
  • தண்ணீர் புகும் தாழ்வான வீடுகளில் உள்ளோருக்கு உங்கள் வீட்டில் தங்க இடம் கொடுத்து உதவுங்கள்.
  • முடிந்தவரை உறுதி செய்யப்படாத எந்த தகவலையும் சமூக வலைதளங்களில் பரப்பாதீர்கள். 

அவசரத் தொடர்புகள் மற்றும் நிவாரண மையங்களின் விவரங்கள்

சென்னை மாநகராட்சியிலிருந்து அவசரத் தொடர்புகளுக்கான தொலைபேசி எண்கள் வெளியிடப்பட்டுள்ளது. 

பகுதி வாரியாக சென்னையில் அமைக்கப்பட்டிருக்கும் நிவாரண மையங்கள் மற்றும் சமையற் கூடங்களின் விவரங்களை மாநகராட்சி அறிவித்துள்ளது. இந்த விவரங்களை அனைத்து பகுதியில் உள்ள மக்களுக்கும் பகிரச் செய்து உதவலாம்.

மின்சாரம் தொடர்பான அவசரத் தொடர்புக்கு தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் தொடர்பு எண்களை வெளியிட்டுள்ளது.

சென்னையில் உள்ள ஏரிகளில் நீர் மட்டம் எவ்வளவு எட்டியிருக்கிறது என்பது குறித்த விவரங்கள்:

பாண்டிச்சேரி, காரைக்கால் மக்களுக்கான அவசர உதவி எண்:

கடலூர் மாவட்டத்திற்கான தொடர்பு எண்கள்:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *