ஹோமியோபதி மருத்துவம் கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்த உதவுமா? – மருத்துவர் அனுஜா எம்.நெல்சன் நேர்காணல்.

கொரோனா பெருந்தொற்றை ஹோமியோபதி மருத்துவராக உங்கள் பார்வை மற்றும் கொரோனா சிகிச்சையில் உங்கள் அனுபவங்களை பகிருங்கள்.

எல்லோருக்கும் ஒரே மாதிரியான அறிகுறிகள் மற்றும் பாதிப்புகள் இருப்பதில்லை. நான்கு நிலையாக பிரிக்கப்படுகிறது நோய் ஆரம்ப  நிலையில் பெரிய பாதிப்புகள் இருப்பதில்லை தலைவலி, உடல் சோர்வு, படுக்க வேண்டும் போல உணர்வு, நாக்கு வறண்டு போவது இவைகள் தொற்று ஏற்படப்போகிறது என்பதற்கான முதல் அறிகுறிகள். கசாயம் மிளகு சேர்க்கப்பட்ட உணவுப்  பொருட்கள், நல்ல ஆரோக்கியமான உணவு வகைகள் எடுத்துக்கொள்வது, ஆவி பிடிப்பது போன்றவற்றைக் கடைபிடிக்கும்போது  எதிர்ப்பாற்றல் உள்ளவர்கள் பெரும்பாலானோர்  நோய் தொடக்க நிலையிலேயே பாதிப்பிலிருந்து மீண்டு விடுகின்றனர்.                         

மேலும் இணை நோய்கள் உள்ளவர்கள் உதாரணமாக ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் உள்ளவர்கள் அதை கட்டுப்பாட்டிற்குள் வைத்து உடலை கவனிக்கிறவர்கள் பாதிக்கப்பட்டாலும் எளிதில் மீண்டு விடுகின்றனர். தங்களுக்கு உள்ள இணை நோய்களை சரி செய்து கொள்ளாமல் அல்டசியமாக இருப்பவர்கள் பாதிக்கப்படுகின்றனர். என்னிடம்  சிகிச்சை எடுப்பவர்களுக்கு சில பாரம்பரிய உணவு பழக்கவழக்கங்களை பின்பற்ற அறிவுறுத்துகிறேன். உதாரணத்திற்கு ரத்த அழுத்த குறைபாட்டால் பாதிக்கப்பட்ட நோயாளர்களை சோறு வடித்த நீரில் உப்பு போட்டு குடிக்க சொல்வேன். அது ரத்த அழுத்தத்தை சீராக வைத்துக்கொள்வதோடு உடலுக்கு தேவையான ஆற்றலையும் வழங்குகிறது.

சளி காய்ச்சலால் சிகிக்சைக்காக வருபவர்கள் பெரும்பாலானோர் கூறும்போது நேற்று தான் ப்ரிட்ஜ் தண்ணீர் குடித்தேன், நேற்று தான் ஜூஸ் சாப்பிட்டேன், ஐஸ் கிரீம் சாப்பிட்டேன் என்கின்றனர். கொரோனா  தொற்று இருக்கும் காலம் என்பதால் சளி என்பதை சொல்லக் கூட பயப்படுகிறார்கள். ஆனால் சிறு அறிகுறிகளைக் கூட புறக்கணிக்க முடிவதில்லை. பாதிக்கப்பட்டோரின் அறிகுறிகளை  கேட்டு எப்போதிலிருந்து இருக்கிறது, எப்படி தொடங்கியது என்ன மாதிரியான சிரமங்கள் இருக்கிறது, எப்போதெல்லாம் தொந்தரவுகள் கூடுகிறது, குறைகிறது என்பதை ஹோமியோபதி மருத்துவ முறையின் நோயறிதல் முறை அடிப்படையில் கேட்டறிந்து சிகிச்சை அளித்து வருகிறேன்.

அனைவருக்குமே அறிகுறிகள் மற்றும் தொந்தரவுகள் ஒரே மாதிரியாக இருப்பதில்லை. உதாரணத்திற்கு சிலருக்கு தொண்டையில் வலி இருக்கலாம், சிலருக்கு கரகரப்பு, சிலருக்கு தண்ணீர் குடித்தாலே சரியாகிவிடும். இதுபோல தொந்தரவுகளை பற்றி முழுமையாக கேட்டறிந்து அதற்கு தகுந்தாற்போல் ஹோமியோபதியில் உள்ள மருந்துகள் பரிந்துரைக்கப்படுகிறது.

இந்த கொரோனா பெருந்தொற்று  காலத்தில் என்ன மாதிரியான ஹோமியோபதி மருந்துகள் கொடுக்கப்படுகிறது?

பொதுவாக தற்போதைய சூழலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஏற்பட்டுள்ள அறிகுறிகளைக் கொண்டு AYUSH  துறை ஆர்சனிக் ஆல்பம் 30 எனும் ஹோமியோபதி மருந்தை பரிந்துரை செய்திருக்கிறது. இந்த மருந்து சாதாரண சளி முதல் இதயம், கல்லீரல் போன்ற  பெரிய வியாதிகளுக்கும்  குணமளிக்க கூடியதாக உள்ளது. என்ன அளவு,காலம் என்பதை ஹோமியோபதி மருத்துவரின் ஆலோசனைப்படி எடுத்துக்கொள்ள வேண்டும். சிலருக்கு இந்த மருந்து மட்டுமே போதாமல் போகலாம். அவர்களுக்கு இன்னும் பிற ஹோமியோ மருந்துகளையும் சேர்த்து கொடுக்க வேண்டியிருக்கும். 80 சதவீத நோயாளிகள் இந்த மருந்துகளிலேயே குணமடைந்து விடுகின்றனர். தொடக்க நிலையில் குணமாகாமல் தொந்தரவுகள் ஒரு வாரத்திற்கும் மேலாக நீடிக்கும்போது அந்த நேரத்தில் பாதிக்கப்பட்டோரின் தொந்தரவுகள், பாதிப்பின் தன்மை உள்ளிட்டவற்றை முழுமையாக  கேட்டறிந்து மனநிலையையும் அறிந்து  ஹோமியோ மருந்துகள் மூலம் சிகிக்சை அளிக்கப்படுகிறது.

தீவிர நிலையில் பாதிக்கப்பட்டோருக்கு ஹோமியோபதியில் சிகிக்சை அளிக்க முடியுமா அதற்கான மருந்துகள் உள்ளனவா? உதாரணத்திற்கு அலோபதியில் ஸ்டீராய்டு மற்றும் ஆன்டிபயாடிக் மருந்துகள் பயன்படுத்தப்படுகிறது. அந்த நிலையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிக்சை அளிக்கும் மருந்துகள் ஹோமியோபதியில் உள்ளனவா?

ஹோமியோபதியில் இந்த குறிப்பிட்ட நோய்க்கு இந்த குறிப்பிட்ட மருந்து என்பது இல்லை. நோயாளரின் தொந்தரவுகளை முழுமையாக கேட்டறிந்து அவரின் பாதிப்பிற்கு தகுந்தாற்போல் மருந்து கொடுக்கப்படுகிறது. வைரஸ் கிருமி தொற்றிற்கு எதிரான மருந்துகள், கிருமிகளின் பெருக்கத்தை மட்டுப்படுத்தக்கூடிய மருந்துகள் நிறையவே உள்ளன. போலியோ பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய வைரஸ் கிருமிகளுக்கு எதிரான மருந்துகள் கூட ஹோமியோபதியில் உள்ளது. எயிட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கூட எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் மருந்துகள் உள்ளன. ஹோமியோ மருந்துகள் பெரும்பாலும் தாவரங்களிலிருந்து எடுக்கப்படுவது. உதாரணத்திற்கு ஆடாதொடா, துளசி, குப்பைமேனி போன்ற மருத்துவ குணம் நிறைந்த செடிகளிலிருந்தும் கூட மருந்துகள் தயாரிக்கப்படுகிறது. 

நிச்சயமாக தீவிர நிலையில் பாதிக்கப்பட்டோருக்கு ஹோமியோபதியில் சிகிக்சை அளிக்க முடியும். அதற்கான மருந்துகள் நிறையவே உள்ளன. ஆனால் தீவிர மூச்சுத்திணறலால் பாதிக்கப்பட்டோருக்கு ஆக்சிஜன் சிலிண்டர் தேவைப்படும் என்பதால் அந்த கட்டமைப்பு வசதிகள் உள்ள மருத்துவமனையில் ஆக்சிஜன் உதவியோடு ஹோமியோ மருந்துகள் கொடுத்து குணப்படுத்த முடியும். 

ஏற்கனவே அலோபதி மருந்துகள் எடுப்பவர்கள் ஹோமியோ மருந்துகளும் சேர்த்து எடுக்கலாமா? 

அலோபதி மருந்துகள் எடுப்பவர்களும் கூட ஹோமியோபதி மருந்துகள் எடுப்பதால் பலனளிக்கிறது. சேர்த்து எடுப்பதால் எந்த பாதிப்புகளும் ஏற்படுவதில்லை. சர்க்கரை நோய்களுக்கு இன்சுலின் எடுப்பவர்கள் கூட ஹோமியோபதி மருந்து எடுத்து படிப்படியாக எதிர்ப்பாற்றல் பலமடைந்து இன்சுலின் நிறுத்தக்கூடிய அளவிற்கு சிகிச்சையில் ஹோமியோ மருந்துகள் மூலம் பயனடைகின்றனர்.

கொரோனா போன்ற பெருந்தொற்றுகளிலிருந்து பாதுகாத்துக்கொள்ள உங்கள் ஆலோசனைகள்..

மரபை(Tradition) நிச்சயம் நாம் தவறவிடக்கூடாது. ஒரு முப்பது வருடங்களுக்கு முன்னரான உணவு முறைக்கு நாம் திரும்ப வேண்டியுள்ளது. 

நம் முன்னோர்கள் புறக்கணித்த உணவு பழக்கங்களை நாமும் புறக்கணித்து அவர்கள் பின்பற்றியவற்றை நாமும் பின்பற்ற வேண்டும்.

பீட்சா, பர்கர், ரெடிமேடு உணவுகள், பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்ட உணவுகள், செயற்கை நிறமிகள் கலக்கப்பட்ட உணவுகள், preservative கலக்கப்பட்ட உணவுகள் போன்றவற்றை நிச்சயம் தவிர்க்க வேண்டும்.

வெண்டைக்காய், சோற்றுக் கற்றாழை, சேப்பங்கிழங்கு உள்ளிட்ட எண்ணெய் போன்ற பொருட்கள் மிகவும் முக்கியமானவை. ஹார்மோன்களில் உள்ளவைகளும் இது போன்றை தன்மையில் இருக்கிறது. முருங்கைக் கீரை உணவில் எடுத்துக்கொள்ள வேண்டும்.

சிறு சிறு தொந்தரவுகளான தலைவலி போன்றவற்றிற்கெல்லாம் பெயின் கில்லர் பயன்படுத்துவது தேவையற்றது. தூக்கம் கெட்டுபோனால் தலைவலி வருவது, வெயிலில் போனால், தாமதமாக சாப்பிடுவதால் தலைவலி ஏற்படுவதெற்கெல்லாம் மருந்து மாத்திரைகள் எடுத்தால் அது நிச்சயமாக பக்க விளைவுகளை உண்டாக்காமல் இருக்காது. இதன் மூலம்  நாமே நம் எதிர்ப்பாற்றலை பலவீனப்படுத்துகிறோம்.

இந்த பெருந்தொற்று காலத்திற்குப் பிறகாவது பழங்கால உணவுப் பழக்கவழக்கங்களை பின்பற்றி உடல் ஆரோக்கியத்தை மீட்க வேண்டும். என்னிடம் சிகிசைக்கு வருபவர்களிடம் cardiac தொடர்பான தொந்தரவுகளைத் தடுக்க  கொலஸ்ட்ராலை குறைப்பதற்காக கொள்ளு எடுத்துக்கொள்ள சொல்வதுண்டு. குதிரை சாப்பிடுவதெல்லாம் சாப்பிடச் சொல்கிறீர்கள் என்பார்கள். உணவு முறைகளை சரி செய்வது முலமாகவே பெரும்பாலான நோய்களை குணப்படுத்தி விட முடியும்.தேவைப்பட்டால் மட்டுமே மருந்துகள் கொடுப்பது என்பதெல்லாம்.

மிளகு, கடுக்காய் சாப்பிட்டால் மிடுக்காய் வாழலாம் என்றெல்லாம் நம் மரபில் உள்ளது. ஆனால் அடுத்து வரும் தலைமுறையினருக்கு இது பற்றியெல்லாம் தெரிவதில்லை. என் மாணவர்களிடம் சொல்லிக்கொண்டே இருக்கிறேன். கொஞ்சம் மரபைப் பின்பற்றுங்கள் என்று. மிளகு,வெண்டைக்காய், கொள்ளு போன்றவற்றிலெல்லாம் மருத்துவ குணங்கள் இருக்கிறது. மருந்துகளாக எடுத்துக்கொள்வதற்குப் பதிலாக இவைகளை உணவுகளாக எடுப்பது ஆரோக்கியத்தைக் கொடுக்கும்.

வெள்ளை நிறத்தில் உள்ள உணவு வகைகளை பெரும்பாலும் தவிர்ப்பது நல்லது. உதாரணமாக மைதா, பால், வெள்ளை சர்க்கரை, ரவை. கோவைக்காய் உணவில் சேர்த்துக்கொள்வது நல்லது. கோவைக்காயிலிருந்து கூட ஹோமியோபதி மருந்துகள் எடுக்கப்படுகிறது. இது சர்க்கரை நோய்க்கான மருந்தாக கொடுக்கிறோம். பாகற்காய் உணவில் சேர்த்துக்கொள்ளலாம். சிறுதானிய உணவுகள் சிறந்தது.

கொரோனாவை  போன்ற பாதிப்புகள் தற்போது மட்டுமல்ல இதற்கு முன்னரும் கூட எற்பட்டிருக்கிறது. ஆனால் அப்போதெல்லாம் இவ்வளவு தீவிரமான பாதிப்புகள் இறப்புகள் இல்லை. அதற்கான காரணம்  உணவுமுறை, வாழ்க்கை முறை. மணிக்கணக்கில் உட்கார்ந்தே வேலை செய்வது. உடல் உழைப்பின்மை, நடப்பதே இல்லை, அனைத்திற்கும் வாகன பயன்பாடு. யோகா, பிரணாயாமா செய்வதன் மூலமாக நுரையீரலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள முடியும். ஆனால் இதையெல்லாம் செய்ய ஆலோசனை கூறும்பொது இதெல்லாம் முடியாது. நேரமில்லை ஏதாவது மருந்து கொடுங்கள் என்கின்றனர் சிகிசைக்கு வருபவர்கள். உடல் எடை குறைப்பிற்கு, சர்க்கரை நோய்களுக்கு நான் பெரும்பாலும் பரிந்துரைப்பது நடைபயிற்சி மேற்கொள்வது மற்றும் உணவு வகைகள். ஆனாலும் மருந்துகளைத்தான்  எதிர்பார்க்கின்றனர். எதெற்கெடுத்தாலும் மருந்துகள் சாப்பிடுவது தவறு.

ஒவ்வொரு தனிநபரின் ஆரோக்கியம் தான் அனைவரது ஆரோக்கியமாகவும் இருக்கிறது. ஒவ்வொருவரும் ஏதிர்பாற்றலை பலப்படுத்திக்கொள்ளும் உணவு முறைகள் மற்றும் வாழ்வியல் முறைகளை பின்பற்ற வேண்டும். அறிகுறிகள் ஏற்பட்டால் ஹோமியோ  மருத்துவரின் ஆலோசனை பெற்று சிகிச்சை எடுப்பது நல்லது. ஆரம்ப நிலையில் குணப்படுத்திக்கொள்வது சிறந்தது. தீவிர பாதிப்பின் போது நவீன தொழில்நுட்பங்கள் கூட உயிர் காப்பதில் தோல்வி அடைகிறது.

வரும் முன் காக்கும் ஹோமியோ மருந்துகள் எப்படி எடுத்துக்கொள்வது ?

ஆர்சனிக் ஆல்பம் 30, கடந்த ஆண்டே இந்த மருந்தை ஆயுஷ் பரிதுரைத்திருந்தது. இந்த பெருந்தொற்று காலத்தில் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதில் இந்த மருந்து பெரும்பங்கு வகிக்கிறது. 

3 உருண்டைகள் மூன்று வேலைகள் ஒரு வாரத்திற்கு.

கடந்த வருடம் காவலர்கள்,வங்கி ஊழியர்கள் உள்ளிட்ட முன்களப்பணியாளர்களுக்கு கொடுக்கப்பட்டது. நல்ல பலன் அளித்தது.

கொரோனாவிற்கு பிறகு ஏற்படக்கூடிய கருப்பு புஞ்சை நோய் தாக்கத்திற்கு கூட நல்ல பலனைக் கொடுக்கிறது. கொரோனா பாதிப்பில் ஏற்படக்கூடிய கிட்டத்தட்ட 90 சதவீத அறிகுறிகளுடன் ஒத்துப்போவதால் இந்த மருந்து நல்ல பலனைக் கொடுக்கிறது.

இணை நோய்கள் உள்ளவர்களுக்கு, அந்த நோய் தாக்கத்திற்கு பிறகும் உணவு முறைகளை வாழ்வியல் முறையை மாற்றிக்கொள்ளாதவர்களுக்கு உடல் உழைப்பு இல்லாமல் இருப்பவர்களுக்கு இது போதுமானதாக் இல்லாமல் போகலாம். அவர்களுக்கு இதர தொந்தரவுகளைக் கேட்டறிந்து இன்னும் பிற ஹோமியோ மருந்துகள் கொடுக்கலாம்.

ஹோமியோபதியில் பெரும்பாலும் நோயறிதல் முறை என்பது நோயாளியிடம் தொந்தரவுகள் குறித்து முழுமையாகக் கேட்டறிந்து தான் சிகிச்சை அளிக்கிறீர்கள். தீவிர நிலையில் பாதிக்கப்பட்ட நோயாளிகள் பேசும் நிலையில் இல்லாதபோது எப்படி சிகிக்சை அளிப்பீர்கள் ?

கை,நாக்கு,முடி,கண்,தொட்டு பார்ப்பது. அந்நேரத்தில் நோயாளியின் எதிர்வினை என்னவாக இருக்கிறது, உடன் இருப்பவரிடம் கேட்டறிவது.இதை தவிர சில அறிகுறிகளை உறுதிப்படுத்திக்கொள்ள ஆய்வுகூட சோதனை அறிக்கைகள் தேவைப்படலாம்.

ஹோமியோபதி மருத்துவ முறையில் மட்டுமே முழுமையாக குணப்படுத்த முடியுமா அல்லது அலோபதி சிகிச்சை துணைகொண்டுதான் முடியுமா?

அனைத்து நோய்களுக்குமான மருந்து ஹோமியோபதியில் இருக்கிறது.ஆக்சிஜன் வசதிகள்,CPR கருவிகள் உள்ளிட்ட தீவிர சிகிசைக்கு தேவைப்படுகிற உபகரணங்கள் இருக்குமானால்  முழுமையாக ஹோமியோபதியில் குணப்படுத்த முடியும்.

 

ஹோமியோபதி மருத்துவர் அனுஜா எம்.நெல்சன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *