கோவாக்சின் தடுப்பூசி பரிசோதனை தரவுகளை அரசு ஏன் வெளியிட மறுக்கிறது ?

கோவிஷீல்ட், கோவாக்சின் தடுப்பூசி பாதுகாப்பானது என்று 49 விஞ்ஞானிகள் மற்றும் மருத்துவர்கள்  அங்கீகரித்துள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் ஒரு அறிக்கையை வெளியிட்டது. தடுப்பூசி குறித்தான பல்வே சர்சைகளை மறுக்கும் விதமாக  பின்வருமாறு அறிக்கை வெளியிட்டப்பட்டது. “உலகெங்கிலும் தடுப்பூசிகளை ஏற்றுமதி செய்வதற்கு தங்கள் வாழ்நாளை அர்ப்பணித்த இந்திய மருத்துவ சமூகத்தின் மீது இது நெருக்கடியை ஏற்படுத்துகிறது. உள்நோக்கமுள்ள பொறுப்பற்ற அறிக்கைகள் நாட்டின் நம்பகமான மதிப்புமிக்க அறிவியல் சாதனைகளை சீறழிக்கும்” என்று 49 விஞ்ஞானிகள் குழு கூறியதையடுத்து, மத்திய சுகாதார அமைச்சகம் தடுப்பூசிக்கான ஒப்புதலை வெளியிட்டது.

13 விஞ்ஞானிகளின்  எச்சரிக்கை அறிக்கை

இதனை தொடர்ந்து இந்தியாவில் தடுப்பூசி இயக்கத்தின் முதல் கட்டமாக ஜனவரி 16ம் தேதி  முன்கள பணியாளர்களுக்கு விநியோகிக்கப்படும் என்று அரசு தெரிவித்தது.  இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும்விதமாக கோவாக்சின் தடுப்பூசியின்  3 ஆம் கட்ட மருத்துவ பரிசோதனை குறித்த தரவுகளை அரசாங்கம் மற்றும் பாரத் பயோடெக் நிறுவணம் உடனடியாக  வெளியிட வேண்டும் என்று 13 விஞ்ஞானிகளை கொண்ட குழு தன்னிச்சையாக அறிக்கை பிறப்பித்துள்ளது.பொதுமக்களுக்கு தடுப்பூசி போடுவதற்கு முன்பு தடுப்பூசி சோதனை குறித்தான வெளிப்படைத் தன்மை தேவை என்று 13 விஞ்ஞானிகள் வலியுறுத்தியுள்ளனர் அவர்களில் ஆறு விஞ்ஞானிகள் இந்திய அறிவியல் அகாடமியின் உறுப்பினர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. “தடுப்பூசியின் செயல்திறன் குறித்து போதுமான தரவுகள் இல்லாமல்  அதை வழங்குவது தடுப்பூசி பெறுபவர்களிடையே தவறான  உணர்வை ஏற்படுத்தும். தடுப்பூசியின் செயல்திறன் குறித்த முழுமையான தரவுகளுக்காக அரசாங்கம் காத்திருக்க வேண்டும்’‘ என்று வலியுறுத்தி உள்ளனர்.

தடுப்பூசி குறித்து மருத்துவ அதிகாரிகளின் முரண்பாடான கருத்துக்கள்

ஒரு நாளைக்கு சராசரியாக 100 பேருக்கு தடுப்பூசிகளை வழங்கும் திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி சனிக்கிழமை காலை 10.30 மணிக்கு காணொலி மூலம் நாடு முழுவதும் தொடங்கவுள்ள இந்த சூழ்நிலையில் 13 பேர் கொண்ட விஞ்ஞானிகள் குழு தனது எச்சரிக்கையை உறுதியாக பதிவு செய்துள்ளது. தேசிய தடுப்பூசி வழிமுறைகளை வழிநடத்தும் ஒரு மூத்த நிபுணர் ஒரு நாளிதழுக்கு அளித்த பேட்டியில் கோவிஷீல்ட் மற்றும் கோவாக்சின் ஆகியவை “சமமானவை” என்று கருதப்பட வேண்டும் என்று கூறியுள்ளார். ஆனால் சுகாதாரத்துறை அதிகாரிகள் இது குறித்து விளக்க மறுத்துவிட்டனர், மேலும் இரண்டு டோஸ் தடுப்பூசிகள் குறித்த தகவல்களை பரிமாறிக்கொள்ள முடியாது என்றும் தெரிவித்துள்ளார். அதேபோல் ”இரண்டு தடுப்பூசிகளை எவ்வாறு விநியோகிப்பது என்பது குறித்த வழிமுறைகளை இன்னும் மாநில அரசுகள் பெறவில்லை” என்று ஒரு பொது சுகாதார நிபுணர்  தெரிவித்துள்ளார். இரண்டு தடுப்பூசிகளில் ஏதோ ஒன்றை தேர்வு செய்யும் வாய்ப்பு தடுப்பூசி பெறுபவர்களுக்கு கொடுக்கப்படாது என்று சுகாதார அதிகாரிகள் கூறியுள்ளனர்.

கோவாக்சின் தடுப்பூசி குறித்து இந்திய மருத்துவ சங்கத்தின் நிலைப்பாடு

இந்த சூழநிலையில்தான் ”எந்த தடுப்பூசி வழங்கினாலும் அதை ஏற்றுக்கொள்ளுமாறு” 3,50,000 உறுப்பினர்களுக்கு இந்திய மருத்துவ சங்கம் வலியுறுத்தியுள்ளது. “இரண்டு தடுப்பூசிகளும் ஒரு நிபுணர் குழுவால் மதிப்பீடு செய்யப்பட்டுள்ளன – பாதுகாப்பு மற்றும் நோயெதிர்ப்பு திறன் உறுதி செய்யப்பட்டுள்ளது” என்று இந்திய மருத்துவ சங்கதின் தேசியத் தலைவர் ஜான்ரோஸ் ஆஸ்டின் ஜெயலால் செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.

தடுப்பூசி பரிசோதனையின் மூன்றாம் கட்ட தரவுகள் வெளிப்படுத்த வேண்டியது அவசியம் என்ன

தடுப்பூசி திட்டத்தைத் தொடங்குவதற்கு முன் வெளிப்படைத்தன்மையின் அவசியத்தை 13 விஞ்ஞானிகளின் அறிக்கை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. கோவாக்சினின் பாதுகாப்பை உறுதிசெய்து, நோயெதிர்ப்பு தரவை உறுதிப்படுத்தும் போது அந்த குழு “பெரியளவில் மக்களுக்கு தடுப்பூசி வழங்குவதற்கு முன்பு சோதனையின் 3ம் கட்ட செயல்திறன் குறித்தான தரவுகள் வெளிப்படுத்த வேண்டியது அவசியம்.” என்கின்றனர்.  மேலும் செயல்திறன்கள் பற்றிய புதிய தரவுகள் இல்லாமல் ஒரு தடுப்பூசியை வழங்குவதென்பது அதை பெறுபவர்களிடையே தவறான பாதுகாப்பு உணர்வுக்கு வழிவகுக்கும் என்கின்றனர்.  “நாங்கள் தடுப்பூசிகள் மீது அவநம்பிக்கை கொண்டவர்கள் அல்ல,ஆனால் பொது பயன்பாட்டிற்காக ஒரு தடுப்பூசியை வெளியிடுவதற்கு முன், அதனை பற்றிய அத்தியாவசிய பாதுகாப்புகளை வெளிப்படையான முறையில் பின்பற்றுவதன் முக்கியத்துவம் மட்டுமே எங்கள் கவலை. ” என்று அக்குழு தெரிவித்தது.

13 விஞ்ஞானிகள் கொண்ட குழுவில் இடம்பெற்றவர்கள் :

இந்திய அறிவியல் அகாடமியின் தலைவர் பார்த்தா மஜூம்தார் மற்றும் பெங்களூரு இந்திய அறிவியல் கழகத்தைச் சேர்ந்த தீபங்கர் சாட்டர்ஜி மற்றும் வி.நாகராஜா, ஹைதராபாத்தின் செல்லுலார் மற்றும் மூலக்கூறு உயிரியல் மையத்தைச் சேர்ந்த ஜோத்ஸ்னா தவான், மற்றும் வித்யானந்த் நஞ்சுண்டியா மற்றும் எச்.ஏ. பெங்களூரு மனித மரபியல் மையத்தைச் சேர்ந்தவர் ரங்கநாத்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *