இரவு 12:45 மணி: அடுத்த 1 முதல் 2 மணி நேரத்திற்குள் புயலின் மையப்பகுதியானது கரையைக் கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இரவு 11:40 மணி: அரியலூர், கடலூர், காஞ்சிபுரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, விழுப்புரம், நாகை, மயிலாடுதுறை உள்ளிட்ட 8 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரம் கன மழை இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இரவு 11:35 மணி: புதுச்சேரிக்கு வடக்கே கரையைக் கடக்கத் துவங்கி இருப்பதால் சென்னையில் குறைவான மழையே இருக்கும் என கணிக்கப்படுகிறது.
இரவு 11:30 மணி: கடலூரில் இரண்டு மணிநேர கால அளவில் 16.3 செ.மீ மழை பதிவாகியுள்ளது.
இரவு 11:20 மணி: தற்போது புதுச்சேரியில் சூறைக் காற்றுடன் கடுமையான மழை பெய்து வருகிறது.
இரவு 11:00 மணி: நிவர் புயல் கரையைக் கடக்கத் துவங்கியது. புதுச்சேரிக்கு 30 கி.மீ வடக்கே கரையைக் கடக்கத் துவங்கியுள்ளது. முழுவதுமாக கரையைக் கடப்பதற்கு 3 முதல் 4 மணி நேரம் வரை ஆகலாம் என தெரிகிறது.
இரவு 10:00 மணி: செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து திறந்து விடப்படும் நீரின் அளவு 9,000 கன அடியாக அதிகரிக்கப்பட்டிருக்கிறது.
இரவு 09:00 மணி: மரக்காணத்திற்கும் செய்யூர் பகுதிக்கும் இடையே நிவர் புயல் கரையைக் கடக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக செங்கல்பட்டு, திருவண்ணாமலை, காஞ்சிபுரம், வேலூர் உள்ளிட்ட மாவட்டங்களிலும், விழுப்புரம் மாவட்டத்தின் வடக்கு பகுதிகளிலும் புயலின் தாக்கம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பகல் 6:30 மணி: செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து வெளியேற்றப்படும் நீரின் அளவு 5000 கன அடியாக உயர்த்தப்பட்டுள்ளது.
பகல் 6:00 மணி: இரவு 10 மணிக்கு மேல் சென்னைக்குள் வெளிமாவட்ட மக்கள் வருவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. பிரதான சாலைகள் மூடப்படும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.
பகல் 5:00 மணி: 16 மாவட்டங்களுக்கு நாளையும் பொது விடுமுறை அறிவிப்பு
பகல் 4:00 மணி: வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலகிருஷ்ணன் பத்திரிக்கையாளர்களை சந்திக்கிறார்.
பகல் 3:30 மணி: திருவாரூரில் சாய்ந்து போன மின்கம்பங்களை அகற்றும் பணியில் தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்றக் கழகத்தின் பேரிடர் மீட்புக் குழுவினர் ஈடுபட்டுள்ளனர்.
பகல் 3 மணி: கடலூர் மாவட்டத்தில் கடலோரப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் வெளியேற வேண்டும் என்று கடலூர் மாவட்ட ஆட்சியர் அறிவித்திருக்கிறார்.
செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து 1000 கன அடி நீர் திறந்து விடப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.
சென்னையில் தற்போதுவரை பெய்திருக்கும் மழை அளவின் விவரங்கள்:
நந்திவரம் கூடுவாஞ்சேரி ஏரியிலிருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளதால் கூடுவாஞ்சேரி, ஊரப்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் குடியிருப்புப் பகுதிகளில் தண்ணீர் புகுந்துள்ளது.
வங்கக் கடலில் காற்றழுத்தத் தாழ்வு நிலையாக உருவாகி புயலாக உருவெடுத்து தற்போது பாண்டிச்சேரிக்கும், சென்னைக்கும் இடைப்பட்ட பகுதியில் கரையை நோக்கி நகர்ந்து வந்து கொண்டிருக்கிறது. மணிக்கு 11 கி.மீ வேகத்தில் நகர்ந்து வந்து கொண்டிருக்கிறது. பெரும்பாலும் பாண்டிச்சேரி கடற்கரைக்கு அருகில் கரையைக் கடக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இன்று மதிய நிலவரப்படி, தற்போது புயலானது கடலூரில் இருந்து 180 கி.மீ தூரத்திலும், புதுச்சேரியில் இருந்து 190 கி.மீ தூரத்திலும், சென்னைக்கு 250 கி.மீ தூரத்திலும் இருக்கிறது.
கரையைக் கடக்கும் போது 150 கி.மீ-க்கும் அதிகமான வேகத்தில் காற்று அடிக்கும் என்று தற்போதைக்கு கணிக்கப்படுகிறது.
புயல் கரையக் கடக்கும்போது 6 மணி நேர அளவிற்கு இடைவிடாத மழைப் பொழிவு இருக்கும் என்று சொல்லப்படுகிறது. இதன் காரணமாக 40 செ.மீ அளவுக்கு வரை மழை பொழியலாம் என்று தெரிகிறது.
இன்று நள்ளிரவு அல்லது நாளை அதிகாலை நேரத்தில் கரையைக் கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் தமிழ்நாட்டின் வடக்கு மாவட்டங்களில் உள்ள மக்கள் வெளியில் வர வேண்டாம் என்று அரசினால் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.