புரெவி புயல் காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுவிழந்தது. புரெவி புயல் தெற்கு கேரளப் பகுதியை நோக்கி நகரும் என்பதால் உள் மாவட்டங்கள், வடமாவட்டங்களில் அதிகனமழை, கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும், சென்னையில் இன்னும் இரண்டு நாள் மிதமான மழை அல்லது கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது..
தற்போது பாம்பனுக்கு70 கி.மீ தொலைவில் புரெவி மையம் கொண்டிருக்கிறது என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
நேற்று இரவு 8.20 மணியளவில் ‘புரெவி’ புயல் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்தது. இன்று அதிகாலை 2.30 மணி நிலவரப்படி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் ராமநாதபுரத்தில் இருந்து தென் மேற்கே 40 கி.மீட்டர் தொலைவிலும், பாம்பனில் இருந்து தென்மேற்கே 70 கி.மீட்டர் தொலைவிலும், கன்னியாகுமரியில் இருந்து வடகிழக்கு பகுதியில் 160 கி.மீ. தொலைவிலும் நிலை கொண்டு இருக்கிறது. இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று அதிகாலையில் பல மணி நேரம் ஒரே இடத்தில் நிலை கொண்டிருந்தது. அதன்பிறகு அது மேற்கு தென்மேற்கு திசையில் சற்று நகரத் தொடங்கியது. எனவே ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் ராமநாதபுரம்- தூத்துக்குடி இடையே இன்று மதியம் கரையை கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்தது.
ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஒரே இடத்தில் நீடிப்பதால் தமிழகத்தில் தொடர்ந்து பலத்த மழை பெய்கிறது.
கடலூர் மாவட்டம் வீராணம் ஏரியில் இருந்து விநாடிக்கு 3,500 கன அடி வெளியேற்றப்படுவதால் சுற்றுவட்டார பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை . கடலூர் மாவட்டத்தில் தாழ்வான பகுதிகளில் இருந்து 35 ஆயிரம் பேர் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றம்.
கடலூர், டெல்டா மாவட்டங்களில் மழை பெய்யும் என்று வானிலை ஆய்வுமையம் தெரிவித்திருந்தது.
17 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்யும். வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
கடலுர் மற்றும் டெல்டா பகுதிகளில் அதிக மழை பெய்துள்ளது.
கொள்ளிடம் 36 செ.மீ
சிதம்பரம் 34 செ.மீ
பரங்கிப்பேட்டை 26 செ.மீ
மணல்மேடு 25 செ.மீ
குறிஞ்சிப்பாடி 25 செ.மீ
திருத்துறைப்பூண்டி 22 செ.மீ,
சீர்காழி 21 செ.மீ
குடவாசல் 21 செ.மீ உள்ளிட்ட இடங்களில் அதிகனமழை பதிவாகியுள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக ,புழல் ஏரியில் இருந்து முதற்கட்டமாக 500 கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளது. அதனால் வடிகால் பகுதிகளில் உள்ள மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கையும் விடப்பட்டுள்ளது.
புரெவி புயல் காரணமாக தமிழக அரசு கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, விருதுநகர், ராமாநாதபுரம் ஆகிய 6 மாவட்டங்களுக்கு நாளை விடுமுறை அறிவித்துள்ளது. விடுமுறைக்கு ஈடாக ஜனவரியில் ஒரு சனிக்கிழமை வேலை நாளாகும் என்று தெறிவிக்கப்பட்டுள்ளது.
புயல் பாதிப்புகளை ஆய்வு செய்ய மத்திய குழு நாளை தமிழகம் வருகிறது நான்கு நாட்கள் பயணமாக வரும் மத்திய குழு, 6 மற்றும் 7 ஆம் தேதிகளில் நிவர் புயல் பாதித்த பகுதிகளில் ஆய்வு செய்ய இருப்பதாக திட்டமிட்டுள்ளது.