- விவசாய சட்டங்கள் அமல்படுத்தப்பட்டால், ஒட்டுமொத்த இந்தியாவின் நிலைமை என்னவாகபோகிறது?
- நிலத்தை ஒரு பண்டமாக மாற்றி, பின்னர் விவசாயிகளிடம் இருந்து நிலத்தை அபகரிக்க முயற்சிக்கிறதா அரசு?
- விவசாய நிலங்கள் யார் யாருக்கு சொந்தமானவை என்ற முடிவுகளை எடுக்க அரசாங்கம் ஏன் முயல்கிறது?
- பன்னாட்டு முதலாளிகள் மூன்றாம் உலக நாடுகளின் விவசாய நிலங்களை கையகப்படுத்துவதில் ஆர்வம் காட்டுவதன் பின்னனி என்ன?
- பன்னாட்டு சில்லறை வர்த்தக நிறுவனங்கள் எப்படி விவசாயத்தில் இருந்து சிறு விவசாயிகளை வெளியேற்றப் போகிறது?
- உள்நாட்டு உணவு வர்த்தகத்தில் பன்னாட்டு கார்ப்பரேட் நிறுவனங்கள் எப்படி நுழைய போகிறது?
- விவசாயிகளின் ஊதியத்தை அரசாங்கம் இரட்டிப்பாக்கப் போகிறோம் என்று சொல்வதற்கான உள்நோக்கம் விவசாயிகளின் எண்ணிக்கையைப் பாதியாகக் குறைக்கவா?

போன்ற பல்வேறு கேள்விகளுக்கு மிக விரிவாக பதிலளிக்கிறது இந்நூல். விவசாய சட்டங்களால் தங்களுடைய நிலங்கள் பறிக்கப்படும் என்று டெல்லியில் போராடும் விவசாயிகள் சொல்லி வருவது அறியாமையினால் அல்ல. அவர்கள் அப்படி சொல்வதற்கான வலுவான பின்புலங்கள் இருப்பதனை இந்நூல் தீர்க்கமாக விளக்குகிறது. விவசாயிகளையும், விவசாயத்தையும் காத்திட அனைவரின் கைகளிலும் கட்டாயம் இந்நூல் இருக்க வேண்டும் என்ற நல்லென்னத்தில் மெட்ராஸ் ரிவ்யூ மக்கள் பதிப்பகம் இந்த புத்தக கண்காட்சியில் வெளியிடுகிறது.
நூல் : இந்தியாவின் உணவுச் சங்சிலியை அறுக்கும் விவசாய சட்டங்கள்
பதிப்பகம் : மெட்ராஸ் ரிவ்யூ மக்கள் பதிப்பகம்
விலை: ரூபாய் 60
சென்னை புத்தகக் கண்காட்சியில் கிடைக்கும் அரங்குகள்:
344, 345 – பூவுலகின் நண்பர்கள்,
500 – இறையகம்,
110 – அருவி,
312 – எழுச்சி,
95- யாவரும் பதிப்பகம்,
306 – கருப்பு பிரதிகள்,
81, 82 – புலம்
புத்தகத்தினைப் பெற தொடர்பு கொள்ளவும்: 7550090517