புயல் வெள்ள பேரழிவுகள் குறித்தும், இயற்கையினை எதிர்த்துப் போராடும் மனிதர்களின் புனைவுகள் குறித்துமான 10 முக்கிய திரைப்படங்கள் இங்கு பட்டியலிடப்பட்டுள்ளன.
Twister 1996
மிக சக்தி வாய்ந்த புயல் ஏற்படும்போது, விவாகரத்தின் விளிம்பில் உள்ள பேராசிரியர் டாக்டர் ஜோ ஹார்டிங் மற்றும் டோரதி இருவரும் தங்களை திரும்பவும் இணைத்துக் கொண்டு ஒரு மேம்பட்ட வானிலை எச்சரிக்கை முறையை உருவாக்குவது குறித்தான திரைப்படம்.
Night of the Twisters 1996
ஒரு நெப்ராஸ்கா பண்ணச் சமூகம் புயலால் பீடிக்கப்படும்போது தனது குடும்பத்தை பாதுகாக்கப் போராடுகிறாது. தாய் வேலையில் இருக்கும்போது தனது குழந்தைகளைப் பாதுகாக்க சகோதரர் ரியானை வீட்டில் நியமிக்கிறார். குடும்பத்தின் பல்வேறு உறுப்பினர்கள் வெவ்வேறு காரணங்களுக்காக வெளியே சென்று விடுகின்றனர். கடுமையான சூறாவளி தனது வீட்டை அழிக்கும்போது சிதறிக்கிடக்கும் குடும்பத்தை மீண்டும் ஒன்றிணைக்க முயற்சிக்கின்ற திரைப்படம்.
Hard Rain 1998
ஒரு பெரிய மழைக்காலத்தில் அணைகள் முறிந்ததால் கடுமையான வெள்ளத்தில் இந்தியானா நகரம் மாட்டிக் கொள்கிறது. எனவே மக்களை நகரத்தை விட்டு வேளியேற்ற அரசு முயற்சிக்கிறது. அந்த தருணத்தில் கவச கார் ஓட்டுநர் டாம் மற்றும் அவரது மாமா சார்லி ஆகியோர் நகரத்தின் வங்கிகளில் இருந்து பணம் சேகரித்து பாதுகாப்பாகக் கொண்டு செல்ல நியமிக்கப்படுகிறார்கள். அப்போது ஜிம் தலைமையிலான கொள்ளைக் கூட்டம் டிரக்கை முற்றுகையிட்டு 3 மில்லியன் டாலர்களை திருட முயற்சிக்கிறது. அப்போது டாம் அதைப் பாதுகாக்கப் போராடுகிறார். ஒரு இயற்கைப் பேரழிவு காலகட்டத்தில் மனிதர்களுக்குள் உள்ள முரண்பாடு, பகைமை மற்றும் துரோகம் குறித்து மிகத் துல்லியமாக சொல்லும் திரைப்படம்.
Storm 1999
ஆகஸ்ட் 23, 1992 ம் ஆண்டு ஜெனரல் ராபர்ட்ஸ் தலைமையில் பிளாக்-ஒப்ஸ் எனும் ஆராய்ச்சிக் குழு, வானிலையை கட்டுப்படுத்தும் ஒரு சாதனத்தை உருவாக்குகிறது. அந்த சாதனம் விமானத்திலிருந்து ஏவப்பட்டு முதன்முறையாக சோதிக்கப்படுகிறது. ஆனால் அந்த இயந்திரத்தின் கட்டுப்பாடு இழக்கப்படுகிறது. சில மணி நேரத்தில் ஒரு கொடிய சூறாவளி உருவாகி ஒரு மிகப்பெரிய இயற்கை பேரழிவாக மாறுகிறது. இந்த பேரழிவின் முடிவில் அந்த திட்டத்தின் அனைத்து ஆதாரங்களும் புதைக்கப்படுகிறது. ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு ஜெனரல் ராபர்ட்ஸ் அந்த உயர் ரகசியத் திட்டத்தை புதுப்பிக்கிறார். அதனால் ஏற்படும் சூறாவளி குறித்ததான திரைப்படம்.
The Perfect Storm 2000
1991-ம் அண்டு அக்டோபர் மாதத்தில் மிக மோசமான வானிலை காரணத்தால் வடக்கு அட்லாண்டிக்கில் மிக மோசமான புயல் உருவாகிறது. புயலில் சிக்கிய மீன்பிடிப் படகு ஆண்ட்ரியா கெயில் எப்படி கரையை வந்தடைகிறது என்பது குறித்தான திரைப்படம். புயலின் முன்அறிவிப்பு இல்லாமல் கடலுக்குச் செல்லும் மீன்பிடி படகுகள் கரைதிரும்ப சந்திக்க வேண்டிய போராட்டத்தை மையமாக வைத்து சாகசமாக எடுக்கப்பட்ட படம்.
Flood 2007
இங்கிலாந்தின் கிழக்கு கடல் பகுதியில் ஏற்பட்ட புயலின் விலைவாக கடல் சீற்றம் கொண்டு லண்டன் நகரத்தை நோக்கி வருகிறது. மில்லியன் கணக்கான லண்டன் மக்களின் உயிர்கள் ஆபத்தில் உள்ளன. சிறந்த கடல் பொறியாளர்கள் மற்றும் தடை வல்லுநர்கள் ராபர்ட் மோரிசன் அவரது முன்னாள் மனைவி சாம் மோரிசன் மற்றும் அவரது தந்தை பேராசிரியர் லியோனார்ட் மோரிசன் ஆகியோர் நகரத்தை பேரழிவில் இருந்து பாதுகாக்கும் போராட்டத்தை வெளிப்படுத்தும் திரைப்படம்.
Tidal wave 2009
பேராசிரியர் கிம், கடல் புவியியலாளர், கொரியாவின் தெற்கு கடற்கரையில் பிரபலமான விடுமுறை இடமான ஹூண்டேவுக்கு நேராக செல்லும் ஒரு மெகா சுனாமியின் ஆபத்தை முன்கூட்டியே அவதானிக்கிறார். அதிகாரிகளை எச்சரிக்கவும், இயற்கையின் அழிவை அறியாத விடுமுறையாளர்களை எச்சரிக்கவும் தீவிரமாகப் போராடுறார். ஒரு ஆய்வாளரின் பொறுப்பில் இருந்து சாமானிய மக்களைக் காப்பாற்றப் போராடும் உணர்வுகளை துல்லியமாக சொல்லும் திரைப்படம்.
Into the Storm 2014
எந்தவித முன்னெச்சரிக்கையும் இல்லாமல் திடீரென்று ஒரு நாள் சில்வர்டன் நகரம் சூறாவளியால் தாக்கப்படுகிறது. மேலும் மோசமான புயல் வர இருப்பதை கண்காணிப்பாளர்கள் கணித்துள்ள நிலையில் முழு நகரமும் மோசமான சீர்குலைவை சந்திக்க உள்ளது. பெரும்பாலான மக்கள் தங்குமிடம் தேடுகிறார்கள். மற்றவர்கள் எங்கு செல்கிறோம் என்று தெரியாமல் புயல் வரும் திசையை நோக்கி ஓடுகின்றனர். திடீரென்று ஏற்படும் இயற்கை சீற்றம் எப்படி மக்களின் இயல்பு வாழ்க்கையை நிலைகுலைய வைக்கிறது என்பதை காட்சிப்படுத்தும திரைப்படம்.
The Wave 2015
நோர்வேயின் ஜெய்ரேஞ்சர் ஃபோர்டில் அமைந்துள்ள மவுண்டன் பாஸ் Åkneset வீழச்சியடைந்ததால் 80 மீட்டருக்கும் உயரமான சுனாமியை உருவாக்குகிறது, இது கிரீன்லாந்தில் நிலத்தைத் தாக்கும் முன்பு அதன் பாதையில் உள்ள அனைத்து குடியிருப்புகளையும் நசுக்குகிறது. அந்த சுனாமியில் சிக்கிக்கொண்ட ஒரு புவியியலாளர் எப்படி தப்பிக்கிறார் என்பதை அடிப்படையாகக் கொண்ட திரைப்படம்.
Geostorm 2017
பேரழிவு தரும் காலநிலை மாற்றம் பூமிக்கு ஆபத்தை விளைவிக்கும் போது, உலக அரசாங்கங்கள் ஒன்றிணைந்து டச்சு பாய் (Dutch Boy) எனும் திட்டத்தை உருவாக்குகின்றன. உலகெங்கிலும் உள்ள செயற்கைக்கோள்கள், கிரகத்தைச் சுற்றியுள்ளவை, அவை இயற்கை பேரழிவுகளைத் தடுக்க வடிவமைக்கப்பட்ட புவிசார் பொறியியல் தொழில்நுட்பங்களுடன் ஆயுதம் ஏந்தியுள்ளன. மூன்று ஆண்டுகளாக கிரகத்தை வெற்றிகரமாகப் பாதுகாத்த பிறகு, ஏதோ தவறு நடக்கத் தொடங்குகிறது. உலகளாவிய புவிசார் புயல் கிரகத்தை மூழ்கடிப்பதற்கு முன்னர், இரண்டு சகோதரர்கள் திட்டத்தின் செயலிழப்பை தீர்க்கும் பணியில் ஈடுபடுவதை சொல்லும் படம்.