மத்திய பங்களிப்புத் திட்டங்களுக்கான ஒன்றிய அரசின் நிதிப் பங்களிப்பு குறித்து மாநிலங்களிடையே பல்வேறு விமர்சனங்கள் இருக்கிறது. மாநிலங்களுக்குரிய நிதியைக் கொடுக்க ஒன்றிய அரசு இத்தகைய திட்டங்களைப் பயன்படுத்தினாலும், அதனை தங்களது திட்டமென்றே விளம்பரம் செய்து கொள்கிறது. திட்டங்களுக்கான விளம்பரத்தை மட்டும் தேடிக் கொள்ளும் ஒன்றிய அரசு அதற்குரிய நிதியையாவது ஒழுங்காக கொடுக்கிறதா என்றால், இல்லை!
மேலும் பார்க்க செல்ஃபிக்கு உரிமை கோரலாமா பாஜக? கூட்டாட்சி எழுப்பும் முக்கியக் கேள்வி!Month: March 2023
புலம்பெயர் தொழிலாளர்கள் குறித்தான கேள்விகள்: தமிழ்நாட்டில் தேவை ஒரு கேரள மாதிரி ஆய்வு
தொடக்க நிலை முயற்சியாக தமிழ்நாட்டில் புலம்பெயர் தொழிலாளர்கள் பற்றிய ஆய்வும், கணக்கெடுப்பும் தேவையாக உள்ளது. கேரளாவில் அம்மாநில அரசே அதனை மேற்கொண்டது போல, தமிழ்நாடு அரசும் உடனடியாக அத்தகைய ஆய்வொன்றை மேற்கொள்ள வேண்டும்.
மேலும் பார்க்க புலம்பெயர் தொழிலாளர்கள் குறித்தான கேள்விகள்: தமிழ்நாட்டில் தேவை ஒரு கேரள மாதிரி ஆய்வுசமூக ஊடகங்களில் நடக்கும் தகவல் யுத்தம்; நாம் தெரிந்து கொள்ள வேண்டியது என்ன?
ஒரு தேர்தலுக்கு 20 ஆயிரம் கோடிகளுக்கு மேல் செலவு செய்யும் இடத்தில், மக்களின் சமூக நேரத்தை இவ்வளவு ஆக்கிரமிக்கும் சமூக ஊடகங்களின் மூலமாக மக்களைக் கைப்பற்றுவதற்காக எவ்வளவு ஆயிரம் கோடிகளை வேண்டுமானாலும் செலவு செய்வார்கள். இதற்குள்ளாகத்தான் ஃபேக் நியூஸ் பேக்டரிகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. நேர்மையாளர்கள், ஊடகவியலாளர்கள், அரசியல் பார்வையாளர்கள் விலைக்கு வாங்கப்படுகிறார்கள். ஃபேக் நியூஸ் ஃபேக்டரியின் அடுத்த பரிணாமமாக ஃபேக் சிட்டிசன் வரைக்கும் வந்து விட்டார்கள்.
மேலும் பார்க்க சமூக ஊடகங்களில் நடக்கும் தகவல் யுத்தம்; நாம் தெரிந்து கொள்ள வேண்டியது என்ன?இந்து தேசியத்தின் சர்வதேச வலைப்பின்னல்
அமெரிக்காவின் மேரிலாண்ட் நகரத்தில், 1989இல் தொடங்கப்பட்ட Indian Development and Relief Fund (IDRF) அமைப்பு சங் பரிவார அமைப்புகளுக்கு நிதி சேகரித்து அனுப்பி கொண்டு இருக்கிறது. ஆனாலும் இன்று வரை அந்த அமைப்பு அரசியல் சாராத, எந்த வித சார்புமற்ற , தொண்டு நிறுவனமாகத் தான் பதிவு செய்யப்பட்டு செயல்பட்டு வருகிறது. மொத்தம் 75 அமைப்புகளைக் கொண்ட IDRFஇல், 60 அமைப்புகள் சங் பரிவார அமைப்புகளுடன் தொடர்புடையவை.
மேலும் பார்க்க இந்து தேசியத்தின் சர்வதேச வலைப்பின்னல்7,000 தொழிலாளர்களைக் கொண்டு 5 நாட்களில் எழுப்பப்பட்ட பாஞ்சாலங்குறிச்சி கோட்டை – தமிழக தொல்லியல் அகழாய்வுகள் – 2
35 ஏக்கர் நிலப்பரப்பில் பறந்து விரிந்து கிடந்தது பாஞ்சாலங்குறிச்சி கோட்டை. கடுக்காய், கருப்பட்டியை பதனியில் குழைத்துக் கட்டப்பட்ட கோட்டை. பீரங்கியால் தாக்கினாலும் விரிசல் விழுமே தவிர இடிந்து விடாது. அவ்வளவு வலிமை கொண்ட கோட்டையை இடித்து தரைமட்டமாக்கி, இனி இப்படி ஒரு கோட்டை கட்டி விடக்கூடாது என்று கோட்டை இருந்த பகுதியில் விவசாயம் செய்ய வைத்தனர் ஆங்கிலேயர்.
மேலும் பார்க்க 7,000 தொழிலாளர்களைக் கொண்டு 5 நாட்களில் எழுப்பப்பட்ட பாஞ்சாலங்குறிச்சி கோட்டை – தமிழக தொல்லியல் அகழாய்வுகள் – 2