அமெரிக்கா - ஈராக்

அமெரிக்கா மீது வழக்கு தொடுக்கப் போகும் ஈராக்

அரபு நாடுகளில் அமெரிக்கா தடை செய்யப்பட்ட ஆயுதங்களைப் பயன்படுத்தியது போன்ற சர்வதேச குற்றங்கள் தொடர்பாக அமெரிக்கா மீது வழக்குத் தொடுக்கப் போவதாக ஈராக் தெரிவித்துள்ளது. மிகக் குறிப்பாக, தங்களது நாட்டில் பெருகும் புற்றுநோய்களுக்கு அமெரிக்கா பயன்படுத்திய கதிரியக்கத் தனிம ஆயுதங்களும் ஒரு காரணமென்பதைக் குறிப்பிட்டு இவ்வழக்கை தொடுக்கப் போவதாக ஈராக் குறிப்பிட்டுள்ளது.

மேலும் பார்க்க அமெரிக்கா மீது வழக்கு தொடுக்கப் போகும் ஈராக்
ஜூலியன் அசாஞ்சே

விக்கிலீக்ஸ் அமெரிக்காவை அம்பலப்படுத்தி தற்போது 10 ஆண்டுகள்

நவம்பர் 28, 2010 அன்று அமெரிக்காவின் ரகசிய கேபிள்களைக் கொண்ட 2,51,287 ஆவணங்கள் விக்கிலீக்சினால் வெளியிடப்பட்டன. அமெரிக்கத் தூதரகங்களிலிருந்து அரசு அலுவலகத்திற்கு அனுப்பப்பட்ட தகவல்களும் வெளியிடப்பட்டன. அமெரிக்காவின் வெளியுறவுக் கொள்கைகள் குறித்தான பல்வேறு திட்டங்களை அந்த கேபிள்கள் அம்பலப்படுத்தின. இது உலகம் முழுதும் பெரும் பரபரப்பை உருவாக்கியது. தற்போது 10 ஆண்டுகள் கடந்து இன்றும் அசாஞ்சே எனும் பெயர் அமெரிக்க அரசுக்கு அச்சம் தருவதாகவே இருக்கிறது.

மேலும் பார்க்க விக்கிலீக்ஸ் அமெரிக்காவை அம்பலப்படுத்தி தற்போது 10 ஆண்டுகள்